ஒருவகை விரக்தியுற்ற மனநிலையிலேயே இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன். அடித்துக்கொண்டிருக்கும் புயலில் சேர்ந்தே அடிபட்டுவிடும் என்று தெரிந்தும், என் மன ஆறுதலுக்காகவே இதைப் பதிகிறேன். நாட்கள் பல கடந்தும் இன்னும் எங்களை நாங்களே கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு மின்னஞ்சலிலோ, அல்லது ஒரு தொலைபேசி அழைப்பிலோ முடித்துவிடக் கூடிய பல தனிப்பட்ட பிரச்சினைகள் பதிவுலகில் பொதுவெளிக்கு இழுக்கப்படுவது இங்கே ஒன்றும் புதிதல்ல என்றாலும் , இப்போது கொஞ்சம் அதிகமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பதிவுகளை பலரும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பல இடங்களிலும் மார்தட்டிக்கொள்கிறோம். பதிவுகள் அச்சு எழுத்துக்களாக ‘நன்றி இணையம்’ என்பதைத் தாண்டியும் ஏறத்தொடங்கியிருப்பதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். எல்லாம் இருந்தும் என்ன, நாம் செய்துகொண்டிருக்கும் சில செயற்பாடுகள் திரும்பவும் ஆரம்பித்த இடத்துக்குத்தான் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன.
பிரச்சினைகள் இல்லாத இடங்கள் இல்லை. முடிந்தவரை சம்பந்தப்பட்டவர்களே அதனைப் பேசித் தீர்த்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்தது. அதைப் போதுவெளிக்குள் இழுத்து, பலரும் அதற்கு, தத்தமது வசதிக்கேற்ற பூச்சுக்களைப் பூசி, ஊதிப் பூதாகாரமாக்கி, பிரச்சினைகள் வளர்க்கப்படுகின்றனவே தவிர முடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
பதிவுலகம் எனக்கு பெரிய வாசிப்பனுபவம் ஒன்றைத் தந்திருக்கிறது. பல நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. என்னில் எனக்கே தெரிந்த பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. என் எழுத்துக்களையும் படிக்கிறார்கள் என்ற ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு கொடுத்தும் என்ன, இருக்கும் வன்மங்களால் பாரிய மன உளைச்சலையும், வெறுப்பையும் சேர்த்தே கொடுத்துவிட்டிருக்கிறது.
பதிவுலகம் ஒரு போதை. அதன் போதையை இன்னும் அதிகரித்துவிடுவதற்காகவே இருக்கின்ற, அண்மைக்காலத்தில் கொஞ்சம் மிகையாகவே பதிவுகளிலேயே பேசப்பட்ட ஓட்டுக்களின் எண்ணிக்கைகள், ஹிட்ஸ்கள், பின்னூட்டம், பிரபல இடுகை, பரிந்துரை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் இருக்கின்ற பதிவுலக பிரபலம் என்ற சொல் வரை தலைகால் புரியாமல் ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பிரபலம் என்ற வார்த்தை யார் வாயிலிருந்தாவது வந்துவிடாதா என்பதற்காகவே எத்தனையோ குறுக்கு வழிகளில் போய், காணாமல் போனவர்களும் பலர்.
பரந்த பதிவுலகில் நான் நேரில் சந்தித்து, நட்புப் பாராட்டிக்கொண்டிருப்போர் மிகச்சிலர். ஏனய, விரும்பிவாசிக்கும் பலரது எழுத்துக்கள்தான் அவர்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை மனதிலே ஏற்படுத்தியிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற பல பதிவர்கள், பதிவுகளை வாசிப்பவர்களும் இவ்வாறுதான். ஒருவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, அவற்றின்மூலம் உருவான ஏதோஒரு புரிதல், அவரை முதன்முதல் சந்திக்கும்போது தயக்கம் ஏதுமின்றி அளவளாவ முடிந்ததை உணர்ந்துமிருக்கிறேன். எனவே எழுத்துக்களால் உருவாக்கப்படும் பிம்பத்தை அதனாலேயே உடைத்துக்கொள்ள வேண்டாமே.
தயவுசெய்து குடும்பப் பிரச்சினைகள் தெருவுக்கு வேண்டாம், காரணம் நாங்கள் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
24 comments:
பதிவின் ஒவ்வொரு வரியோடும் ஒத்துப் போகிறேன்....
காலத்திற்கேற்ற பதிவு....
பதிவு சரியாகப் புரிந்துகொள்ளப்படின் இந்தப் பதிவே பலருக்கும் பாடமாக அமையும்.
எங்கும் ஒற்றுமை இல்லாவிடின் கஷ்ரம் தான்....
அரமையான பதிவுக்கு நன்றிகள் சுபா அண்ணா....
காலத்திற்கேற்ற பதிவு சுபாங்கன்....
நாம் அனைவரும் இந்த நேரத்தில் வாசிக்க வேண்டியது..
http://consenttobenothing.blogspot.com/2010/06/blog-post.html
LOSHAN
http://arvloshan.com/
உண்மை தான் சுபாங்கன்.. எல்லோரையும் இந்த வேண்டாத சர்ச்சை அசிங்கப் படுத்தி இருக்கிறது..
எல்லோரும் ஒரு விதத்தில் குழம்பி வேதனையோடும் அவமானத்தோடும் இருக்கிறோம்..
ஆனால் இதுவும் கடந்து போகும்..
மனதில் தெளிவு இருப்போர்,மடியில் கனமில்லாதோர் கலங்கத் தேவையில்லை..
இது தான் நான் எனக்கும் என் நண்பர்களுக்கும் சொல்வது..
போலிகளையும் பொய்களையும் ஒதுக்கிவிட்டு (ignore them)உடலில் பட்ட சேற்றையும் தட்டிவிட்டு வாருங்கள்.. தொடர்ந்து நடப்போம்.. :)
LOSHAN
http://arvloshan.com/
ஆமாம்... அடுத்தவன்ட பிரச்சினைக்கு தீர்வுகாணப்போனா அவன் குடும்பத்தில எல்லாரையும் சண்டைபிடிக்கவைக்கப்பாக்கிறான்.
பிழைசெய்தால் மன்னிப்புக்கோரி பிரச்சினையை முடிக்கலாம், எல்லாரும் விஜயகாந் அல்ல மன்னிப்பு பிடிக்காதென்று கூற..ஹிஹி
காலத்திற்கேற்ற பதிவு அண்ணே..;)))
புரிய வேண்டியவர்கள் இந்தப் பதிவை படிப்பார்களா?
அன்புடன் சுபாங்கனுக்கு,
///ஒருவகை விரக்தியுற்ற மனநிலையிலேயே இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன். அடித்துக்கொண்டிருக்கும் புயலில் சேர்ந்தே அடிபட்டுவிடும் என்று தெரிந்தும், என் மன ஆறுதலுக்காகவே இதைப் பதிகிறேன்.///////
இப்படியான ஒரு மனநிலைதான் தனியே முடித்துவிடக்கூடிய ஒரு பிரச்சனையை ஒரு மடலாடற் குழுவிலும், பதிவுகளிலும் பிரச்சனையை கொண்டுவருவதற்கான அடிப்படை காரணியாக இருப்பது. ஆம்மனநிலைதனிப்பட்ட இருவர் அல்லது சிறுகுழுவிற்கிடையான பிரச்சனைகளை இலங்கை வலைப்பதிவர்களிடையான பிரச்சனையாக பூதாகரமாக்கி அவர்களை பிரித்துவைத்துவிடுகின்றது. தமிழருக்கு இயல்பாகவே வந்த கலையிது.
////இப்போது கொஞ்சம் அதிகமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது/////
இல்லை. ஆனால் இலங்கை பதிவரிடையே இதுதான் முதல்முறை என எண்ணுகின்றேன். வேகமாக வளர்ச்சியடைந்த பதிவர்களின் எண்ணிக்கையும் காரணமாகலாம்.
////////அதன் போதையை இன்னும் அதிகரித்துவிடுவதற்காகவே இருக்கின்ற, அண்மைக்காலத்தில் கொஞ்சம் மிகையாகவே பதிவுகளிலேயே பேசப்பட்ட ஓட்டுக்களின் எண்ணிக்கைகள், ஹிட்ஸ்கள், பின்னூட்டம், பிரபல இடுகை, பரிந்துரை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் இருக்கின்ற பதிவுலக பிரபலம் என்ற சொல் வரை தலைகால் புரியாமல் ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன. /////////
மிகவும் உண்மை. ஆனால் இந்த ஓட்டுகள், ஹிட்சுகள் எல்லாம் தேவையில்லை, எனது விருப்பிற்காகவே எழுதுகின்றேன் என்கின்ற மனநிலை சில காலத்தில் ஏற்பட்டு அவர்கள் விலக, புதியவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுடன் களமிறங்குகின்றார்கள். சூடுபட்டு விலகியிருந்து வாசிக்கும் எமக்கு தொடர்ந்து தலைவலிதான். மயூரேசனின் 'குழாயடி சண்டை' என்பது அப்படியான ஆற்றாமையால் வந்த வார்த்தை பிரயோகம் என்றே நம்புகின்றேன்.
///// எனவே எழுத்துக்களால் உருவாக்கப்படும் பிம்பத்தை அதனாலேயே உடைத்துக்கொள்ள வேண்டாமே////
உங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்குண்டா எனத்தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து எழுத்தினை மட்டும் வைத்து அவரைப்பற்றிய பிம்பமொன்றை உருவாக்கிவிடாதீர்கள். அனேகமாக ஏமாந்து போய்விடுவீர்கள்.
அன்புடன்,
ஊரோடி பகீ.
அனைவரும் புரிந்துகொண்டால் நலமே !
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி
உங்களுடைய ஆதங்கம்தான் பலருக்கும்(நான் உட்பட) தற்போது இருந்து கொண்டிருக்கின்றது. ஜதார்த்த பூர்வமான பதிவொன்றினை பதிந்திருக்கின்றீர். முடிந்தது முடிந்துவிட்டது. இனி அதைப்பற்றி தொடர்ந்து கதைப்பதாலோ அல்லது பதில்கருத்துக்களை இட்டுக்கொண்டிருப்பதாலோ எவ்வித பயனும் இருக்க போவதில்லை. லோஷன் அண்ணா கூறியதுபோல தொடர்ந்து நடப்போம் வாருங்கள்...
வதீஸ்.
அங்கையுமா?. :(
சுபா....நல்ல தெளிவாய் எழுதியிருக்கீங்க.ஆனா சரியாப் புரிஞ்சுகொள்ளுவினமோ !
ம்...! காலத்துக்கேற்ற பதிவு. லோஷன் அண்ணா சொன்னதைத் தான் சொல்லுவேன். உங்கள் மடிகளில் கனம் இல்லாத போது கவலைகளை விட்டெறிந்து உங்கள் பாதையிலேயே செல்லுங்கள்...! நாம் சிந்திக்க செயலாற்ற சாதிக்க நிறையவே இருக்கின்றது... ;)
பகீயை வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.
சுபாங்கன் யார் என்ன சொன்னாலும் நம்ம பாட்டுக்கு எமக்குத் தெரிந்தவற்றை எழுதிக்கொண்டிருப்போம். அது மொக்கையாக இருந்தாலும் ரசிப்பவர்கள் ரசிக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.
எங்கள் தலைவர் கவுண்டரில் பாசையில் சொல்வதென்றால் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. அதே படத்தில் அடுத்த வரியைச் சொன்னால் சிக்கலாகிவிடும் ஆனால் அதுதான் உண்மை.
போலிகளையும் பொய்களையும் ஒதுக்கிவிட்டு (ignore them)உடலில் பட்ட சேற்றையும் தட்டிவிட்டு வாருங்கள்.. தொடர்ந்து நடப்போம்.//
ம்..ம் .. எங்கயாவது நல்லது நடந்தால் நாலு பிரச்சனையும் வரத்தான் செய்யும்.. பக்கத்து வீட்டில நடக்குற அக்கப்போர விட நாம பரவால்ல..தேர் இன்னும் தெருவுக்கு வரல்லல...திருவிழாவ சீக்கிரம் முடிச்சிட்டு ...தொடர்ந்து நடப்போம்...
ம்ம்ம்... பகீ பின்னூட்டம் யோசிக்கவைக்குது.
அண்மைய பிரச்சினைகள் எனக்கு நிறைய கற்றுத்தந்திருக்கிறது... பிரச்சினையின் மாறு கணங்களில், சாதாரண மனிதனாய் நட்புக்களுக்காக பொறுமை காக்கும் அதீத பக்குவத்தைத் தந்திருக்கிறது.
பிரச்சினைகள் வருவதை இன்னும் விரும்புகிறேன். ஆனால் ஒரே பிரச்சினை திரும்ப வருவதையல்ல.. பிரச்சினை ஒன்று தேவையற்று நீண்டு செல்வதையல்ல.
௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲௲
வானம்பாடி... வீட்டுக்கு வீடு வாசல்படி.. எல்லாரும் மனிதர்கள்தானே..
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
////பதிவுலகம் என்பது வரைமுறைகள் அற்றது. யாரும் எழுதலாம். கருத்துக்களை முன்வைக்கலாம். கோபித்துக்கொண்டு செல்லலாம். வேறு ஒரு பெயரில் மீண்டும் வரலாம். யாரையாவது திட்டித் தீர்ப்பதற்காக புதிய தளங்களை உருவாக்கலாம்////
மேற்குறிப்பிட்ட வரிகள் என்னுடைய இறுதிப் பதிவில் வருபவை. அதனையே மீண்டும் சொல்ல நினைக்கிறேன்.
வரையறையற்ற பதிவுலகத்துக்குள் சஞ்சலங்களும், சலசலப்புக்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவற்றை பெரியளவில் உள்வாங்கிக் கொள்ளாமல் செல்வதுதான் சிறப்பு.
//தேர் இன்னும் தெருவுக்கு வரல்லல..//
ஹிஹி ஆனா தேரின்ட வடத்தைப் பிடிச்சு தேர் நிக்கிற இடத்தைப் பாத்திட்டம்..:P
நல்ல பதிவு தல..
நல்ல அவசியமான பதிவு தேவையான நேரத்தில்.பிரச்சனைகளில் தான் நாங்கள் நம்மை மீட்டுப்பார்க்க முடிகிறது மற்றவர்களையும்....
நானும் சொல்கிறேன் திடமாக நாம் இருப்பதால் கனமாக இருக்கிறோம் நட்பு வளருகிறது. இது போதும்
நட்பு,
பாசம்,
அன்பு,
காதல்,
உண்மை
நிரந்தரம்
இதுவே வாழ்க்கை
சரித்திரம்
டேக் இட் ஊர்வசி பாடல் கேளுங்கள்
பதிவுலகம் ஒரு போதை. அதன் போதையை இன்னும் அதிகரித்துவிடுவதற்காகவே இருக்கின்ற, அண்மைக்காலத்தில் கொஞ்சம் மிகையாகவே பதிவுகளிலேயே பேசப்பட்ட ஓட்டுக்களின் எண்ணிக்கைகள், ஹிட்ஸ்கள், பின்னூட்டம், பிரபல இடுகை, பரிந்துரை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் இருக்கின்ற பதிவுலக பிரபலம் என்ற சொல் வரை தலைகால் புரியாமல் ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன.
கையை குடுங்கண்ணா. யாராவது இதை எழுதுவங்கன்னு காத்துக்கிட்டுருந்தேன். அப்படியே சொல்லிட்டீங்க. சபாஷ்.....
இந்தப் பிரபலம் என்ற வார்த்தை யார் வாயிலிருந்தாவது வந்துவிடாதா என்பதற்காகவே எத்தனையோ குறுக்கு வழிகளில் போய், காணாமல் போனவர்களும் பலர்.
ஓ.கே. ரைட்டு டபுள் விசில்.......
//நாங்கள் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.//
கோபத்தின் உச்சங்களில் மதி குறைந்துவிடும் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கின்றார்கள்.
இறுதிவரிகள் நச்சென்று உறைக்கின்றது.
காலத்துக்கு ஏற்ற பதிவு அண்ணா!
தாமத வருகைக்கு மன்னிக்கவும்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். பகீ அண்ணா, யோசிக்கவைத்துவிட்டீர்கள்.
//நாங்கள் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.//
Post a Comment