ஞாபகங்கள்
ஞாபகங்களில் மட்டும் – இன்னும்
மாறாமல் இருக்கிறது…
வரலாறும், புவியியலும்!
வேறுபாடு
ஊர் பெயர் கேட்டுவிட்டு
உயர்த்தும் உன் புருவங்களால்
புரிந்துகொள்கிறேன் நண்பா – உன்னிலிருந்து
எனக்குள்ள வேறுபாடு..!
முற்றுப்புள்ளி
அந்தக்கால உதாரணங்களுடன்
அமரிக்காவையும் சேர்த்துவிட்டு
முற்றுப்புள்ளியிடுகிறேன்.
விதிவிலக்காகிவிட
நீ ஒன்றும் இயேசுவல்லன்..!
புத்தனுமல்லன்..!!
இன்று… இப்படி…
நாடு கடந்து வந்த காசில்
நான்கு அறை வீடு
இளைப்பாறக் கொடுப்பதற்காய்
இப்போதுதான் பொருத்தப்பட்ட ஏ.சி
முற்றத்தில் காவிவந்த பேருந்து
இருபுறமும் பூந்தோட்டம்
பக்கத்துவீட்டுப் பார்வை தவிர்க்க
ஆளுயர மதில்
அழகிய படலை
அதற்கும் வெளியில் – ஒரு
பற்றைக்காணி
17 comments:
அருமை...;)
நன்று
ம்ம்ம்ம்....
.
விதிவிலக்காக
இயேசு புத்தன்
நீயல்ல நான்
இட்ட
.
நல்லா இருக்கு
வாவ். கடைசி கவிதைல மட்டும் சில வார்த்தைகள் புரியல. இருந்தாலும் கவிதை புரியுது. :)
/பக்கத்துவீட்டுப் பார்வை தவிர்க்க
ஆளுயர மதில்
அழகிய படலை
அதற்கும் வெளியில் – ஒரு
பற்றைக்காணி/
ம்ம். எல்லாமே அருமை
எளிமையான கவி நடை. முதல் மூன்று கவிதைகளும் இரு ஒரு கவியில் இரு பொருளைச் சுட்டுகின்றன. கவிதையின் உள்ளடக்கமும், அதனைக் கருப் பொருளாக்கிச் சொல்லுகின்ற விதமும் நன்றாகவுள்ளன. இறுதிக் கவியில் நன்றாக அனுபவ முதிர்வு தெரிகிறது.
இறுதிக் கவியில் எங்களூரின் யதார்த்த வார்த்தைகளை ஒரு சில வரிகளுக்குள் உள்ளடக்கியுள்ளீர்கள்.
தொடர்ந்தும் நிறையக் கவிதைகள் தருக.
சுபாங்கன் நீங்கள் யாழ் இந்து தானே?
மகோதரனை தெரியுமோ?
"காதல் வந்தால் கவிதை வரும்" சொல்றாங்க!
//கமல் said...
சுபாங்கன் நீங்கள் யாழ் இந்து தானே?
மகோதரனை தெரியுமோ?//
இந்த கேள்வியை என்னிடம் கேட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்,
ஞாபகங்களில் மட்டும் – இன்னும்
மாறாமல் இருக்கிறது…
வரலாறும், புவியியலும்!
நன்றாக சொன்னீர்கள் சுபாங்கன் நீண்டநாடகளுக்கு பிறகு உங்கள் கவிதைகள் ரசித்தேன்
கவிஞர் சுபாங்கன்.. ம்ம்ம்ம் :)
நல்லா இருக்கு
நல்லயிருக்கு...
நன்றி பவன்
நன்றி சதீஷ்
நன்றி ரமேஷ் அண்ணா, அப்படியா? :)
நன்றி கார்த்திக், அது கொஞ்சம் நம்ம ஊரு பாஷை.
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி கமல், மகோதரன் எனது வகுப்புத்தான்
காதல் வந்தால் காதல் கவிதைதானே வரும் வரோ? விடுடா, இனிமே உன்னையும் கேட்பார்.
நன்றி டாக்டர்
நன்றி லோஷன் அண்ணா
நன்றி றியாஸ்
அருமை சுபாங்கன்
வேறென்ன சொல்ல வாழ்த்துக்கள்
அருமை நண்பா.
அனைத்தும் அருமை சுபாங்கன்..
கலக்கல் சுபா அண்ணா... :)
பெரும்பாலும் விளங்குகிறது....
அமெரிக்காக் கவிதையைத் தவிர மற்றையவை விளங்குகின்றன....
அதுவும் கடைசிக் கவிதை அருமை....
தொடர்ந்து கலக்குங்கள்.... :))))
சுபாங்கன் அண்ணா புரிந்தும் புரியாமலும் இருக்கிறது! ஆனால், நன்றாகவே இருக்கிறது
ஊர் வாசனையோட கவிதை நல்லாயிருக்கு சுபா.
Post a Comment