Saturday, May 1, 2010

சுறா – சூப்பர்ப் படம்பா


 

711_20100305_53449400_sura-poster-2

 

இளைய தளபதி விஜய் நடித்து, உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுறா திரைப்படத்தை ஓசி டிக்கெட்டில் பார்க்கும் ஒப்பற்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பக் காட்சி முதலே இளைய தளபதி விஜயின் ஆர்ப்பாட்டம்தான். அறிமுகக் காட்சி இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாதது. அதில் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியவாறே இளைய தளபதி விஜய் டைவ் அடித்து வரும் காட்சியைப்பார்த்த நீச்சல் உலக சாதனையாளர் மைக்கல் பிலிப்ஸ், இளைய தளபதி விஜயைத் தொடர்புகொண்டு அவ்வகை நீச்சலின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டதிலிருந்தே அதன் கனதியை அறியமுடியும்.

படத்தில் இளைய தளபதி விஜய் பிறந்து, வளர்ந்து, போராடிக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கிராமத்தின் பெயர் யாழ்நகர். இப்படியான ஒரு காவியத்தில் இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு அருமையாகக் கையாண்டிருப்பது படத்தின் சிறப்புக்கு ஒரு சோறு பதம். யாழ்நகர் குப்பத்தின் குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் இளைய தளபதி விஜய் இனி அந்தக் குப்பத்துக்கு மட்டுமல்ல, இலங்கை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்குமே தெய்வம் போலத்தான்.

 vijaynewatmstillsn08-8x6

படத்தின் நாயகி தமன்னா. பாசத்துடன் வளர்த்த நாய் காணாமல் போனதற்காகவே தற்கொலை பண்ண முயற்சிப்பதும், பின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் சொல்லாமலேயே, அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயற்சிப்பதும் அவரது இளகிய உள்ளத்தினை எடுத்துக்காட்டும் காட்சிகள். இரண்டாம் முறை தற்கொலைக்கு முயற்சிப்பவரை விஜய காப்பாற்றியபின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் கூறுகிறார். அப்போது தியேட்டரில் இருந்து இதற்கு தற்கொலையே மேல் என்று யாரோ ஒருவர் கத்தியது சத்தியமாக ரசிக்க முடியாத ஒன்று. இளைய தளபதி விஜயும் தமன்னாவை ஏற்றுக்கொண்டபிறகு வரும் டூயட் பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவாறு புதுமையாக, காதலைப் பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

காமெடிதான் படத்துக்கே பெரும் ப்ளஸ். ஒரே காட்சியில் வந்துவிட்டுப் போகும் கவுண்டமணி, செந்தில் ஜோடி, படம் முழுவதும் நினைத்து நினைத்துச் சிரிக்குமளவிற்கு காமெடி பண்ணிவிட்டுப் போகிறார்கள். அதற்குமுன் வடிவேலு அடிவாங்கும் காமெடிகளை ரசிக்க முடியவில்லை.

பின்னணி இசை படத்துக்குப் பெரும் பக்கபலம். படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் பின்னணி இசையை நிறுத்தி, வசனங்களை செவிமடுக்கவிட்டிருப்பது புதுவகை யுக்தி. ஆனாலும் படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் பஞ்ச் டயலாக்கே பேசிக்கொண்டிருப்பதால் பின்னணி இசை இருக்கும் நிமிடங்கள் மிகக் குறைவாகவே இருப்பது வருத்தம்தான்.

வடிவேலு, இளைய தளபதி விஜய் பேசிக்கொள்ளும் காட்சியினூடு றீமேக் படங்களை கலாய்ப்பது, தொடர்ந்து றீமேக் படங்களையே நம்பிக்கொண்டிருப்போர்க்கு செருப்படி. அத்துடன் படத்தின் பெரும்பாலான பாடல்க்காட்சிகளில் கால்சட்டையுடனேயே வந்துபோகும் தமன்னாவை, தஞ்சாவூரு ஜில்லாக்காரி பாடலில் தமன்னாவின் கால்சட்டையை மட்டும் ஆடவிட்டு விஜய் கலாய்ப்பதும் அழகு. இப்படியான காட்சிகள், தமிழ்ப்படம் போன்ற இன்னுமொரு ஸ்கூப் படம்தான் சுறாவோ போன்ற எண்ணப்ப்பாட்டை ரசிகர்கள்மத்தியில் அவ்வப்போது விதைக்கின்றன.

CS_83_29

குப்பத்துத் திருவிழாவில் இளைய தளபதி விஜயை வெள்ளைக்காரிகளுடன் ஆடவிட்டு, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான் எவ்வகையிலும் சளைத்தவர் இல்லை என்று காட்டியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமார் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமைகளுப் புகுத்தி, எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிறார். கஷ்டம் அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், அவரை யாராலும் அடையாளமே காணமுடியாதவாறு செய்திருப்பதும், வெறும் பட்டாசுகளைக்கொண்டே, றாக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குவதுபோல வில்லன் கூட்டத்தை நம்பவைப்பதும், பராசக்தி படத்தில் இருந்ததற்கு நிகராக நீதிமன்றில்  இளைய தளபதி விஜய் பேசும் வசனங்களும் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.

மொத்தத்தில் சுறா – சூப்பர்ப் படம்பா

33 comments:

Bavan on May 1, 2010 at 3:15 PM said...

//சுறா – சூப்பர்ப் படம்பா//

என்னாதுதுது?? #அதிர்ச்சி

//குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் இளைய தளபதி விஜய்//

கல்வீடு கட்டிட்டுத்தாண்டா கல்யாணம் பண்ணிக்குவன் என்று பஞ்ச் பேசுறாரோ???..:p

// நாய் காணாமல் போனதற்காகவே தற்கொலை பண்ண முயற்சிப்பதும்//

என்னாதுது?? நாய்க்காக தற்கொலையா?

//தனது காதலை இளைய தளபதி விஜயிடம் சொல்லாமலேயே, அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயற்சிப்பதும்//

அப்ப விஜயை நாய் என்கிறீர்களா விளக்கவும்...:p

//தமன்னாவை ஏற்றுக்கொண்டபிறகு வரும் டூயட் பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவாறு புதுமையாக, காதலைப் பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது//

வி.தா.வ வில் மன்னிப்பாயாவை விட கலக்கலாக இருக்கிறதாம்...:p

// படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் பின்னணி இசையை நிறுத்தி, வசனங்களை செவிமடுக்கவிட்டிருப்பது புதுவகை யுக்தி.//

நல்லாக் குடுக்கிறாய்ங்கய்யா டீடேலு...அவ்வ்வ்...

//தொடர்ந்து றீமேக் படங்களையே நம்பிக்கொண்டிருப்போர்க்கு செருப்படி//

அப்ப 3இடியட்ஸ் என்பது விஜயின் சொந்தக்கதை எண்டுறீங்க..:p

//கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான் எவ்வகையிலும் சளைத்தவர் இல்லை என்று காட்டியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமார் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமைகளுப் புகுத்தி, எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிறார்.//

ஆஹா.. ஆஹா... I JUST... CAN'T BELIEVE THIS..:p

//கஷ்டம் அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், அவரை யாராலும் அடையாளமே காணமுடியாதவாறு செய்திருப்பதும்//

இது
கஷ்டம்.....அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், இப்படி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..:p

ஏனுங்ணா.. அப்ப படத்தைப்பாத்துடலாங்குறீங்க... செ காமடிப்படமுங்கிறீங்க அப்படித்தானேங்ணா...

அப்ப நான் வரேஹ்ணா...பாய்ங்ணா...

நிரூஜா on May 1, 2010 at 3:49 PM said...

சப்பா....! இப்பவே கண்ணை கட்டுதே....!

கன்கொன் || Kangon on May 1, 2010 at 4:07 PM said...

:)))

தளபதி வாழ்க...

balavasakan on May 1, 2010 at 4:36 PM said...

அப்பிடியா அப்ப இன்னொரு தடவை பார்த்துடலாங்கிறீங்க...

Subankan on May 1, 2010 at 4:37 PM said...

அண்ணே, கமண்ட் அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு 100 தடவை யோசிச்சு கமண்ட் அடிங்க அடிச்சிட்டீங்க அப்புறம் அதை திருப்பி அடிக்கவே முடியாது...:p

கன்கொன் || Kangon on May 1, 2010 at 4:39 PM said...

யோவ் சுபா அண்ணா...

பவன் மூஞ்சிப்புத்தகத்தில போட்டத அப்பிடியே பிரதி பண்ணி இங்க போடுறியள்?
விசய் படம் பாக்கப் போகாதேங்கோண்ணு சொன்னன், கேட்டியளா?

Subankan on May 1, 2010 at 4:41 PM said...

பவனிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கிட்டுத்தான் கொப்பி அடிச்சதே
(அது பின்னூட்டத்தை எண்டு தெளிவாச் சொல்லுப்பா, பாக்கிறவங்க தப்பா புரிஞ்சுக்கப்போறாங்க :p)

கன்கொன் || Kangon on May 1, 2010 at 4:42 PM said...

ha ha... :D

பின்னூட்டம் தான் மக்கேள... தப்பாப் புரிஞ்சுக்கப்படாது.... ;)

Kolipaiyan on May 1, 2010 at 5:10 PM said...

முடியல....! ஏன் ? எதுக்காக ?

இங்கேயும் வந்து பாருங்க

http://kolipaiyan.blogspot.com/2010/04/blog-post_30.html

anuthinan on May 1, 2010 at 5:32 PM said...

விஜய் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் பார்ப்பதும் இதுதான் முதல் தடவை!!!!
எல்லா புகழும் தமிழ் படத்துக்குத்தான்

Subankan on May 1, 2010 at 5:37 PM said...

// Anuthinan said...
விஜய் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் பார்ப்பதும் இதுதான் முதல் தடவை!!!!
எல்லா புகழும் தமிழ் படத்துக்குத்தான்
//

தலைப்பை மட்டும் பாத்துட்டடு பின்னூட்டம் போட்டதும் நீங்க மட்டும்தான் :P

கன்கொன் || Kangon on May 1, 2010 at 5:38 PM said...

2 பேர் இதுவரை தலைப்பைப் பாத்திற்று பின்னூட்டியிருக்கிறாங்க எண்டு நம்புறன்.... :)))

balavasakan on May 1, 2010 at 5:55 PM said...

இல்லை கோபி முழுக்க படிச்சிடுத்தான் சொல்றேன் பரீட்சை இப்பதான் முடிஞ்சுதா அதான் கிட்னிய பத்து நாளைக்கு கழற்றி வைச்சிருக்கன் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கிறேன் வாரீங்களா....!!!

ARV Loshan on May 1, 2010 at 6:12 PM said...

சுபாங்கன் - நீங்க நல்லவரா? இல்லையா?
நான் சொன்னது போல சுறா .. சூ... தானே? ;)

என் விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு முக்கியமான விடயங்களை விட்டு விட்டேன்..
தாடி விஜய், வெள்ளைக்காரி ஆட்டம்.. ;)

கன்கொன் || Kangon on May 1, 2010 at 6:14 PM said...

:)))

அடடே...
நாம எப்பவுமே அப்பிடித்தான் பாலா அண்ணே... ;)

எண்டாலும் நெருப்பு சுடும் எண்டு தெரியாம கைவைக்கிறது வேற, வளர்ந்தாப் பிறகு சுடும் எண்டு தெரிஞ்சாப்பிறகு சுபாங்கன் அண்ணாவப் போல மற்றவன் நெருப்பு எண்டு கைவைக்கிற அளவுக்கு நான் றிஸ்க் எடுக்கிறவன் இல்ல...

Subankan on May 1, 2010 at 6:16 PM said...

//LOSHAN said...
சுபாங்கன் - நீங்க நல்லவரா? இல்லையா?//

என்ன இது? இதில போய்ச் சநெதேகம் வரலாமா?

//
நான் சொன்னது போல சுறா .. சூ... தானே? ;)
//

அதேதான், அதேதான்

//
என் விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு முக்கியமான விடயங்களை விட்டு விட்டேன்..
தாடி விஜய், வெள்ளைக்காரி ஆட்டம்.. ;)//

அடடா, முக்கியமானதை கவனிக்கலயே

வந்தியத்தேவன் on May 1, 2010 at 6:16 PM said...

விழுந்தும் மீசையில் மண்படவில்லை ஹிஹிஹி. சூப்பர்ப்படம் என்பதால் விரைவில் தொலைக்காட்சிகளில் வரும் என நினைக்க்கின்றேன்.

கன்கொன் || Kangon on May 1, 2010 at 6:20 PM said...

{{ விழுந்தும் மீசையில் மண்படவில்லை }}

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்.
எனக்கு பழமொழி தெரியாதா?
இல்லாட்டி எங்கட ஆக்கள் உதுக்கு புது அர்த்தம் கண்டுபிடிச்சிற்றாங்களா?
இல்ல உது ஏதும் பின்நவீனத்துவமா?

சில பின்னூட்டங்கள் எனக்கு விளங்குதில்ல...

யாராவது விளக்கம் தரவும்.

Subankan on May 1, 2010 at 6:21 PM said...

எனக்கும் அதேதான் கோபி, பின்னூட்டமிட்டவர்களே வந்து விளக்கம் கொடுத்தால்தான் உண்டு

KANA VARO on May 1, 2010 at 7:06 PM said...

முடியல... நீங்களாவது நம்ம தளபதிக்கு சார்பா எழுதினீங்களே! ஹீ ஹீ...

Subankan on May 1, 2010 at 7:08 PM said...

ஆமாமா, படத்துக்கு நான் ஃபுல் சப்போட் வரோ, இப்படியொரு காவியம் இனிக் கிடைக்குமா?

anuthinan on May 1, 2010 at 7:52 PM said...

//Subankan on May 1, 2010 5:37 PM said...
// Anuthinan said...
விஜய் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் பார்ப்பதும் இதுதான் முதல் தடவை!!!!
எல்லா புகழும் தமிழ் படத்துக்குத்தான்
//

தலைப்பை மட்டும் பாத்துட்டடு பின்னூட்டம் போட்டதும் நீங்க மட்டும்தான் :p//


அண்ணா சொன்னது புரியவில்லையா??? மறுபடியும் சொல்லுகிறேன்!!! இப்படி ஒரு விமர்சனத்தை பார்த்ததும் இல்லை....இப்படி ஒரு படத்தை பார்க்க போவதும் இல்லை

vasu balaji on May 1, 2010 at 8:27 PM said...

பாவி மக்கா! இப்படி எல்லாரும் கோணிய சுத்தி அடிச்சா ஒரு மனுசன் நடிக்கிறதா வேணாமா:)))

Bavan on May 1, 2010 at 9:31 PM said...

// Subankan said...
பவனிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கிட்டுத்தான் கொப்பி அடிச்சதே //

கொப்பி ரைட்ஸ் கமிசன் இன்னும் வாங்கவில்லை..:p

// Subankan said...
ஆமாமா, படத்துக்கு நான் ஃபுல் சப்போட் வரோ, இப்படியொரு காவியம் இனிக் கிடைக்குமா?//

ஆமா ஆமா... சேரனுக்கு ஆட்டோகிராப்,
சிம்புவுக்கு வி.தா.வ
சிவாஜிக்கு வசந்த மாளிகை,
ரஜனிக்கு பாட்சா,

அந்த வகையில் தளபதிக்கு சுறா..சுறா.. சுறா...(படிக்கும் போது தலையை வெடுக் வெடுக் என்று மூன்று முறை திருப்பவும்)

Subankan on May 1, 2010 at 9:37 PM said...

//அந்த வகையில் தளபதிக்கு சுறா..சுறா.. சுறா...(படிக்கும் போது தலையை வெடுக் வெடுக் என்று மூன்று முறை திருப்பவும்)//

முடியலடா

ஜெட்லி... on May 1, 2010 at 10:07 PM said...

:))

sellamma on May 1, 2010 at 10:44 PM said...

விஜய் இன்னும் திருந்தலையா?????
எங்கப்பா விஜய் ரசிகர் சங்க தலைவர் சதீசனை காணோம்?????

யோ வொய்ஸ் (யோகா) on May 1, 2010 at 11:09 PM said...

இப்பதான் படம் பார்த்துவிட்டு வந்தேன்.

அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

இதை விட டீசண்டா(கேவலமா) திட்ட முடியாது ....

shrek said...

anna, where is my comment?

galatta media on May 2, 2010 at 12:05 PM said...

சுறா வழக்கமான விஜய் படம் என்றாலும், பார்க்கலாம்.

Kiruthigan on May 6, 2010 at 2:11 AM said...

//பின்னணி இசை படத்துக்குப் பெரும் பக்கபலம்//
அடங்கொக்கா மக்கா..
இரைச்சல் அடங்கவே ரெண்டு நாளாச்சுப்பா..
ஆகா எரிச்சல் அடங்காது போலிருக்கு..
நாங்க போனது நைட் 9 மணி ஷோ இன்ரவலுக்குமுதல் விஜய் ரசிகர்களே தூங்கிட்டாங்க..

Kiruthigan on May 6, 2010 at 2:12 AM said...

அவ்வா அவ்வா அவ வா வா வா
அவ்வா அவ்வா அவ வா வா வா

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy