இறந்தவரைப் பற்றிப்
புறங்கூறலாகாது - ஆனால்
அறங்கூற உனக்கு ஒரு
அருகதையும் கிடையாது
பிறந்த அன்றே ஆரம்பித்தாய்
ஆலயத்துப் படுகொலையில்
பக்தாத்திலும் அன்றே
பல உயிரைப் பறித்தெடுத்தாய்
இயற்கைச் சீற்றங்களில்
உனக்கோ பல பெயர்கள்
நர்கிஸாம் பெங்ஷெனாம்
நம் நாட்டில் நிஷாவாம்
அமரிக்கப் பொருளாதாரம்
ஆட்டித்தான் காட்டிவிட்டாய்
அதிபருக்குச் செருப்படியும்
அதனுடனே சேர்த்து விட்டாய்
தீவிர வாத்ததில் - நீ
திருவிளையாடல் காட்டிவிட்டாய்
பக்தாத்தில், பாகிஸ்தானில் - ஏன்
மும்பயிலும் முடித்துவிட்டாய்
ஏகாதிபத்தியத்தை
ஏறிட்டும் பார்க்காத நீ
நம் நாட்டிற்கு மட்டுமென்ன
நல்லதா செய்துவிட்டாய்
காற்றைவிட எல்லாம் இங்கே
காசுக்காய்க் காத்திருக்க
பல்குழல் மழையினிலே
பலரங்கே படுத்துறங்க
ஈழரையாய்ப் பிறந்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்போம்
ஏன் பிறந்தாய் நீ இங்கே
எட்டாவது வருடமாக.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment