Wednesday, March 17, 2010

மன்னிப்பாயா…


 
Vinnai11
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மன்னிப்பாயா – இந்தப் பாடலை இதுவரை எத்தனைதடவை கேட்டிருப்பேன் என்பதற்கு என்னிடம் பதிலே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம், பாடல் முடிந்ததும் திரும்பவும் கேட்கவேண்டும் போன்ற எண்ணம், காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசை எல்லாமுமாகச் சேர்ந்து என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறது.

ஸ்ரேயா ஹோஷலின் காந்தக்குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து, தொடரும் புல்லாங்குழல் இசையில் என்னை முழுவதுமாக பாடலினுள்ளேயே இழுத்துப்போட்டுவிடுகிறது. அதன்பின் மொத்தப்பாடலுமே அமைதியான ஒரு ஆற்றின் ஓட்டம். நடுவில் உறுத்தாமல் வந்துபோகும் திருக்குறள் வரிகள் பாடலின் ஹைலைட்.
 thr
பாடல் படமாக்கப்பட்ட விதம்கூட மனதைத் தொட்டுவிடுகிறது. பௌர்னமி இரவில், கேரள ஆற்றில் அமைதியாக நகரும் படகிலிருத்தவாறே பாடிக்கொண்டு நகரும் காட்சிகள் மனதைவிட்டு நகரமறுக்கின்றன. ஆனாலும் இவற்றையெல்லாம் விட என்னைக் கவர்ந்திழுப்பது கவிதாயினி தாமரையின் வரிகள்தான். படத்தின் ஒட்டுமொத்தக் கருவையும், காதலையும் ஒரே பாடலுக்குள் புகுத்தியிருக்கிறார் அவர்.

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

காதலியைப்பிரிந்த சோகம், அதில் ஒரு சுகம். காதுகளைக்கடந்து ஊடுருவுகின்றன வரிகள், இசைப்புயலின் குரலில். இந்தவரி இப்படி என்றால் அடுத்த வரியோ
 
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

காதலின் ஈர்ப்புக்கு, கும்மிருட்டில் தொலைவில் தெரியும் வெளிச்சத்தை நோக்கி எங்களை அறியாமலேயே செல்லும் இயல்பை ஒப்பிட்டிருப்பது, இதைவிட சிறப்பாக ஒப்பிடமுடியுமா என்ன?

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி

நேசத்தையும், பிரிவையும் ஒருங்கே சேமிக்கும் வரிகள். வரிகளே ஒரு கதையைச் சொல்லிவிடுகின்றன.

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

பாடலை முதன்முதலில் கேட்கும்போதே என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. காதலின் வலியின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் இல்லையா?

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

இந்த வரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? வாழ்க்கையின் கடந்தகாலங்களைக் கிளறிவிடுகிறதா? வரிகளே ஒரு கதை சொல்கிறதா? என்னிடமோ விபரிக்க வார்த்தைகளே இல்லை.

அமைதியாக ஒருமுறை கேட்டுப்பாருங்களேன்!

39 comments:

கன்கொன் || Kangon on March 17, 2010 at 9:43 PM said...

அதுசரி,
உந்தப் பதிவில படம் போட்டிருக்கிற அன்ரி யாரு?

கன்கொன் || Kangon on March 17, 2010 at 9:43 PM said...

ஓகோ.... ஆகா.... அடடா...

நடக்கட்டும் நடக்கட்டும்...

அண்டைக்கு திரையரங்கில பிடிச்ச சனி இன்னும் விட்டுப் போகேல போல கிடக்க?

குடுக்கிறாங்கய்யா விளக்கம்....

என்னவோ போங்க....

எண்டாலும் எனக்குப் பிடித்துவிட்ட பாடல்களில் ஒன்றுதான்... :)

கன்கொன் || Kangon on March 17, 2010 at 9:45 PM said...

யோவ்... கெதியா தமிழிஷ் இல இணையும்....
எவ்வளவு நேரம் தான் பாத்துக் கொண்டு நிக்கிறது?

Bavan on March 17, 2010 at 10:04 PM said...

அட.. same blood..;)

நானும் அடிக்கடி கேட்கும் பாட்டு... சூப்பர் பாட்டு...

உலகத்தில இத்தனை பாட்டிருந்தும் நான் ஏன் இந்தப்பாட்டைக் கேட்டேன்?? (தினமும் ரெண்டுதடவை போனை சார்ஜ்ல போடவேண்டிக்கிடக்கு..ஹிஹி)

//அண்டைக்கு திரையரங்கில பிடிச்ச சனி இன்னும் விட்டுப் போகேல போல கிடக்க?//

ஹாஹா எனக்கும் எனக்கும் ஆனால் அதை சனி என்று சொன்னமைக்கு எனது கண்டனங்கள்..x-(

// கன்கொன் || Kangon said...
அதுசரி,
உந்தப் பதிவில படம் போட்டிருக்கிற அன்ரி யாரு?//

அடிங் உங்களுக்கு பேத்தி முறை அவ..:p

Atchuthan Srirangan on March 17, 2010 at 10:20 PM said...

என் கடந்த கால நினைவுகளை மீட்ட பாடல்

Atchuthan Srirangan on March 17, 2010 at 10:28 PM said...

பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை

இதனையும் கேட்டு பாருங்கள்

கன்கொன் || Kangon on March 17, 2010 at 10:42 PM said...

உன்னை நினைத்து - பொம்பிளைங்க காதலத்தான் நம்பிவிடாதே

இதனையும் கேட்டு பாருங்கள்

archchana on March 17, 2010 at 11:23 PM said...

// அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்//

நல்ல வரிகள். ஈழத் தமிழர் பிரச்னையையும் காதலையும் கவிதாயினி தாமரை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் .
( இந்த வலி சுகமாக இருக்குமே என்று நினைக்கிற போது இருக்கின்ற வலியும் நிஜத்தில் அதனை அனுபவிக்கின்ற போது இருக்கின்ற வலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எழுத்திலோ சொல்லிலோ விவரிக்க முடியாது. நீங்களெல்லாம் முதலாவது ரகம் என நினைக்கிறேன்)

vasu balaji on March 17, 2010 at 11:55 PM said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது:)

Jay on March 18, 2010 at 1:11 AM said...

பெண்களை நம்பாதே அவர் கண்களை நம்பாதே ;)

தமிழ் மதுரம் on March 18, 2010 at 7:49 AM said...

நல்ல தொரு பகிர்வு...
இன்று தான் ஐந்தறைப் பெட்டிக்கு முதல் முதல் வந்தேன். காதலின் போதையோடு இதனைக் கேட்டால்..... ஒரு கதகதப்பு மனதிற்கு உருவாகும்.

Bavan on March 18, 2010 at 7:56 AM said...

// Atchu said...
பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை//

SAME BLOOD...;)

கன்கொன் || Kangon on March 18, 2010 at 8:27 AM said...

// Atchu said...
பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை//

Shame blood... ;)

யோ வொய்ஸ் (யோகா) on March 18, 2010 at 8:58 AM said...

எனக்கு இப்பாடல் பிடிக்க காரணம்.

1. நம்ம தலயின் இசை
2. தலயின் கிறங்கவைக்கும் குரல்
3. ஸ்ரேயா கோஷலில் குரல்
4. பாடல் வரிகள்
5. காட்சியமைப்பு
6. த்ரிஷா

Bavan on March 18, 2010 at 9:59 AM said...

//கன்கொன் || Kangon on March 18, 2010 8:27 AM said...
// Atchu said...
பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை//

Shame blood... ;)//

Why shame?? ahh??? X-(

ஆர்வா on March 18, 2010 at 10:46 AM said...

ரசனையா எழுதி இருக்கீங்க.. அட்டகாசம் போங்க‌

Atchuthan Srirangan on March 18, 2010 at 12:42 PM said...

//கன்கொன் || Kangon on March 17, 2010 10:42 PM said...

உன்னை நினைத்து - பொம்பிளைங்க காதலத்தான் நம்பிவிடாதே//

உங்கள் அனுபவம்....ஹி..ஹி..

க.பாலாசி on March 18, 2010 at 3:09 PM said...

நல்ல பாடல்.... இசை...எல்லாமே... இன்றைய எனது முணுமுணுப்பும்கூட....

KANA VARO on March 18, 2010 at 3:42 PM said...

பாடல்கள் நம் மனதை இதமாக்கும், வலிகளை போக்கும் என கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அண்மையில் நான் உணர்ந்திருக்கின்றேன். சில மனக்கஷ்ட மான நாட்கள் வந்த போது கண்களை மூடி மெய்மறந்து கேட்ட பாடல் இது. உண்மையிலேயே ரஹ்மான் ராஜாதி ராஜா தான். (படம் வரமுதல் எனக்கு பிடித்த பாடல் "ஓமணப்பெண் ..")

பனித்துளி சங்கர் on March 18, 2010 at 6:07 PM said...

பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி !

கார்த்தி on March 18, 2010 at 7:09 PM said...

அருமையான இந்தப்பாடலில் காட்சியமைப்பில் ஒரு சிறு இடத்தில் பிழைசெய்து விட்டார் அல்லது கவலையீனமாக இருந்து விட்டார் கௌதம்.!!

Subankan on March 18, 2010 at 8:36 PM said...

@ கன்கொன் || Kangon

//யோவ்... கெதியா தமிழிஷ் இல இணையும்....
எவ்வளவு நேரம் தான் பாத்துக் கொண்டு நிக்கிறது?//

பதிவுபோட்டுட்டு அது சரியா வந்திருக்கா எண்டு ஃபுறூவ் பாத்துக்கொண்டிருக்க வருது பின்னூட்டம். யாரப்பா உங்களுக்குத் தகவல் தாறது?

//உன்னை நினைத்து - பொம்பிளைங்க காதலத்தான் நம்பிவிடாதே
//

அனுபவமோ? தியேட்டர் வாசல்லயும் என்னவோ உளறினதா ஞாபகம்

Subankan on March 18, 2010 at 8:37 PM said...

// Bavan said...
அட.. same blood..;)

நானும் அடிக்கடி கேட்கும் பாட்டு... சூப்பர் பாட்டு...
//

நன்றி பவன், SAME BLOOD...;)

Subankan on March 18, 2010 at 8:39 PM said...

//Atchu said...
என் கடந்த கால நினைவுகளை மீட்ட பாடல்
//

அப்படியா?

//பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை

இதனையும் கேட்டு பாருங்கள்
//

கேட்டிருக்கிறேன், இந்தளவுக்குப் போட்டுத் தாக்கவில்லை

Subankan on March 18, 2010 at 8:41 PM said...

// archchana said...
// அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்//

நல்ல வரிகள். ஈழத் தமிழர் பிரச்னையையும் காதலையும் கவிதாயினி தாமரை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் .//

உண்மைதான்.

//( இந்த வலி சுகமாக இருக்குமே என்று நினைக்கிற போது இருக்கின்ற வலியும் நிஜத்தில் அதனை அனுபவிக்கின்ற போது இருக்கின்ற வலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எழுத்திலோ சொல்லிலோ விவரிக்க முடியாது. நீங்களெல்லாம் முதலாவது ரகம் என நினைக்கிறேன்)
//

முதலாவதுதான் :)

Subankan on March 18, 2010 at 8:43 PM said...

//வானம்பாடிகள் said...
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது:)
//

நன்றிகள் ஸார்

// Mayooresan said...
பெண்களை நம்பாதே அவர் கண்களை நம்பாதே ;)
//

அனுபவமோ?

Subankan on March 18, 2010 at 8:45 PM said...

// கமல் said...
நல்ல தொரு பகிர்வு...
இன்று தான் ஐந்தறைப் பெட்டிக்கு முதல் முதல் வந்தேன். காதலின் போதையோடு இதனைக் கேட்டால்..... ஒரு கதகதப்பு மனதிற்கு உருவாகும்.
//

நன்றி கமல், முதல் வருகைக்கும் கருத்துக்கும்

Subankan on March 18, 2010 at 8:45 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
எனக்கு இப்பாடல் பிடிக்க காரணம்.

1. நம்ம தலயின் இசை
2. தலயின் கிறங்கவைக்கும் குரல்
3. ஸ்ரேயா கோஷலில் குரல்
4. பாடல் வரிகள்
5. காட்சியமைப்பு
6. த்ரிஷா
//

அட!, எங்கள் ரசனைகள் பல இடங்களில் ஒத்துப்போகிறது அண்ணா :)

Subankan on March 18, 2010 at 8:47 PM said...

// கவிதை காதலன் said...
ரசனையா எழுதி இருக்கீங்க.. அட்டகாசம் போங்க‌//

மிக்க நன்றி

// க.பாலாசி said...
நல்ல பாடல்.... இசை...எல்லாமே... இன்றைய எனது முணுமுணுப்பும்கூட...//

நம்மள மாதிரியா?

கன்கொன் || Kangon on March 18, 2010 at 8:47 PM said...

// நன்றிகள் ஸார் //

மன்னிப்பாயா பாடலை நீங்கள் தான் இசையமைத்தீர்களோ?
அவருக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்றால் அதற்கேன் நன்றி? :P

Subankan on March 18, 2010 at 8:50 PM said...

// VARO said...
பாடல்கள் நம் மனதை இதமாக்கும், வலிகளை போக்கும் என கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அண்மையில் நான் உணர்ந்திருக்கின்றேன். சில மனக்கஷ்ட மான நாட்கள் வந்த போது கண்களை மூடி மெய்மறந்து கேட்ட பாடல் இது. உண்மையிலேயே ரஹ்மான் ராஜாதி ராஜா தான். (படம் வரமுதல் எனக்கு பிடித்த பாடல் "ஓமணப்பெண் ..")//

உண்மைதான் வரோ, படம் வரமுன்னர் எனக்குப் பிடித்தது ஹோசன, படத்தில் அது அவ்வளவாகக் கவரவில்லை

Subankan on March 18, 2010 at 8:50 PM said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி !
//

நன்றி சங்கர்

Subankan on March 18, 2010 at 9:46 PM said...

// கார்த்தி said...
அருமையான இந்தப்பாடலில் காட்சியமைப்பில் ஒரு சிறு இடத்தில் பிழைசெய்து விட்டார் அல்லது கவலையீனமாக இருந்து விட்டார் கௌதம்.!!
//

ஆகா, இப்போதும் இரண்டுமுறை பார்த்துவிட்டேன். ஒருவேளை என் வெற்றுக்கண்ணுக்குப் புலப்படவில்லையோ? எந்த இடம்?

ரோஸ்விக் on March 19, 2010 at 12:59 AM said...

நல்ல பாடல்... ரசித்திருக்கிறேன்... :-)

Kanapathi on March 19, 2010 at 8:38 PM said...

உண்மை தான் .. அந்த படத்தின் ஒட்டு மொத்த கருபொருளையும் இந்த பாடலில் இருக்கிறது.
ஆனால் இந்த பாடல் த்ரிஷாவின் திருமணத்தின் பின்னர் இடம் பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்..

Ramesh on March 19, 2010 at 10:54 PM said...

வாவ்.... என்னையும் இது... மன்னிப்பாயா.... இசை வருடுகிறதா கவிதை வளைக்கிறதா பாடகர்களின் குரல் தித்திக்குதா... மீண்டும் பாடலுடன் நான் இப்போது மீண்டும் கேட்கிறேன் சுப்பு மன்னிப்பாயா

இலங்கன் on March 20, 2010 at 11:56 AM said...

ஆகா.. அண்ணா இதுக்கு முன்னாடி சர்வம் படப்பாடல் ஒன்றையும் ஒரு பதிவில் இட்டிருந்தீர்கள்.. ஆகா.. ஓகோ.. நிஜமாகத் தான் என்னா ஒரு பீலிங்ஸ் பாடல்கள் இவை.. அருமை அருமை ... பாடலை கண்ணை முடி கேட்டுக்கொண்டு மனத்திரையில் படம் ஓடுறீங்க போல அண்ணியுடன்... ஹி.. ஹி...

Bavan on March 21, 2010 at 3:36 PM said...

//கண்ணை முடி கேட்டுக்கொண்டு மனத்திரையில் படம் ஓடுறீங்க போல அண்ணியுடன்... ஹி.. ஹி..//

என்னாதுதுதுதுதுது???

Anonymous said...

superb song... mesmerizing... mind blowing.. sweet one... Shrya Goshal has got a magnetic voice.. such a feel is there in her voice

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy