Friday, March 5, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா
காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…
 81_thumbzoom
கேரள ஆற்றின் ஓட்டத்தோடு ஆரம்பிக்கும் படம், அதே அருவியின் ஓட்டத்தைப்போலான A. R. ரஹ்மானின் இசையின் பலத்தோடும் அழகான, யதார்த்தமான, எவரையும் உறுத்தாதவிதத்திலான கூடல், ஊடல் காட்சிகளினூடும் ஒரு மென்மையான காதலையும் சொல்லிவிட்டுப் போகிறது.

நீண்டநாட்களுக்குப்பிறகு சிறந்த ஒரு படத்தைப் பார்த்த திருப்தியும், படம் முடிந்தபிறகு எழுந்துசெல்ல மனமில்லாமல் அடுத்த காட்சியையும் இருந்து பார்த்துவிடலாமோ என்ற எண்ணமும் இந்தப்படத்துக்குத்தான் ஏற்பட்டது. எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லாத காட்சிகளும், சிம்புவையும், த்ரிஷாவையும் தாண்டித் தெரியும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களும், இயல்பாக நகரும் கேமராவும் எந்த இடத்திலும் உறுத்தாமல் படத்தோடு எம்மையும் அழைத்துச் செல்கிறது.

கார்த்திக் அவசரப்பட்டுத் தன் காதலை ஜெஸ்ஸியிடம் சொல்லிவிடும் இடத்தின் யதார்த்தமாகட்டும், ஜெஸ்ஸி தனக்குள் இருக்கும் காதலை தன்னை அறியாமலேயே ரயில்ப் பயணத்தில் வெளிப்பட்டுத்தும் அழகாகட்டும், காதலையும், குடும்பத்தையும் வைத்துக்கொண்டு குழம்பும் யதார்த்தமாகட்டும், தனது ஒட்டுமொத்தக் காதலையும் கார்த்திக் தனது முகத்திலேயே காட்டிவிடுவதாகட்டும் என ஒவ்வொரு காட்சிகளும் எம் உணர்வுகளையும் சேர்த்தே தூக்கிக்கொண்டு நகர்கின்றன.
 60771063_10042009_8
இசைப்புயலின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் மனதில் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது. கூடவே காட்சிகளோடு ஒன்றிப்போகும் பின்னணி இசை இன்னமும் காதுகளில் இழையோடிக்கொண்டிருக்கின்றது.

படத்தின் கதையூடே இழையோடும் மென்மையான நகைச்சுவைகளும், காட்சிகளுக்கேற்ற சுருக்கமான வசனங்களுமாக படம் நகர்வது ரசிக்கவைக்கிறது. குறிப்பாக இந்த உலகத்தில எத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியினைக் காதலிக்க வேண்டும் என அடிக்கடி கார்த்திக் கேட்பதும் பின்னர் ஜெஸ்ஸி கார்திக்கிடம் அதே கேள்வியைக் கேட்பதும் அழகு.

படத்தில் அழகாகத் தெரியும் ஜெஸ்ஸியும், சிம்புவாகவே தெரியாத கார்த்திக்கும், அவர்களின் அலட்டலில்லாதத நடிப்பும், யதார்த்தமான காட்சிகளுமாக மென்மையான ஒரு காதலை எங்கள் இதயங்களில் இருத்திவிட்டுச் செல்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா.

விண்ணைத்தாண்டி வருவாயா – என்னைத் தாக்கிவிட்டது.

30 comments:

அனுதினன் on March 5, 2010 at 8:40 PM said...

அண்ணா ரொம்பவே கலங்கி போனிங்கள் போங்க .... அதுதானே நாங்க பார்த்தமே!!!!!

விமர்சனங்களில் உள்ள வார்த்தைகள் அனுபவங்களாக இருக்கின்றன போலும்....

I CAN'T .................:P

கன்கொன் || Kangon on March 5, 2010 at 8:43 PM said...

உங்களோடு படம் பற்றி ஏற்கனவே நிறையவே கதைத்துவிட்டதால் அவற்றை இங்கே திரும்பக் கதைத்தல் பின்னூட்டம் நீண்டு போய்விடும், அவ்வளவுக்கு இருக்கிறது....

//விண்ணைத்தாண்டி வருவாயா – என்னைத் தாக்கிவிட்டது //

பார்த்தேன் அந்தத் தாக்கத்தை....

I just can't believe what a quick you are.... You are simply great Suba Anna... :P

வானம்பாடிகள் on March 5, 2010 at 9:30 PM said...

விமரிசனம் அழகா இருக்கு.

Balavasakan on March 5, 2010 at 9:34 PM said...

நிச்சயமாக நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல தமிழ் படம் பார்த்த உணர்வு..

Bavan on March 5, 2010 at 10:32 PM said...

I just can't believe This..:p

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ on March 5, 2010 at 11:26 PM said...

விமர்சனம் மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !

பிரியமுடன்...வசந்த் on March 6, 2010 at 12:15 AM said...

பாத்து சூதானமா இருங்கப்பு...!

விமர்சனம் லேட்டா வந்தாலும் நல்லாருக்கு சுபா...

மருதமூரான். on March 6, 2010 at 8:41 AM said...

////காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…////

oH......

யோ வொய்ஸ் (யோகா) on March 6, 2010 at 4:00 PM said...

:)

இலங்கன் on March 6, 2010 at 4:56 PM said...

படம் பாத்திட்டு வந்து போடுறன்..
எனவே ஓட்டுக்கள் இந்த வாரம் பின்னூட்டம் அடுத்தவாரம்.
ஆக மொத்தத்தில் vtv எங்கள் வீட்டு ரீவியிலும் தான்.. ஹி.. ஹி..

Karthik on March 6, 2010 at 7:22 PM said...

படம் பிடிச்சிருந்ததா? லக்கி நீங்க. எனக்கு பாட்டும், சினிமடோகிராபியும்தான் பிடிச்சது. :)

Subankan on March 6, 2010 at 8:59 PM said...

// அனுதினன் said...

அண்ணா ரொம்பவே கலங்கி போனிங்கள் போங்க .... அதுதானே நாங்க பார்த்தமே!!!!!

விமர்சனங்களில் உள்ள வார்த்தைகள் அனுபவங்களாக இருக்கின்றன போலும்....

I CAN'T .................:P//

அப்படியா? நன்றி அனு

Subankan on March 6, 2010 at 9:00 PM said...

// கன்கொன் || Kangon said...

உங்களோடு படம் பற்றி ஏற்கனவே நிறையவே கதைத்துவிட்டதால் அவற்றை இங்கே திரும்பக் கதைத்தல் பின்னூட்டம் நீண்டு போய்விடும், அவ்வளவுக்கு இருக்கிறது....

//

உண்மைதான்

//I just can't believe what a quick you are.... You are simply great Suba Anna... :P//

ஏனையா இந்தக் கொலைவெறி?

**********************

// வானம்பாடிகள் said...

விமரிசனம் அழகா இருக்கு.//

நன்றி சார்

Subankan on March 6, 2010 at 9:02 PM said...

// Balavasakan said...

நிச்சயமாக நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல தமிழ் படம் பார்த்த உணர்வு..//

உங்கள் விமர்சனமும் வாசித்தேன் வாசு, அதேதான் :)

************

// Bavan said...

I just can't believe This..:p//

ஏனையா? கைப்புள்ள லெவலுக்கு கொண்டுவந்துட்டீங்களே

Subankan on March 6, 2010 at 9:03 PM said...

// ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

விமர்சனம் மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !//

நன்றி சங்கர்

****************

// பிரியமுடன்...வசந்த் said...

பாத்து சூதானமா இருங்கப்பு...!

விமர்சனம் லேட்டா வந்தாலும் நல்லாருக்கு சுபா//

நன்றி வசந்த்

Subankan on March 6, 2010 at 9:04 PM said...

// மருதமூரான். said...

////காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…////

oH......//

ஆகா.....

*****************

// யோ வொய்ஸ் (யோகா) said...

:)//

:)))

Subankan on March 6, 2010 at 9:05 PM said...

// இலங்கன் said...

படம் பாத்திட்டு வந்து போடுறன்..
எனவே ஓட்டுக்கள் இந்த வாரம் பின்னூட்டம் அடுத்தவாரம்.
ஆக மொத்தத்தில் vtv எங்கள் வீட்டு ரீவியிலும் தான்.. ஹி.. ஹி..//

நன்றி இலங்கா, தாராளமாகத் தியேட்டரிலேயே பார்க்கலாம்

****************

// Karthik said...

படம் பிடிச்சிருந்ததா? லக்கி நீங்க. எனக்கு பாட்டும், சினிமடோகிராபியும்தான் பிடிச்சது. :)//

ரொம்பவே பிடிச்சுப்போச்சு தல :)

புலவன் புலிகேசி on March 6, 2010 at 10:06 PM said...

தல என்னைத் தாக்கியப் படம் இரண்டு முறை பார்த்தாச்சு...அடுத்து எப்போ பாக்கலாமுன்னு திட்டம் போட்டுட்டிருக்கேன்...அழகான விமர்சனம்

புலவன் புலிகேசி on March 6, 2010 at 10:07 PM said...

என் மனதையும் தாக்கிய படம்..இரண்டு முறை பார்த்த இன்னும் மீண்டும் என ஏங்கிக் கொந்திருக்கிறேன்...அழகான விமர்சனம்

Subankan on March 7, 2010 at 12:42 PM said...

// புலவன் புலிகேசி said...
என் மனதையும் தாக்கிய படம்..இரண்டு முறை பார்த்த இன்னும் மீண்டும் என ஏங்கிக் கொந்திருக்கிறேன்...அழகான விமர்சனம்//

நன்றி புலிகேசி, நானும் மீண்டும் பார்க்கலாமென்றிருக்கிறேன்

யோ வொய்ஸ் (யோகா) on March 7, 2010 at 2:48 PM said...

திரும்பவும் பார்க்கணும் போல இருக்கு.

நேற்று படத்தை பார்த்து இரவு தூக்கமில்லை

VARO on March 7, 2010 at 2:58 PM said...

காதலால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்கள் சிலா்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பாா்த்து தங்கள் வலிகளை போக்கி கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

Subankan on March 7, 2010 at 3:51 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
திரும்பவும் பார்க்கணும் போல இருக்கு.

நேற்று படத்தை பார்த்து இரவு தூக்கமில்லை
//

எனக்கும்தான் அண்ணா :)

**************

// VARO said...
காதலால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்கள் சிலா்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பாா்த்து தங்கள் வலிகளை போக்கி கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.ஸி செய்தி வெளியிட்டுள்ளது.
//

அப்படியா? எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை

புல்லட் on March 11, 2010 at 11:24 AM said...

படம் எனககு பிடிக்கவில்லை தம்பி.. ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை.. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.. படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்.. படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்.. அது அபத்தானது..

கன்கொன் || Kangon on March 11, 2010 at 6:31 PM said...

// படம் எனககு பிடிக்கவில்லை தம்பி..//

சரி.... பரவாயில்லை... :)

//ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை..//

அப்ப இதுக்கு பெயர் என்ன? :P

//உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது..//

ஓ....!

//படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும//

ஓ! எல்லாமே நல்லா இருக்கா? :D

//பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்..//

ஓ! அப்ப உது படமில்லயா? வாழ்க்கையா?
கமல் கேட்டது தான், நாயகன் படம் பார்த்தாப் பிறகு எல்லாரும் கொள்ளைக்காரன் ஆயிற்றாங்களா? :P//படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்..//

என்னண்ணே பின்நவீனத்துவமெல்லாம் கதைக்கிறியள்?


// அது அபத்தானது.. //

ஏன்னே!
படம் தானே...
மண்டைல இருக்கிறத கழற்றி வெளிரல வச்சிற்று போய்ப்பாத்து சிரிச்சிற்று வாறது தானே?
ஏன்னே இவ்வளவு நிறைய யோசிக்கிறியள்? :))))


புல்லட் அண்ணாவுக்கு படம் பிடிக்காததால் இன்று முதல் எனக்கும் விதாவ படம் பிடிக்கவில்லை... :D
ஏனென்றால் நான் தனியே ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டி வருமோ என்றஞ்சியபோது அண்ணன் புல்லட் பகிரங்கமாக தனக்கும் பிடிக்காததை ஒத்துக் கொண்ட நன்றிக்கடனுக்காக இப்போது நன்றி செலுத்துகிறேன்.... :P

Subankan on March 11, 2010 at 6:39 PM said...

// புல்லட் said...
படம் எனககு பிடிக்கவில்லை தம்பி.. ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை.. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.. படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்.. படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்.. அது அபத்தானது.//

உங்கள் லாஜிக் எனக்குப் புரியவில்லை அண்ணா. படத்தில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரம் இலகுவில் குழப்பமடையும் ஒருவரது பாத்திரம். அவள் வெளிப்படுத்தும் காதலும் அப்படித்தான். அவளது புறச்சூழல் அவளை அப்படித் தள்ளுகிறது. அதை பொதுப்படையாக பெண்களின் காதல் உணர்வு என்று எடுத்துக்கொள்வது எவ்வாறு?

மேலும் அதைப்பார்த்து துணைமீது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒருவனாக இருந்தால் அவனது சந்தேகத்துக்கு அவள் தும்முவது, இருமுவது கூடப் போதுமானதாக இருந்திருக்கும்.

பதிவுக்கு சந்பந்தமில்லாத ஒரு விசயம், அணில் கடிக்காத புறுட் வேணுமெண்டால் வடலி வளத்தால்தான் உண்டு

கன்கொன் || Kangon on March 11, 2010 at 6:41 PM said...

// அணில் கடிக்காத புறுட் வேணுமெண்டால் வடலி வளத்தால்தான் உண்டு //

இதன் அர்த்தம் என்ன...
உடனடியாக பகிரங்க விளக்கமளிக்கவும்....

Subankan on March 11, 2010 at 6:54 PM said...

//இதன் அர்த்தம் என்ன...
உடனடியாக பகிரங்க விளக்கமளிக்கவும்....//

:))

பச்சை மண்ணுப்பா நீயி

கன்கொன் || Kangon on March 11, 2010 at 6:55 PM said...

// :))

பச்சை மண்ணுப்பா நீயி //

நன்றிப்பா...
இத நாலு பேருக்குச் சொல்லுங்கப்பா...

கணா on March 27, 2010 at 2:24 PM said...

காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy