Monday, March 22, 2010

ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ



24820_376509536085_564766085_4313635_4976919_n

ஹலோ, நான் சுபாங்கன் பேசறேன். பதிவர் பவன் கொழும்புக்கு வந்திருக்கிறார். நாளைக்கு 5 மணிக்கு கோல்ஃபேசில சந்திக்கலாமா?
எந்த பவன்?
எரியாத சுவடிகள் பவன்.
தெரியலயே
திருகோணமலையில இருந்து எழுதுவார்
ம்ஹூம்
ஃபோட்டோ காமன்ட்ஸ் பவன்
ஓ அவரா, சரி நான் வந்துடறேன்

****************************

வேறு ஒரு விடயமாக மது அண்ணாவிற்கு அழைப்பெடுத்தபோது பவன் வந்திருப்பதையும் தெரிவித்தேன். உடனே  அவர் கேட்ட கேள்வி பவனுடன் சந்திப்பு வைக்கலாமா? மெரினா பீச்சில் சந்திக்கும் இந்தியப்பதிவர்களின் பாதிப்பால் நான் கேட்டது அப்ப கோல்ஃபேசில சந்திக்கலாமா?

****************************

பதிவர் சந்திப்புகளில் பதிவர்களிடம் வாங்கிவைத்திருந்த சில தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசியில் எனது அதிமேதாவித்தனத்தைக் காண்பிக்க முயன்றபோது தொலைந்திருந்தன. ஆதிரை அண்ணா, மது அண்ணா, மற்றும் கோபியின் உதவியுடனேயே பலரது இலக்கங்களைப் பெற்று அழைக்க முடிந்தது. இலக்கம் கிடைத்த சிலரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்க இனிமேல் இவ்வாறான குட்டிச் சத்திப்புகளையும் குழுமத்தினூடேயே அறிவிப்பது என நேற்றே யோசனை தெரிவிக்கப்பட்டது.

****************************

கடலின் இரைச்சலும், சனக்கூட்டமும் சிறிது அதிகமாகவே இருந்தாலும், சந்திப்பு கலகலப்பாகவே இருந்தது. இவ்வாறான பொது இடங்களில் வழமையான பாணியிலான பதிவர் சந்திப்புகளை நடத்தமுடியாவிட்டாலும் கூட, இப்படியான நட்புரீதியான சந்திப்புகளுக்கு பொது இடங்கள் பொருத்தமானவை என்றே நினைக்கின்றேன். காரணம், இப்படியான இடங்களில்தான் ஏழு மணிக்குப் பின்னரும்கூட பேசிக்கொண்டிருக்கலாமே!

****************************

நேற்றய பதிவின் நாயகன் பதிவர் புல்லட்தான். வந்தவுடனேயே எறிபோலுக்கு என்ன இங்கிலீஸ் எண்டு தொடங்கி, அதற்கு விடையையும் சொல்லிக் கலகலப்பாக்கினார். பபிள்கம்மை மிதித்து நடனமாடினார். கோவேறு கழுதையைப்பார்த்து கலவரமானார். இறுதியில் நாங்கள் தொடக்கிய ஒரு தலைப்பைப்பற்றிப் பேசப்பேச அவர் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்.

****************************

இலங்கைப் பதிவுலக சூறாவளி வரோ தனது பதிவில் சந்திப்பு பற்றி ஏறக்குறைய அத்தனையையுமே எழுதி முடித்துவிட்டதால் இங்கே போய் ஏனய விடயங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

****************************

நாங்கள் அடிக்கடி நடாத்தும் கும்மிகளில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு சந்திப்பாகத்தான் இருந்தது. பேசிய விடயங்களும் அப்படித்தான். சோ, ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ.

27 comments:

ஆதிரை on March 22, 2010 at 10:41 PM said...

ப்ப்ப்ப்ப்பிளீஸ்... அப்படிச் சொல்லாதீங்கோ

ஆதிரை on March 22, 2010 at 10:42 PM said...

எறிபோலுக்கு என்ன இங்கிலீஸ்? பிளீஸ் சொல்லுங்கோ..........

Subankan on March 22, 2010 at 10:44 PM said...

// ஆதிரை said...
எறிபோலுக்கு என்ன இங்கிலீஸ்? பிளீஸ் சொல்லுங்கோ..........//

ப்ளீஸ், அதைமட்டும் கேக்காதைங்கோ

ஆதிரை on March 22, 2010 at 10:46 PM said...

நீங்கள் சொல்லாட்டில் பரவாயில்லை...

இலங்கையின் கிரிக்கட் ஆய்வாளர் சொல்வார்.

கோபி... ப்ப்ப்ப்பிளீஸ் சொல்லுங்கோ

புல்லட் on March 22, 2010 at 10:50 PM said...

நாசமாப்போக.. அந்தப் பிளீசைப்போட்டு கொஞ்ச நஞ்ச பாடாடா படுத்திறியள்.. தெரியாம அது உங்க நடுவில வந்து மாட்டுப்பட்டுட்டு.. சுருக்கமா இருந்தாலும் சுவையா இருக்கு சுபாங்கா.. யாரும் சீரியசா எடுக்கமாட்டாங்கள் கவலைப்படாதயப்பன்.. ஏற்பாடு செய்தமைக்கு உளப்பூர்வமான நன்றிகள்.. இனியதொரு மாலையாக அமைந்தது..

SShathiesh-சதீஷ். on March 22, 2010 at 10:55 PM said...

ப்ளீஸ் உங்கள் பதிவை வாசித்தாச்சு ப்ளீஸ் பின்னூட்டம் போட்டாச்சு. ப்ளீஸ் நான் போகலாமா. ப்ளீஸ்....பிளேஸ்.....சக்கிங்......

--
S.Shathiesh

archchana on March 22, 2010 at 11:55 PM said...

ப்ப்ப்ப்பிளீஸ்.........................
இது யாரிற்கு கடி.

vasu balaji on March 23, 2010 at 1:18 AM said...

சரிங்கோ:))

Unknown on March 23, 2010 at 7:30 AM said...

அதுசரி இங்கயும் கும்மி
கொல்பேஸ் போயும் கும்மியா?

கொடுமை

கன்கொன் || Kangon on March 23, 2010 at 7:45 AM said...

ப்ப்ப்பிளீஸ்....
எப்பவோ இருந்திற்றுத்தான் நான் வேளைக்கு நித்திரை கொள்ளுவன், அண்டைக்கெண்டு பதிவு போட்டிருக்கிறாங்கள் துரோகிகள்...
என்ர பின்னூட்டம் இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எனக்கு பெருத்த அவமானம்.... :(
ப்ப்ப்ப்பிளீஸ்...
இனி இப்பிடிச் செய்யாதயுங்கோ....

Bavan on March 23, 2010 at 10:43 AM said...

ப்ப்ப்பிளீஸ்... I just... can't BELIEVE this..:P

KANA VARO on March 23, 2010 at 12:46 PM said...

//ஹலோ, நான் சுபாங்கன் பேசறேன்.//

இனி எஸ்கேப்...

//மெரினா பீச்சில் சந்திக்கும் இந்தியப்பதிவர்களின் பாதிப்பால் நான் கேட்டது//

வயிறு வத்திசிடுப்பா!

//இவ்வாறான குட்டிச் சத்திப்புகளையும் குழுமத்தினூடேயே அறிவிப்பது என நேற்றே யோசனை தெரிவிக்கப்பட்டது//

நன்று... விரும்பினா வா... ஏலாட்டி நில்

//இலங்கைப் பதிவுலக சூறாவளி வரோ//

இதுவரை நல்லா தானே போச்சுது...
(காமப்பதிவர் என புல்லட் சொல்ல அப்பிடியே சாக் ஆயிட்டான்.. இனி இப்பிடியே கூப்பிடுங்கடா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ப்ளீஸ் )

//சோ, ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ//

ஓமோம்

பனித்துளி சங்கர் on March 23, 2010 at 1:47 PM said...

/////////ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ ///////


சொல்றதை எல்லாம் சொல்லீட்டு . இதுல இதுவேரையா .
நல்லா இருக்கு !
நல்லா இருக்கு !

Subankan on March 23, 2010 at 6:37 PM said...

// ஆதிரை said...
நீங்கள் சொல்லாட்டில் பரவாயில்லை...

இலங்கையின் கிரிக்கட் ஆய்வாளர் சொல்வார்.

கோபி... ப்ப்ப்ப்பிளீஸ் சொல்லுங்கோ
//

அவரும் சொல்லேல்லைப்போல?

Subankan on March 23, 2010 at 6:39 PM said...

//புல்லட் said...
நாசமாப்போக.. அந்தப் பிளீசைப்போட்டு கொஞ்ச நஞ்ச பாடாடா படுத்திறியள்.. தெரியாம அது உங்க நடுவில வந்து மாட்டுப்பட்டுட்டு..//

சரி, இனி ப்ளீஸ் சொல்லமாட்டேன்

// சுருக்கமா இருந்தாலும் சுவையா இருக்கு சுபாங்கா.. யாரும் சீரியசா எடுக்கமாட்டாங்கள் கவலைப்படாதயப்பன்..//

நன்றி அண்ணா

// ஏற்பாடு செய்தமைக்கு உளப்பூர்வமான நன்றிகள்.. இனியதொரு மாலையாக அமைந்தது//

ப்ளீஸ், நமக்குள்ள நன்றி எல்லாம் சொல்லாதைங்கோ

Subankan on March 23, 2010 at 6:40 PM said...

//SShathiesh said...
ப்ளீஸ் உங்கள் பதிவை வாசித்தாச்சு ப்ளீஸ் பின்னூட்டம் போட்டாச்சு. ப்ளீஸ் நான் போகலாமா. ப்ளீஸ்....பிளேஸ்.....சக்கிங்......
//

ப்ளீஸ், கொஞ்சம் நிண்டுட்டுப் போங்கோவன்

Subankan on March 23, 2010 at 6:41 PM said...

//archchana said...
ப்ப்ப்ப்பிளீஸ்.........................
இது யாரிற்கு கடி//

ப்ளீஸ், அதைக் கேக்காதைங்கோ, புல்லட் அண்ணாவுக்குத்தான் எண்டு என்ட வாயால சொல்லவே மாட்டன்

Subankan on March 23, 2010 at 6:41 PM said...

// வானம்பாடிகள் said...
சரிங்கோ:))
//

நன்றிங்கோ

Subankan on March 23, 2010 at 6:42 PM said...

// A.சிவசங்கர் said...
அதுசரி இங்கயும் கும்மி
கொல்பேஸ் போயும் கும்மியா?

கொடுமை//

ஏன்? ஏன்? ஏன்?

Subankan on March 23, 2010 at 6:43 PM said...

// கன்கொன் || Kangon said...
ப்ப்ப்பிளீஸ்....
எப்பவோ இருந்திற்றுத்தான் நான் வேளைக்கு நித்திரை கொள்ளுவன், அண்டைக்கெண்டு பதிவு போட்டிருக்கிறாங்கள் துரோகிகள்...
என்ர பின்னூட்டம் இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எனக்கு பெருத்த அவமானம்.... :(
ப்ப்ப்ப்பிளீஸ்...
இனி இப்பிடிச் செய்யாதயுங்கோ..//

சரிங்கோ

ப்ளீஸ், இனியாவது பதிவுக்குப் பின்னூட்டம் போடுங்கோ

Subankan on March 23, 2010 at 6:44 PM said...

// Bavan said...
ப்ப்ப்பிளீஸ்... I just... can't BELIEVE this..:P//

ப்ளீஸ், என்னை நம்புங்கோ

Subankan on March 23, 2010 at 6:46 PM said...

// VARO said...



வயிறு வத்திசிடுப்பா!//

கடல் முழுக்க தண்ணி இருந்திச்சேப்பா


//இதுவரை நல்லா தானே போச்சுது...
(காமப்பதிவர் என புல்லட் சொல்ல அப்பிடியே சாக் ஆயிட்டான்.. இனி இப்பிடியே கூப்பிடுங்கடா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ப்ளீஸ் )//

சரி காம்ப்பதிவரே

Subankan on March 23, 2010 at 6:46 PM said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...


சொல்றதை எல்லாம் சொல்லீட்டு . இதுல இதுவேரையா .
நல்லா இருக்கு !
நல்லா இருக்கு !
//

ஆகா, என்ன நடக்குது ஏதாவது தெரியுமா?

கன்கொன் || Kangon on March 23, 2010 at 6:46 PM said...

//சரிங்கோ

ப்ளீஸ், இனியாவது பதிவுக்குப் பின்னூட்டம் போடுங்கோ //

பதிவா? எங்க எங்க?

அதுசரி, சீரியஸ் பதிவுக்கெல்லாம் 'நகைச்சுவை அற்புதம், வரிக்குவரி சிரித்தேன்' எண்டு பின்னூட்டம் போடுறது நீங்க தானா?

Subankan on March 23, 2010 at 6:50 PM said...

//கன்கொன் || Kangon said...
//சரிங்கோ

ப்ளீஸ், இனியாவது பதிவுக்குப் பின்னூட்டம் போடுங்கோ //

பதிவா? எங்க எங்க?
//

சதீஷ் பின்னூட்டம் போடுமட்டும் இங்கதான் இருந்தது (ப்ளீஸ் உங்கள் பதிவை வாசித்தாச்சு) இப்ப எங்க போச்சுதோ தெரியல

nadpudan kathal on March 23, 2010 at 10:41 PM said...

இது சரியில்லை!!!! என்ன விட்டு போறது!!!

KANA VARO on March 24, 2010 at 7:52 PM said...

//சரி காம்ப்பதிவரே//

யோவ்! என்னை இப்பிடி கூப்பிடாமல் "சூறாவளி' எண்டு கூப்பிடுங்கோ எண்டு சொன்னான்.
ப்ளீஸ் தயவு செய்து இப்பிடி கூப்பிடுடாதைங்கோ... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy