எனக்கு கம்பஸ்சில எக்ஸாம் நடந்துட்டிருக்கு. வழக்கம்போல நம்ம வண்டியும் குப்பியில ஓடிட்டிருக்கு. ( குப்பி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்துக்கொள்ளவும்) . இன்னிக்கு ரொம்ப நல்ல சாப்ஜக்ட். ஏன்னா கொஸ்டீன் எல்லாம் நல்லாப் புரியும். ஆன்சர்தான் பண்ண முடியாது. நண்பன் ஒருத்தன் சொன்னான் “ மச்சான், ஆன்சர் தெரியலீன்னா ஏதோ தெரியறத எழுதிடுவம், ரெண்டு மார்க்சாவது போடாமலா மோயிடுவான் ” ஏதோ புதுசாக் கண்டுபிடிச்ச மாதிரி. “ அடப்பாவி, இதத்தாண்டா ரெண்டு வருசமா எல்லா எக்சாம்லயும் பண்ணிட்டிருக்கேன்!!!”
*******************************
இதுவும் கம்பஸ் மேட்டர்தான். Power System சம்பந்தமான ஒரு ப்ராக்டிகல். நான் கனெக்சன் கொடுத்து முடிக்கிறதுக்குள்ள ஒரு படுபாவிப்பய Switch ஆன் பண்ணிட்டான். சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு வந்தது தலையோட போய்ட்டுது. நாலு நாள் தலைவலி உயிர எடுத்துது. ஆனா பாவம். அந்த இன்ஸ்ருமன்ட்தான் வடிவேலு மாதிரி வாயாலயும் மூக்காலயும் புகைய விட்டுட்டு அடங்கிடுச்சு.
********************************
எக்ஸாம்கிறதால வேள்டு கப் கிரிக்கட் பாக்கவே முடியல. இன்னிவரைக்கும் ஒரு மேட்ச் கூடப் பாக்கல. ஆமா, ஆஸ்திரேலியாவ அடிச்சுத் துரத்திட்டாங்களாமே நம்மாளுங்க, உண்மையா? எப்படியோ, பைனலுக்கு முதல் எக்ஸாம் முடிஞ்சுடும். அப்பாடா…
**********************************
பதிவு திருடற விசயம் ரொம்ப சூடாப் போயிட்டிருக்கு. என்னோட பதிவு ஒன்றையும் சுட்டுட்டாங்க. முதல்ல கொஞ்சம் கோபம் வந்தது. அப்புறமா, அட நம்ம பதிவையும் சுடறாங்களேன்னு சந்தோசப்பட்டேன். நேற்று இந்த விசயத்துல இங்க கும்மி அடிச்சிட்டிருந்தேன். நண்பர் சித்து ஏதோ ஒரு கோடை சேத்துட்டா யாராலயும் காப்பி பண்ண முடியாதுன்னார். அப்படி செய்தா பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எவனோ ஒருத்தனுக்காக நம்ம நண்பர்களை ஏன் கஸ்டப்படுத்தணும்?
********************************
கந்தசாமி பாடல்கள் நெட்டில டவுன்லோட் பண்ணிக் கேட்டேன். அயனுக்கு அப்புறம் எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்கறது இதிலதான். விக்ரமுக்கும் படம் லேட்டாவுறதுக்கும் என்னதான் ஒற்றுமையோ? ஸ்டில்சைப் பாக்கிறப்பல்லாம் என்னவோ பண்ணுது. படத்துக்காக வெயிட்டிங்…
10 comments:
//பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எவனோ ஒருத்தனுக்காக நம்ம நண்பர்களை ஏன் கஸ்டப்படுத்தணும்?//
ஆகா, நல்ல மனசு உங்களுக்கு.
பதிவில இருந்து அப்படியே copy பண்ணி paste பண்ணும் என் போன்றவர்களுக்கு
கஸ்டம் தரக்கூடாது என்று நினைக்கிறீங்க.
campusல குப்பியை நம்பி தானே lectures கட் அடிக்கிறது.
தம்பி இண்டைக்கு காலையில உங்கட குறூப்பை பஸ்ஸில கண்டனான். நல்லா படிச்சனியள் Examக்கு முன்னால.
// மச்சான், ஆன்சர் தெரியலீன்னா ஏதோ தெரியறத எழுதிடுவம், ரெண்டு மார்க்சாவது போடாமலா மோயிடுவான்
பொடிநயாவின்ர (Moratuwa campusல Maths Lecture எடுக்கிறவர்)பாடம் எண்டால் கேள்விய திருப்பி எழுதி பக்கத்தை நிரப்பினாலே A போடுவார்.பாவம் உங்களுக்கு அவர் எடுக்கேலயே கவலைதான் !!!
@ வாசுகி
//campusல குப்பியை நம்பி தானே lectures கட் அடிக்கிறது.//
ம்... அங்கயுமா?
@ மங்களூர் சிவா
Thanks
//கார்த்தி said...
தம்பி இண்டைக்கு காலையில உங்கட குறூப்பை பஸ்ஸில கண்டனான். நல்லா படிச்சனியள் Examக்கு முன்னால.//
கடைசி நிமிசத்தையும் விடமாட்டமில்ல, படிக்கிறதே அதில மட்டும்தானே!!!
//பொடிநயாவின்ர (Moratuwa campusல Maths Lecture எடுக்கிறவர்)பாடம் எண்டால் கேள்விய திருப்பி எழுதி பக்கத்தை நிரப்பினாலே A போடுவார்.பாவம் உங்களுக்கு அவர் எடுக்கேலயே கவலைதான் !!//
ஆனா அவற்ர பேப்பர பாத்துத் திருப்பி எழுதவே நேரம் போதாதே, எப்படித்தான் சமாளிச்சனியளோ...
// சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு வந்தது தலையோட போய்ட்டுது. நாலு நாள் தலைவலி உயிர எடுத்துது. ஆனா பாவம். அந்த இன்ஸ்ருமன்ட்தான் வடிவேலு மாதிரி வாயாலயும் மூக்காலயும் புகைய விட்டுட்டு அடங்கிடுச்சு.
//
கனெக்சன் கொடுக்க முந்தி லாப் டெக்கு வந்து செக் பண்ணிறதில்லையோ..? பார்த்து பண்ணுங்கோ....இன்சுருமண்டு போச்சுதோ...அப்ப அதுக்கு பிஸூசு என்ற சாமானும் இல்லையோ...என்ன கோதாரியப்பா இது..?
@ ’டொன்’ லீ
அந்தப் பிரக்டிக்கலுக்கு பியூசு எல்லாம் இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது கண்டியளோ, நடந்தது அவுட்டோர் பிரக்டிக்கல். அதாலதான் இப்படிக் குளறுபடியள்.
நல்லாருக்கு! :)
கிரிக்கெட் பார்க்காம படிக்கிறீங்களா? பரவால்லயே!! :)
@ Karthik
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Nice combination...
Post a Comment