எனது சிறுவயதில்(இப்பவும் ஒண்டும் வயசாகிடல) நான் மிகவும் ரசித்துப் பார்த்த சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திப் பார்க்கும் முயற்சி இது. நிச்சயம் உங்களையும் இவை கவர்ந்திருக்கும். ஒரு ஒற்றுமை, இவையெல்லாம் தூர்தர்சனின் நிகழ்ச்சிகள்!
ஒலியும் ஒளியும்
இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதோர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இது பிரபல்யம். நிச்சயமாக இந்தத் தலைப்பில் ஒரு தொடர்பதிவு ஆரம்பித்தால் அனைவரது பதிவிலும் இது இடம்பெறும். இப்போதெல்லாம் படத்திற்கு நடுவே பாட்டு வந்தாலே வெறுப்பாக இருக்கிறது. (தம்மடிக்கும் பழக்கம் இல்லாததால் எழுந்தும் போக முடியாது). ரசிப்புத்தன்மை எப்படியெல்லாம் மாறுகிறது இல்லையா?
சக்திமான்
எனது சிறுவயது றோல்மாடல் இவர்தான். அப்போதெல்லாம் கார்ட்டூன் சானல்கள் என்றால் என்னவென்றே தெரியாது. சக்திமான் சும்மா சுழன்றுவந்து செய்யும் சாகசங்கள் பற்றி அப்போதெல்லாம் அதிகமாக விவாதிப்போம். ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பானதாக ஞாபகம். ஒருமுறை அதே நேரத்தில் டியூசன் வைக்கப்போய் ஆசிரியர் எங்களிடம் வாங்கிய சாபங்கள் அத்தனையும் பலித்திருந்தால் இப்போது அவர் நரகத்தில்தான் இருந்திருப்பார். அந்த வகுப்பிற்குக் கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டது தனிக்கதை.
சுராக்
வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு நடந்ததாக ஞாபகம். நான் முதன்முதல் பார்த்த துப்பறியும் தொடர். ஒவ்வொரு தடவையும் உண்மையைக் கண்டறிய ஹீரோ கையாளும் உத்தி வித்தியாசமாக இருக்கும். அதன் பிறகு துப்பறியும் கதைகள், படங்கள் என அனைத்தையும் நான் ரசிக்க சுராக்தான் பிள்ளையார்சுழி போட்டது. இதைப் பத்தி மணிக்குப் பார்ப்பதற்காக விழித்திருக்க நாங்கள் செய்யும் முன்முயற்சிகள் பற்றி தனிப் பதிவே இடலாம். பகலில் விசேச நித்திரை. பின் ஐந்து நிமிடத்திற்கொருதரம் முகம்கழுவி… அது ஒரு காலம். இப்போதெல்லாம் இரவு பன்னிரண்டு மணியெல்லாம் ஒன்றுமே இல்லாதது போல கடக்கின்றது.
6.55 இற்கு வரும் ஐந்து நிமிடக் காமெடி
தினமும் இரவு 6.55 இற்கு ஐந்து நிமிடங்கள் நகைச்சுவைக் காட்சிகள் காண்பிப்பார்கள். அதைப் பார்ப்பதற்காகவே விசேடமாக வீட்டில் T.V ஆன் செய்யப்படும். இப்போதோ நகைச்சுவைக்கே பல சானல்கள். எல்லாவற்றிலும் அரைச்ச மாவ அரைப்போமா என்று கிட்டத்தட்ட நகைச்சுவைக் காட்சிகள் மனப்பாடமே ஆகிவிட்டது.
ஜெய் ஹனுமான்
சிறுவயதில் பாட்டிசொல்லிக் கேட்ட கதைகளை டீவியில் காட்டினால் யாருக்குத்தான் பிடிக்காது? அப்போது இது சிறுவர்கள் மத்தியில் மட்டுமல்ல, பெரியவர்கள் மத்தியிலும் ஏகப் பிரபல்யம். இவற்றைப் பார்க்கும்போது கடவுள்மேல் பக்தி அதிகரிப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது கோயிலுக்குச் செல்வதே வருடத்தில் பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு என்ற கதையாக ஆகிவிட்டது.
29 comments:
உண்மைதான்...இருந்தாலும் மஹாபாரதம், ஜங்கிள் புக், கேப்டன் வியோம் எல்லாம் இதை விட அருமையாக இருக்கும்
@ வினோத்குமார்
நான் ரசித்தவற்றைக் கூறினேன். இன்னும் சிலது மறந்துவிட்டிருக்கலாம். நன்றி.
ஜங்கிள் புக், கேப்டன் வியோம் enaku remba pidikum
@ Krishnav
நான் ஜங்கிள் புக் பார்த்ததில்லை, கேப்டன் வியோம் எழுதும்போது நினைவுக்கு வரவில்லை. நன்றி.
இதெல்லாம் எங்க பார்த்தனியள்...?
நான் பார்த்தது, 1995 க்கு பின், கோப்பிகடை, ஜங்கிள் புக், ரொபின் கூட், சன் டீவி அவ்வளவு தான்....:-)
1997 ல் இருந்து டிஸ்கவரி சனல்..
@ ’டொன்’ லீ
அதே 96 க்குப் பிறகுதான். அதுக்கு முதல் நமக்கும் டீவிக்கும்தான் சம்பந்தமே இல்லையே! அப்ப எல்லாம் நமக்கு தூர்தர்சனும் சானல் ஐ யும் தானே. சன் டீவியெல்லாம் 2000 இல தான் யாழ்ப்பாணத்துக்கு அறிமுகம்.
நானும் இவற்றை ரசித்து பார்த்தேன்.
அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் தூர்தர்சன் பிரபலம்.
சுராக் எல்லோரும் விரும்பி பார்த்த நிகழ்ச்சி,dvd
கிடைக்குமா என்று கூட தேடி இருக்கிறேன், ஆனால் இங்கு ஒருவருமே
அந்த நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கவில்லை.
எனக்கு 6.55 இற்கு திரைப்பட அறிமுகம் பார்த்த நினைவு.
ஆனால் பின்னர் அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள்.
திங்கள் இரவு 9.30 இற்கு "ஆயிரத்து ஒரு இரவுகள்" ளும் தவறாமல் பார்ப்போம்.சிறுவயதில் மாயாஜாலக்கதை ரொம்ப பிடிக்கும்.
பழைய நினைவுகள் நன்றாக இருக்கிறது.
@ வாசுகி
வாங்க சகோதரி, நம்ம ஊரா நீங்க? அங்க பிரபலமான நிகழ்ச்சிகள் வேறு இடங்களில் அவ்வளவு பிரபலம் இல்லை போலும்!
எனக்கு சக்திமான் மிகவும் பிடித்த நிகழ்ச்சி... சக்தி மானிற்கு முன்னர் ஒளிபரப்பாகும்..(பெயர் நினைவில் இல்லை) பென்சிலின் மயலாய நாடகம் சூப்பரா இருக்கும்!
@ ஆபிரகாம்
உண்மைதான்.
// அப்ப எல்லாம் நமக்கு தூர்தர்சனும் சானல் ஐ யும் தானே. சன் டீவியெல்லாம் 2000 இல தான் யாழ்ப்பாணத்துக்கு அறிமுகம்.
//
ஓகோ...நான் 96 முதல் கொழும்பில். அதானே பார்த்தேன்..அப்ப யாழில் தூரதர்ஷன், ரூபவாகினி மட்டும் தானே..
சுராக் தொடர், திங்கள் கிழமை
இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பானது.
sandra kandha marunthittingale thambi
// Anonymous said...
சுராக் தொடர், திங்கள் கிழமை
இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பானது//
திங்கட்கிழமை அது மறு ஒளிபரப்புச் செய்யப்படும். பாடசாலை காரணமாக அதைப் பார்க்க வீட்டில் அனுமதி இல்லை.
@ tamil
என்ன செய்ய? நினைவில் நின்றவை என்று தலைப்பை மாற்றிவிடலாமா?
நல்ல ரசனை அண்ணா....
//(தம்மடிக்கும் பழக்கம் இல்லாததால் எழுந்தும் போக முடியாது)//
உங்க கிட்ட பிடிச்சதே இப்பிடி பேசும்போதே உண்மைய சொல்லுறது தான்!!!
:)))
@ வழிப்போக்கன்
:-)))
//தம்மடிக்கும் பழக்கம் இல்லாததால் எழுந்தும் போக முடியாது//
நான் நம்ப மாட்டேன்... ;)
முன்பு வெள்ளிக்கிழமை பூசைகளை வேளைக்கு முடித்து விட்டு ஓடொடி வந்து ஒலியும் ஒளியும் பார்ப்பது நினைவிருக்கிறது.
சக்திமான் பார்ப்பதற்காக கணித ஆசிரியையிடம் பொய் நேரம் சொல்லி அவரை நேரத்திற்கு வகுப்பை முடிக்கச் செய்து விட்டு ஓடி வந்து பார்ப்பேன்...
நல்ல பதிவு சகோதரா...
தொடர்ந்து நல்ல பதிவுகளாகவே எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்...
@ கனககோபி
//நான் நம்ப மாட்டேன்... ;)//
உண்மைய சொன்னா யார்தான் நம்பறீங்க?
நன்றி நண்பா
உண்மை தான் நன்பரே இன்னும் சிலவற்றை விட்டுவிட்டீர் ஸ்ரீ கிருஷ்ணா ,மற்றும் சில தமிழ் மொழி பெயர்ப்பு நாடகங்கள் பார்த்து ரசித்தோம் நான் நினைக்கிறேன் நீர் 2004-2007 காலதில் உயர்தரம் கற்றவர் என்று நானும் எமது நண்பர்களுடன் பழைய அனுபவங்கள் பற்றி கதைக்கும் இதுகும் பேசியிருக்கிறம்
உண்மை தான் நன்பரே இன்னும் சிலவற்றை விட்டுவிட்டீர் ஸ்ரீ கிருஷ்ணா ,மற்றும் சில தமிழ் மொழி பெயர்ப்பு நாடகங்கள் பார்த்து ரசித்தோம் நான் நினைக்கிறேன் நீர் 2004-2007 காலதில் உயர்தரம் கற்றவர் என்று நானும் எமது நண்பர்களுடன் பழைய அனுபவங்கள் பற்றி கதைக்கும் இதுகும் பேசியிருக்கிறம்
@ KAJAN
உண்மைதான். பழைய நினைவுகளை மறக்க முடியுமா? நான் உயர்தரம் 2006.
அட நீங்களுமா? நானும் தான், ஏனுங்க யாழ்ப்பாணத்தில எல்லாரும் இதைத் தான் பாத்திட்டு இருந்திருப்பாங்களோ?
இன்னும்:
1. மாநில மொழித் திரைப்படம்
2. ஞாயிற்றுகிழமை படம்
3. சாந்தி
4. விழுதுகள்
5. எதிரொலி (ஞாயிற்றுகிழமை படம் என்ன என்பதற்காகவே பாப்போம்)
ஞாயிற்றுகிழமை படம் போடும்போது கரண்ட் போயிடுச்சுன்னா EB காரன் குடும்பத்தையே திட்டுவோம்
நானும் அலிஃப்லைலா, ஜங்கிள்புக், ஷாந்தி, ஸ்வாபிமான், மாநில மொழிதிரைப்படம்,ஒளியும் ஒலியும்,சுராக்,சக்திமான் ஜெய்அனுமான்,கேப்டன் வியூம் இதெல்லாம் பார்த்து ரசித்ததுண்டு தமிழ் தொடர்களிலே வந்த விழுதுகள், வசந்தம்காலனி(ஷாமிலி நடித்தது) ரொம்ப பிடிக்கும். மேலும் சுராக் தொடர் திங்கள் இரவு 10 மணிக்குதான் வந்தது..
kunal
that's very nice
i like it
u know that shakalaka boom boom at 11.00am on sunday, and daily drama "aththanaai manitharkal" and Oru kathagenkathai al r nice drama.
Ada Surabi ya Engapa.. Oru Akkavum Ananum metthai mela Ukkandhu Naraya podhu arivu visayam solluvanga... (Title Theam Music Suuupera Irukkum)
Apram Anupam Kher kuuda oru nalla Program pannuvaar..
Kalaila refer panna Syntax kuuda marandhu poogum
aana "Chinna chinna chittugala nu" jungle book pattu mmhum!!
Chandrakantha vai marakkavendam. Antha title song um athula vara charactersum romba famous.
சுராக், சக்திமான்,ஆர்யமான், மற்றும் Starworld இல் Knightrider famous
Post a Comment