Thursday, June 4, 2009

அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி


 

எனது முன்னய பதிவொன்றில் Google Squared எனும் புதிய தேடுபொறி விரைவில் அறிமுகமாகவிருப்பதாகக் கூறியிருந்தேன். அது இப்போது அறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமான சிறிது நாட்களிலேயே கூகுல் இதனை அறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமான போட்டியின் உச்சத்தைக் காட்டுகிறது.

 


Google Squared  ஆனது Microsoft இன் Bing எவ்வாறு தகவல்களைப் பட்டியலிடுகிறதோ, ஏறத்தாள அதேமுறையில் பட்டியலிடுகிறது. அல்லது அதைவிட ஒருபடி மேல் என்றுகூடச் சொல்லலாம். Google Squared ஆனது நாம் தேடும் தகவலினை தொகுத்து, மிகவும் தெளிவாக அதுபற்றிய விளக்கம், சம்பந்தப்பட்ட படம், அதன் செயற்பாடுகள் என அனைத்துத் தேவையான விடயங்களையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமல்லாது இவ்வாறு பட்டியலிடும் விடயங்கள் நாம் தேடும் விடயத்துக்கேற்ப மாறுபடுகிறது. அந்தந்த விடயங்களில் எது மிக முக்கியமோ, அதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.  எமக்கு வேறு விடயங்களும் அதில் தேவை என்றால் நாமாக இன்னுமொரு வரியைச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

 



உதாரணமாக நான் தேடிய planets என்ற பதத்திற்கு படத்தில் காட்டியதுபோல முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு வரியில் இருக்கும் முடிவுகள் அனைத்தும் ஒரு தளத்திற்கே சொந்தமானவை அல்ல, அவை பாவனையாளர்களின் முன்னய தெரிவுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தே தெரிகின்றன.

 

உதாரணத்திற்கு நான் தேடிய planets என்பதற்கு வந்த Earth என்ற முடிவில் படம் ஒரு தளத்திலிருந்தும், விளக்கம் இன்னொரு தளத்திலிருந்தும் கிடைக்கின்றது. உங்களுக்கு அந்தப் படம் வேண்டுமானால் படத்தில் கிளிக்கி அந்தப் படம் உள்ள தளத்திற்குச் செல்லலாம். அது வேறொரு Tap இலேயே திறக்கும். விளக்கத்தை இன்னொரு Tap இல் திறந்துகொள்ளலாம். படமும் விளக்கமும் அதிகமானோரால் விரும்பப்பட்டதாக இருப்பதால் உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும். இங்கே சென்று Google Squared இனை பரிசோதித்துப் பாருங்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக இது நாம் மிகவும் பழகிய கூகுலின் முறை.  கூகுலில் தேடும் முறை எமக்கு பழகியதாகையால் இதிலும் இலகுவாக இருக்கும். அத்துடன் இவ்வாறு தகவல்களை தொகுத்துத் தருவதால் மாணவர்களுக்கு இது மிக உதவியானதொரு முறை. சாதாரணமாக தேடி தேவையானதை எடுப்பதற்கு போதும் போதுமென்றாகிவிடும். இதிலே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற தளங்களுக்குள் போய் நேரத்தை வீண்டிப்பது தவிர்க்கப்படும்.

 

 

கூகுலின் இந்த அதிரடியால் Microsoft இன் Bing  இணையச் சந்தையைப் பிடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது.


12 comments:

Suresh on June 4, 2009 at 3:50 PM said...

சூப்பர் தகவல்

Subankan on June 4, 2009 at 5:04 PM said...

@ Suresh

நன்றி

பனையூரான் on June 4, 2009 at 8:06 PM said...

நல்ல தகவல் சுபாங்கன்

Subankan on June 4, 2009 at 8:11 PM said...

@ பனையூரான்

நன்றி

மாணவன் on June 4, 2009 at 8:26 PM said...

பயனுள்ள தகவல்.

Subankan on June 4, 2009 at 9:14 PM said...

@ மாணவன்

நன்றி

Anonymous said...

Thank you.

- Kiri

Subankan on June 4, 2009 at 9:47 PM said...

Thanks Kiri

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Anonymous said...

உங்கள் பின்னூட்டம் பார்த்தோம்,

இப்போது தமிழர்ஸில் Vertical வோட்டு இருக்கிறது விரைவில் Horizontal வோட்டு பட்டை வரும்,

சக்கரை சுரேஷ் இதே டிமெபிளேட் தான் வைத்து இருக்கிறார்.

நீங்கள் ஏதேனும் வோட்டு பட்டை சம்பந்தமாக உதவி வேண்டும் என்றால் இந்த சுட்டியில் பாருங்க தமிழர்ஸ் பிளாக்

மேலும் உதவி வேண்டும் என்றால் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள் சுபா

நன்றி
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Unknown on June 6, 2009 at 1:41 PM said...

சகோதரா...
உங்கள் பதிவைவ சுட்டுவிட்டார்கள் போலிருக்கிறதே...

http://thileep-in-pathivu.blogspot.com/2009/06/google-squared.html

Subankan on June 6, 2009 at 2:21 PM said...

@ கனககோபி

தகவலுக்கு நன்றி நண்பா

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy