பூச்சிய நேரத்தில்
பிறந்தது இங்கே
புதியதோர் ஆண்டு

Inbox ஐ நிரப்பிய
Forward SMS களில்
நிறைந்தது என் மனமும்தான்
அவற்றில் குடியிருந்த
குறியீட்டுப் பொம்மைகளுடன்
கூடிக் குதூகலித்தது
நேற்றய கவலைகளை
சென்ற வருடத்துக் கவலைகளாக்கி
மறந்தே விட்டது மனிதம்
இடி ஓசையென வெடியோசை முழங்க
இனித் தடையில்லையென ஈர்க்கில்கள் சீறிப்பாய
சாதி சமயமின்றி ஆடிய கொண்டாட்டத்தில்
ஏனோ தோன்றியது எனக்கு
"தினமும் பிறந்தாலென்ன புதியதோர் ஆண்டு"

0 comments:
Post a Comment