Saturday, January 17, 2009

ஆடைக்குறைப்பு – ஒரு அலசல்


தமிழ்த் திரைப்படங்களில் இன்று ஹீரோயினின் அங்கங்களிற்கு இருக்கும் மரியாதை ஹீரோவிற்குக் கூட இல்லை என்னுமளவிற்கு ஆடைக்குறைப்பு திரைப்படங்களை ஆக்கிரமித்துள்ளது. நல்ல கதையம்சமுள்ள படங்களிற்கூட பாடல்க்காட்சிகள் வந்துவிட்டால் குடும்பக் குத்துவிளக்காக இருக்கும் நடிகை குட்டிப் பிசாசாக மாறிவிடுகிறார். ஆனால் இதைப்பற்றி தயாரிப்பாளரிடமோ, இல்லை இயக்குனரிடமோ கேட்டால் உடனே ஹிந்திப் படங்களுடன் ஒப்பிட்டு அதன் பாதிகூட இல்லை என்பார்கள். ஆனால் அங்கே வெளியாகும் ‘தாரே சமன் பார்’ போன்ற சிறந்த படங்களின் பாதியளவு கூட எடுக்க மாட்டார்கள். குடும்பக் குத்துவிளக்காக இருக்கும் எமது ( ஒரு உரிமைதான் ) தமிழ் நடிகைகளும் ஹிந்திப்படங்களில் காட்சிப் பொருளாகிவிடுகிறார்கள்.மூன்று மணிநேர சினிமாவில் தோன்றிய இக் கலாச்சாரம், இன்று நாகரிகம் என்ற பெயரில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்துவிட்டது. நம் கலாச்சாரத்திற்கு முரணாக இருப்பதாக பலர் கூறினாலும், இதில் கலாச்சாரத்தை சம்பந்தப்படுத்த நான் விரும்பவில்லை, அதைப்பற்றிப் பின்னால் கூறுகிறேன். அந்தரத்தில் தொங்கும் ஆடைகளும், அது எப்போது அவிழ்ந்துவிழும் என பின்னாலேயே அலையும் கூட்டமும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. நாகரிகம் என்ற பெயரில் தமது உடலமைப்பிற்கு சற்றும் பொருந்தாத ஆடைகளை அணியும் பெண்களைப் பார்க்கயில் ஐயோ பாவம் என்றிருக்கும். ஆனால் அழகாக உடுத்துவதே நாகரிகம்தான். என்னைப் பொறுத்தவரைஅடுத்தவர் கண்ணுக்கு விசரமாகத் தெரியாத எந்த ஆடையுமே நல்ல ஆடைதான்.

இந்த ஆடைக்குறைப்பால்தான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை. ஆண்கள் திருந்தலாம்தானே என்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் ஆபாசமின்றி உடுத்தினாலே அதைத் தடுக்கமுடியுமே. மறைந்திருக்கும் ஒருபொருள் கண்ணுக்குத் தெரியும்போது பார்வை அதன்மீது திரும்புவது இயற்கையானதே. இதனால் ஆண்கள் செய்வதை நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் எப்போதும் அடுத்தவரைத் திருத்துவதை விட தான் திருந்துவது சுலபம் என்பது பலருக்குப் புரிவதில்லை.

உண்மையில் ஆடை விடயத்தில் எமது கலாச்சாரம் என்பது ஆங்கிலேய ஆட்சியின் எச்சம் என்பது எங்கோ வாசித்த ஞாபகம். அன்றய ஆங்கிலேயர்களின் ஆடைகள் உடலை முழுவதும் மூடியதாக இருக்குமாம். அவர்கள் உணவுண்ணும் மேசையின் கால்கூட வெளியில் தெரியாதவாறு மூடி வைப்பார்களாம். எமது ஆடைமுறையோ அதற்கு நேர் மாறாக இருந்ததாம். சிறிது யொசித்துப் பார்த்தால் இதை உண்மை என ஊகிக்க முடியும். ஆடை அணியத் தொடங்கிய காலத்தில் அது அவர்கள் வாழும் சூழலின் தன்மையில் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. எமது வெப்பமான நாடுகளில் அங்கங்களை மறைக்க மட்டுமே ஆடை தேவை. ஆனால் குளிர் நாடுகளில் குளிரிலிருந்து காக்கும் தேவையும் இருக்கின்றது. ஆங்கிலேயர்கள் தமது கலாச்சாரத்தை இங்கே விட்டுவிட்டு எமது கலாச்சாரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். எமது கோவில்களில் காணப்படும் சிற்பங்களே இதற்குச் சான்று. இன்றும் சில இந்தியக் கிராமங்களில் இடுப்பிற்கு மேல் வெறும் முந்தானையால் மூடும் பெண்களும் இருக்கின்றார்கள். ஆனால் இந்த ஆடைத் Theory க்கு விதிவிலக்காக வெப்பப் பிரதேசங்களில் அதிகம் வாழும் முஸ்லீம் பெண்களின் பர்தா உள்ளது. உடலை முழுவதும் மூடும் கறுப்பு ஆடை வெப்பத்திற்கு ஏற்றதல்ல. ஆனால் அதற்கும் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கக்கூடும்.என்னதான் சொன்னாலும் ஆடை விடயத்தில் ஆண்கள் பாவம்தான். ஆங்கிலேயர் கூட எமது ஆடைகளைக் கண்டுகொள்ளவில்லை.

1 comments:

Think Why Not on January 20, 2009 at 10:40 AM said...

Good article friend... We never can force any one to change, but can request...

அவிழ்த்து போட்ட ஆட்டமில்லாத படம் எடுக்கும் நல்ல நெறியாள்கையாளர்களும் இருக்காங்க... ஆனா அவர்களுடைய படம் ஒன்றும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதில்லை... அதனால் தான் தமிழ் ரசிகர்களின் ரசனை மீது அவர்களுக்கும் சந்தேகம் வந்து மாறிடுறாங்க..

நல்ல படம் ஐந்தை ஐம்பது நாள் ஓடவைங்க... அவிழ்த்து போட்டு ஆடுற படங்களை பார்க்கவே வேண்டும்... அப்புறம் பதிவு போடுங்கய்யா தமிழ் சினிமா மாறிச்சா இல்லையா....!

:)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy