படத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே என்னைக் கவர்ந்த விடயம் படத்திலிருந்த கார்ப்பயணம். வேகமான பைக் பயணங்கள் எப்போதும் என் ஃபேவரிட். அந்த ஒரே விடயம்தான் அங்காடித்தெரு படத்தைத் தவிர்த்து, பையாவைப் பார்க்கத் தூண்டியிருந்தது.
படத்தின் கதையை ஒரேவரியில் சொல்லச்சொன்னால் அதே தமிழ்ப்படம்தான். நாயகன் பெயர்கூட சிவா. இருந்தும் படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வேகமும், நாயகன், நாயகி, மற்றும் அந்தக் கார் மூன்றையும் வைத்தே அலுக்காமல் பெரும்பாலான காட்சிகளை நகர்த்திச்சென்ற விதமும் அருமை.
திரையில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரம் கார்த்திக்கு. அழகாகத் தெரிகிறார். கண்களில் காதலும், மெல்லிய குறும்புச் சிரிப்புமாக அவர் கார் ஓட்டிச் செல்லும் காட்சிகளில் ரசிக்கவைக்கின்றார். தன் காதலை காதலியிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனக்குள் கிடந்து உருகுவதும், நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஒவ்வொரு கணத்தையும் வர்ணிப்பதும் யதார்த்தம். சில காட்சிகளில் சூர்யாவை நினைவுபடுத்தினாலும், எனக்கென்னவோ இப்படியேபோனால் இன்னும் இரண்டொரு படங்களில் சூர்யாவைவிட எனக்கு அதிகம் பிடித்துவிடுவார்போல் தெரிகிறது, க்ரேட்!
காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் வேலைதான் என்றாலும், தன் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் தமன்னா. முக்கியமாக பாடல்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கலாம்போல் இருக்கிறது.
ஒளிப்பதிவு – கலக்கல். புழுதிக் காட்டில் சீறிப்பாயும் கார் சேசிங்கும், பாடல் காட்சிகளும் இப்போதும் கண்ணுக்குள் நிற்கின்றன. முக்கியமாக சுத்துதே சுத்துதே பூமி பாடலில் பௌர்ணமி இரவு வெளிச்சமும், கிளம்பிப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளும் வாவ்! தேங்ஸ் டு மதி!!
இசை – சான்சே இல்லை. பாடல்கள் ஏற்கனவே பிடித்துப்போய்விட்டன. பின்னணி இசையும் துள்ளி விளையாடுகிறது. முக்கியமாக கார்த்தி தமன்னாவை விட்டுவிட்டு தனியாகத் திரும்பும் காட்சியின் இசையும், அப்போது வரும் சோகப்பாடலும் க்ரேட். தியேட்டரிலிருந்து வந்ததுமுதல் ஹம் பண்ணிக்கொண்டேயிருக்கிறேன் – துளித்துளித்துளி மழையாய் வந்தாளே…..
கமர்ஷியல் படங்களுக்கேயுரிய அதே முடிவளர்த்த வில்லன் கூட்டம், அதே ஃபைட், அதே ஹீரோயிசம், அதே லாஜிக் மீறல்கள் எல்லாவற்றையும்தாண்டி ரசிக்கவைக்கின்றது அந்தக் கருப்புக் காரும், அதன் வேகமும்.
பையா – பார்க்கலாம்யா!
15 comments:
//திரையில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரம் கார்த்திக்கு.//
எல்லாத்துக்கும் இதையே வச்சிருக்கிறீங்க என சொல்லுறதுக்கு? :P
வருகையைப் பதிவு செய்கிறேன்.... :)
இன்று பார்க்கலாமென்று இருக்கிறேன்.
பாடல்கள் பிடித்து போய்விட்டன, அதற்காகவே பார்க்க வேண்டும்
//இசை – சான்சே இல்லை. //
இப்படியென்றால்?
இசையமைப்பாளருக்கு இனி வாய்ப்புகளே கிடைக்காது என்கிறீர்களா? :-o
[[வேகமான பைக் பயணங்கள் எப்போதும் என் ஃபேவரிட்]]
R u crazy abt it even after ur accident?
[[வேகமான பைக் பயணங்கள் எப்போதும் என் ஃபேவரிட்]]
R u crazy abt it even after ur accident?
பாடல்காட்சிகளுக்காக இன்னொரு தடவை பார்க்கலாம் :-)
இதுக்குப்பிறகும் பார்க்காமல் இருந்தால் இந்தப்படத்தை சுப்பு கோவிச்சுக்குவாரே... நல்லா இருக்குடா விமர்சனம்.
பையா விமர்சனம் படத்தினைப் பார்க்கத் தூண்டும் வகையில் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
இன்னும் படம் பார்க்கவில்லை . பகிர்வுக்கு நன்றி !
படம் பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் .
Superb Masala film..
I love it..;)
Songs really rocks..;)
படத்தில் இசைதான் முக்கிய பலம் அண்ணா
இசை இல்லாவிடால் ஒருமுறை மட்டுமே பார்க்க கூடிய திரை இது!!!
உங்கள் கருத்தில் படம் நன்றாகவே இருக்கிறது
நல்ல விமர்சனம் தல. உங்களை நம்பி நாளைக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். பார்க்கலாம். :)
கன்கொன் || Kangon said...
//இசை – சான்சே இல்லை. //
இப்படியென்றால்?
இசையமைப்பாளருக்கு இனி வாய்ப்புகளே கிடைக்காது என்கிறீர்களா? :-o
கோபிக்கு யாராவது சோடா கொண்டு வந்து தரவும். கஷ்டப்பட்டு கேள்விகள் கேட்டிருக்கார். :))
//கோபிக்கு யாராவது சோடா கொண்டு வந்து தரவும். கஷ்டப்பட்டு கேள்விகள் கேட்டிருக்கார். :)) //
நன்றி தல...
உங்களப் போல ஆக்களப் பாத்துத்தான் வானத்தப் போல போன்ற படங்களை எடுக்கிறார்கள்...
எதற்கும்,
போர்ற்றலோ சொல்லவும், இப்போது கோக் குடிப்பதைக் குறைத்துவிட்டேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment