
இதுவரை வானின் இரண்டாவது பிரகாசமான பொருளாக இருந்த வெள்ளியை மூன்றாமிடத்துக்குத் தள்ளிவிட்டது சர்வதேச விண்வெளி நிலையம். கடந்த மார்ச் மாதம் அதில் பொருத்தப்பட்ட சூரியத் தட்டுக்கள் மூலம் தெறிக்கும் ஒளியாலேயே இது சாத்தியமானது.
கடந்த மார்ச் 20ம் திகதி புவியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சூரியத் தட்டுக்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் இந்த விண்வெளி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 120 Kw ஆக அதிகரித்திருப்பதுடன், அங்கு தங்கியிருக்கக் கூடிய வீரர்களின் எண்ணிக்கையும் 3 இலிருந்து 6 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அதன் சூரியத்தட்டுக்களின் மொத்தப் பரப்பளவு 1 ஏக்கராக அதிகரித்திருக்கிறதாம்.
இந் நிலையம் 1998இல் ரஸ்யாவால் விண்ணுக்கு ஏவப்பட்டது. அதன்பின் காலத்துக்குக்காலம் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இப்போது பொருத்தப்பட்ட சூரியத் தட்டுக்களின் மூலம் அது தனது நீளத்தின் உச்ச அளவை அடைந்துள்ளது. ஆனால் மேலும் சில பாகங்களை இனிவரும் காலங்களில் அதன் மத்திய பகுதியிலும் பொருத்த உள்ளார்களாம். இப்பணிகள் அனைத்தும் 2011 இல் பூர்த்தி அடையும்.
பூமிக்கு வெளியே மனிதனால் நிர்மானிக்கப்பட்ட மிகப் பெரிய பொருளான இது பூமியிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் தினமும் 15.7 தடவை சுற்றிவருகின்றது.
சரி, இதைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதா? இங்கே சென்று நீங்கள் இருக்கும் இடதைத் தெரிவுசெய்தால் நீங்கள் எப்போது பார்க்கமுடியும் என அறிய முடியும்.
நன்றி – வீரகேசரி
1 comments:
ஒரு மிக அருமையான விஞ்யான பதிவு. நல்ல பகிர்தல் சுபா :-) தொடர்ந்து இது மாதிரி நல்ல விசியங்களை பகிர்ங்கோ
Post a Comment