Sunday, April 26, 2009

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்





Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.

ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை  அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.

இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.

முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!

14 comments:

Prabu M on April 26, 2009 at 11:50 PM said...

//
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) //

ஓவ‌ர் குறும்பு!!
ஹா ஹா...
NIce one friend

மாசிலா on April 27, 2009 at 1:26 AM said...

முனியம்மா, கருத்தாயி, அஞ்சலை, குப்பம்மா, பரவதம் ... போன்ற அடித்தள ஆனால் உண்மையான 100% தமிழ் பெயர்களை கொண்ட தமிழ் மக்களின் பெயர்களை ஒப்பிட்டு அவர்களின் (ஆங்கில) படிப்பறிவு இல்லாமையை, அயல் நாடுகளுக்கு போய் வேலைகள் செய்யும் அளவுக்கு திறமையற்றவர்கள் என்கிற உங்களின் முட்டாள்தன நம்பிக்கையின் அடிப்படையில் வக்கிர எண்ணத்துடன் நீங்கள் கேளி, கிண்டல் செய்திருப்பதை நான் இவர்களின் குலத்தை சேர்ந்த ஒரு பறையன் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கிறேன். அயல்நாட்டு வெள்ளைக்கார முண்டச்சி ஒருத்தியின் முட்டாள்தனத்தை விமர்சனம் செய்ய சொந்த தாய்நாட்டு உண்மைத் தமிழச்சி ஒருவரின் வாழ்க்கை முறையை ஒரு முட்டாள்களின் சின்னமாக உபயோகிப்பது கொஞ்சமும் நியாயமானதாக‌ தெரியவில்லை.உங்களது பெற்றோர்கள், பெரியவர்கள் அல்லது உங்களைப்போன்றவர்களும் அவர்களது வாழ்க்கையில் குறுக்கிடாமல் அனாவசியமாக அவர்களை வம்பிற்கு இழுக்காமல் அவர்கள் இட்டப்படி வாழவிடுவதே நான் உங்களுக்கும் கொடுக்கும் ஒரு "சீறிய அறிவுரை". நீங்களும் உங்களை உங்களைப்போன்ற சில சமுதாய சிரங்குகளும் கற்பனை செய்திருக்கும் அந்தவகை முனியம்மாக்களும், கருத்தாயிகளும் மற்றும் பல குப்பம்மாக்களும் பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட பிரஞ்ச் குடியுரிமை பெற்ற பல பறையர்கள் பிரான்சிலும் பாண்டிச்சேரியிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனபது உமக்கு தெரியுமா? எனவே, மனம்போன போக்குப்படி இப்படி கண்டபடி உளறுவதை நிறுத்திக்கொள்ளவும்.

Anonymous said...

மாசிலா அண்ணைக்கு ஒரு சோடா உடைங்கப்பா!

Subankan on April 27, 2009 at 6:39 AM said...

@ மாசிலா

ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு எழுதினேனே அன்றி நீங்கள் கூறுவது போலெல்லாம் நான் நினைக்கவே இல்லை மாசிலா, தவறாக இருந்தால் மன்னிக்கவும். அனானி, உங்களுக்கும்தான்.

Subankan on April 27, 2009 at 6:40 AM said...

@ பிரபு . எம்

நன்றி

Tech Shankar on April 27, 2009 at 9:42 AM said...

சத்தியமான வார்த்தை.

//அந்தவகை முனியம்மாக்களும், கருத்தாயிகளும் மற்றும் பல குப்பம்மாக்களும் பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட பிரஞ்ச் குடியுரிமை பெற்ற பல பறையர்கள் பிரான்சிலும் பாண்டிச்சேரியிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனபது உமக்கு தெரியுமா?

Saung Aki on April 27, 2009 at 10:18 AM said...

Hi, nice to visit in your site. Have a nice day and Greeting's from Indonesia

Subankan on April 27, 2009 at 2:58 PM said...

@ Saung Aki

thanks

வழிப்போக்கன் on April 27, 2009 at 7:52 PM said...

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) //

நல்லா மாத்தி இருக்கீங்க...
:)))

வழிப்போக்கன் on April 27, 2009 at 7:53 PM said...

முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!//

நாம எப்பவுமே அலர்ட்டு தான்..
:)))

Subankan on April 27, 2009 at 8:51 PM said...

@ வழிப்போக்கன்

இனிமே இந்த வேலையே வேணாப்பா

//நாம எப்பவுமே அலர்ட்டு தான்//

இருந்தா சரி

Happy Smiles on April 28, 2009 at 6:57 AM said...

ello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India

மங்களூர் சிவா on April 30, 2009 at 12:37 AM said...

/
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
/

ROTFL
:)))))))

@ மாசிலா

cool down

Sinthu on May 1, 2009 at 12:01 PM said...

"முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!"
எல்லோரும் அறிமுகமாகும் போது முன் பின் தெரியாதவர்கள் தானே சுபாங்கன் அண்ணா...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy