Tuesday, April 28, 2009
பேருந்துப் பயணம்
எப்போது பார்த்தாலும்
வித்தியாசம் காட்டும்
என்றும் இனிக்கும்
சாலை ஓரங்கள்
ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்
வீதி விபத்தைத் தடுப்பதற்கோ
இல்லை வீடு செல்லத் திரணியற்றோ
சைக்கிளையும் முந்த விடும்
சாமர்த்திய ஓட்டுணன்
கூட வரும் பயணிகளைப் பார்க்கயில்
சில சமயம் ஆதங்கங்கள்
பல சமயம் மனதில்
பூகம்பங்கள்
தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player
எல்லாவற்றுக்கும் மேலாக
தனிமையில் நானிருக்க
ஏளனமாய் எனைப் பார்க்கும்
பக்கத்து சீட்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நல்லா இருக்கு,.
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@ லோகு
நன்றி
அருமையான அனுபவம்.. என்ன செய்யிறது தம்பி தனிய பஸ்ல அதுவும் கொழும்புல பயணம் செய்யேக்கை இப்படி கவலையான கவிதைகள் வரும் தான்.. ;)
மிக அழகாக எழுதி இருக்கிங்க ...
போட்டில் வெற்றி பெற வாழ்த்துகள்
//ஏறியவுடனே என்னைப்பார்த்து"முன்னே வா" எனக்கூறும், ஆனால்மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்நடத்துனன்/
ஹா ஹா
உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க
ஆளும் கட்சிக்கு வோட்டு ?
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html
சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html
ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்
தலை , ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதுங்க
தம்பி உங்களை பற்றி ஒரு சுயசரிதை எழுதுங்களேன்
@ Suresh
நன்றி
//
Anonymous said...
அருமையான அனுபவம்.. என்ன செய்யிறது தம்பி தனிய பஸ்ல அதுவும் கொழும்புல பயணம் செய்யேக்கை இப்படி கவலையான கவிதைகள் வரும் தான்.. ;)//
அனானிக்கும் அனுபவம் அதிகம்போல..
lol
//Anonymous said...
ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்
தலை , ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதுங்க
தம்பி உங்களை பற்றி ஒரு சுயசரிதை எழுதுங்களேன்//
ஏன்? நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலியா?
உங்கள் தொலை பேசி இலக்கம் தர முடியுமா . நான் உங்கள் ஒரு நண்பி
//Anonymous said...
உங்கள் தொலை பேசி இலக்கம் தர முடியுமா . நான் உங்கள் ஒரு நண்பி//
வேண்டுமானால் மின்னஞ்சலினூடு தொடர்புகொள்ளுங்கள். (subankanb@gmail.com)
தரமான பதிவு.......
வாழ்த்துக்கள் சுபாங்கன்
@ வசந்த்
;நன்றி
"வீதி விபத்தைத் தடுப்பதற்கோஇல்லை வீடு செல்லத் திரணியற்றோசைக்கிளையும் முந்த விடும்சாமர்த்திய ஓட்டுணன்"
அது ஒரு காலம்.. யாழ்ப்பாணத்தில் மட்டுமே சாத்தியமானது..
"தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player"
உங்களுக்காக மட்டுமே வாகனம் ஓட்டிராங்களோ?
சொல்லவே இல்ல..
"எல்லாவற்றுக்கும் மேலாகதனிமையில் நானிருக்கஏளனமாய் எனைப் பார்க்கும்பக்கத்து சீட்"
உண்மையாவா?
என் நீங்க பேரூந்தில் என்றும் போது மட்டும் ஒரு இருக்கையை உங்களுக்காகவே ஒதுக்கி விடிரான்களோ? நல்லது தானே... வசதியா ஒரு இருக்காய்.. அதிச்டக் காரன் நீங்க..
Post a Comment