Thursday, February 19, 2009

வாங்க பழகலாம் – 3 - இல்லையென்று சொல்லுங்கள்!

என்னைக்கேட்டால் உலகத்திலயே ரொம்பக் கஸ்டமான வார்த்தைஇல்லைஎன்றுதான் சொல்லுவேன். ஒருத்தற்ற முகத்தைப்பார்த்து அந்த வார்த்தையைச் சொல்லும் தைரியம் எங்கள்ள ரொம்பப் பேருக்குக் கிடையாது. அடுத்தவன் என்ன நினைப்பானோ எங்கிற பயம்தான் காரணம். எல்லாருக்கும் தான் நல்லா இருக்கிறத விட, அடுத்தவன்கிட்ட நல்ல பெயர் வாங்குறதுதான் முக்கியமாக் கிடக்கு. தான் நல்ல பேர் வாங்குறது சுயநலம் எண்டா, அடுத்தவன்கிட்ட நல்ல பெயர் வாங்குறதுக்காக நடிக்கிறதும் சுயநலம்தான்.

உங்ககிட்ட நீங்களே கேட்டுப்பாருங்க. அடுத்தவங்க கிட்ட, அவங்க முகத்துக்கு நேராப்பாத்துமுடியாதுங்கிற வார்த்தையை உங்களால சொல்ல முடியுமா? ரொம்பப் பேருக்கு முடியாது. அதனாலயே நாம எங்க சுயத்தை இழக்கிறோம்ன்னுதான் சொல்லணும். அப்படிச் செய்யிறதால நாம எங்க வேலையையும் முடிக்க முடியாம, அடுத்தவங்க கேட்ட வேலையிலயும் கவனம் செலுத்த முடியாப் போயிடும். இதனால உங்களுக்கும் நஸ்டம், அவங்களுக்கும் நஸ்டம். அதுக்குப் பதிலா உங்களால முடியாதுன்னு கூறி, அதுக்கான காரணத்தையும் சொல்லிட்டாப் புரிஞ்சுக்குவாங்க. முக்கியமா இந்தப்பண்பு தொழில்ல உயர்மட்டத்தில இருக்கிறவங்களுக்குத் தேவை.

ஒரு உதாரணத்தை எடுத்துக்குவம். ஒரு லீவு நாள்ள நீங்க வீட்டில இருக்கீங்க. அன்னிக்கு வீட்ல ஒரு முக்கியமான வேலை செய்யணுமுன்னு நினைச்சிட்டிருக்கீங்க. அந்த நேரம், உங்க நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட வந்து, ட்டிறஸ் செலக்ட் பண்ணணும், என்கூடக் கடைக்கு வாரியான்னு கேக்குறான். நீங்களும் ஆமான்னு சொல்லி, அவன்கூடப் போறீங்கன்னு வச்சுக்கங்க. உங்க நினைப்புப் பூரா நீங்க வீட்டில செய்ய வேண்டிய வேலை மேலயே இருக்கும். அதனால நண்பன்கூட ஒழுங்காச் சேர்ந்து ட்டிறஸ் செலக்ட் பண்ணவும் முடியாது. உங்க வீட்டு வேலையும் முடியாது. இதுக்குப் பதிலா, நீங்கஇல்லை மச்சான், இன்னிக்கு எனக்கு வீட்டில முக்கியமான வேலை இருக்கு. இன்னிக்கு விட்டா, இனி டைம் கிடைக்காது. இப்ப வர முடியாது. வேணும்னா ஈவிணிங் போகலாம்ன்னு சொல்லிப்பாருங்க. அவங்களும் புரிஞ்சுப்பாங்க. உங்க வேலையும் முடியும். அதுக்காக எல்லா நேரமும் இல்லைன்னு சொல்லணுமுன்னு இல்லை. ஆனா, இல்லைன்னு சொல்லவேண்டிய இடத்துல ஆமான்னு சொல்லாதீங்க. என்ன புரிஞ்சுதா? இல்லைன்னா, இல்லைன்னு சொல்லிடுங்க.


6 comments:

Valaipookkal on February 19, 2009 at 10:54 AM said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஆ.ஞானசேகரன் on February 19, 2009 at 11:08 AM said...

இப்படி உண்மையா சொல்லி வாங்கி கட்டிக்கொண்டதுதான் அதிகம். அதுக்கு பொய்யான நிலையிலேயே இருந்துவிட்டு போகலாம் போல இருக்கும்...

இதையும் பாருங்க
http://aammaappa.blogspot.com/2008/12/blog-post.html

கார்த்தி on February 19, 2009 at 11:36 AM said...

தம்பி நீங்க சொன்னது 100 க்கு 100ம் சரி.
எனக்கும் உதே பிரச்சனைதான் கனக்க பேருக்கு இல்லையெண்டு சொல்ல முடியாமல் நன்றாக அனுபவித்ததுண்டு.
எனது Training ல் கூடி...

pukalini on February 20, 2009 at 8:56 AM said...

அதெல்லாம் முடியாது. முடியாதுன்னா முடியாது தான்.

மாற்றுக்கருத்து மாடசாமி said...

எங்கட பிரச்சினயை விளங்கிக்கொள்ளுறவனுக்கு சொல்லலாம். ஆனா சிலபேர் இருக்காங்கள் விளங்கியும் விளங்காத மாதிரி திரும்ப திரும்ப கரைச்சல் கொடுப்பாங்கள்.இன்னும் சிலர் இருக்காங்கள் எல்லாத்துக்கும் எடுத்த உடனயே ஏலாது என்டு சொல்லிப்போடுவாங்கள்.

எத்தனை விதங்களில் மனிதர்கள்....("எத்தனை மனிதர்கள்" சீரியலின்ர பாட்டு இது. எங்காலும் இருந்தா URL ஐ போடவும்)

Anonymous said...

Be ALIVE:::Take da SPOT LEVEL READING::PROVE your WIT& GUT::Thts IT

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy