Sunday, February 1, 2009

துரித உணவகமும், துரிதமாக மாறும் எம்மவரும்.




பெரும்பாலும் எல்லோருக்கும் McDonald’s உணவகத்தைப்பற்றித் தெரிந்திருக்கும். உலகெங்கும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அதன் கிளைகள் இருக்கின்றன. அவர்கள் McDonaldism எனும் ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றனர்.

அதாவது அவர்களது எந்த ஒரு கிளையிலும் வாங்கும் ஒரு குறிப்பிட்ட வகை உணவுப்பொருள் நிறை, சுவை, தரம், சுத்தம், கலக்கப்படும் பதார்த்தங்கள் என்பன ஒரே மாதிரியாக இருக்கும் என்ற தனித்துவம் பேணுகின்றனர்.


அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வரலாம். பாம்பிற்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்குக் கூட்டத்தினர் அதிகமாகிவிட்டனர். சூள்நிலைக்குத் தக்கமாதிரி தம்மை மாற்றுவோர் இன்று அதிகம். ஆனால் இன்றய போட்டிகள் கூடிய உலகத்தில் அது அவசியம் எனவும் கொள்ளலாம்.

ஆனால் வெளிநாடு போகும் நம்மவர்கள் ஆளே மாறிவிடுகின்றனர். A,BC,D கூட எழுதத் தெரியாது இருப்போர் கூட வெளிநாடு சென்று ஒரு வருடத்தில் திரும்பிவந்து ‘ஐ டோன்ட் நோ டமில்யா’ என்கிறார்கள்.

சரி அவர்களாவது வெளிநாடு போய்த்தான் மாறினார்கள் என்றால் அண்மைக்காலங்களில் இலங்கையின் வட பகுதியிலிருந்து கொழும்பில் குடியேறியவர்களோ அதைவிட மோசம். வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே நடை, உடை, பேச்சுமுறை போன்றவற்றில் தெளிவான வித்தியாசம் தெரியும். அதாவது பரவாயில்லை, சிலர் வேற்று இனத்தவர் போல் வேடமிட்டும் திரிகின்றனர். முடியல…

வெள்ளைக்காரனுக்கு சாப்பாட்டிலேயே தனித்துவம் தேவைப்படுகின்றது. நமக்கு?

1 comments:

A N A N T H E N on February 5, 2009 at 5:41 PM said...

//இலங்கையின் வட பகுதியிலிருந்து கொழும்பில் குடியேறியவர்களோ அதைவிட மோசம்.//

அவங்கல்லாம் யாரு?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy