Saturday, February 7, 2009

Headset கிறுக்கர்கள்





உண்மையிலேயே Headset கண்டுபிடித்தது வாகன ஓட்டிகளுக்காகத்தான். செல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதால் accident அதிகமாவதால கண்டுபிடிச்சாங்க. உண்மயிலேயே நல்ல விசயம்.

ஆனா உணவுப்பொருட்கள் விலையேறும் இந்தக் காலத்துல Electronic சாமான்கள் விலையோ ரொம்பக் குறஞ்சுபோச்சு. இதனால ஆளாளுக்கு Radio, Music player இருக்கிற செல்போனைக் கையில வச்சுக்கொண்டு காதில Headset மாட்டிக்கொண்டு திரியிறாங்க.

நாங்க கம்பஸ்சிற்குப் போகும்போது கம்பஸ் பஸ்ஸில ஒண்ணாத்தான் போறது. ஒவ்வொரு நாளும் Trip போற மாதிரி இருக்கும். ஆனா இப்பல்லாம் அளாளுக்கு ஒரு Headset மாட்டிட்டு வந்திடுறானுங்க. கேட்டா அயன் பாட்டு மச்சான் சூப்பரா இருக்குடா என்றோ, இல்லை வெற்றியின் விளையாட்டுச் செய்தி கேட்கிறன்டா என்றோ கடுப்பாக்குவார்கள். இலங்கை அணி தோற்பதை திரும்பத் திரும்பக் கேட்கிறதில என்னதான் சந்தோசமோ?!



கொஞ்ச நாளுக்கு முன்னாடி கம்பஸ்சில Special lecture ஒண்ணு Arrange பண்ணியிருந்தாங்க. PHD முடிச்ச அம்மணி ஒருத்தர் சூப்பரா Slim laptop ஒண்ணோட வந்தாங்க. செல்போனால வர்ற கதிர்வீச்சால ஏற்படுற பிரச்சினையைப் பற்றிச் சொன்னாங்க. அதிலதான் PHD முடிச்சாங்களாம்.

அவங்க அதுக்காக எலிகளை எடுத்து அதுகளுக்கு 21 நாளுக்கு செல்போனில வர்ற கதிர்வீச்சை பட விட்டாங்களாம். அப்புறமா அதுகளோட மூளையை வெட்டிப் பாத்தாங்களாம். உண்மைதான். அவங்க காட்டின படத்துல எலியோட மூளையில வளமைக்கு மாறா சிவப்புப் புள்ளிங்க இருந்தது. அதுக்கு ஏதோ பெயர் சொன்னாங்க. எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியல. ஒருவேளை Medicine படிச்சிருந்தாப் புரிஞ்சிருக்கும். அப்படித்தான் மனுசனுக்கும் நடக்குமாம்.

அதுக்கு மாற்று வழியா அவங்க சொன்னது செல்போனில பேசிறப்ப முடிஞ்ச வரைக்கும் Headset இல்லன்னா Loudspeaker பாவிக்கறதுதான். அதோட முடிஞ்சவரைக்கும் 10 வயதுக்குக் கொறஞ்சவங்களுக்கு செல்போன் கொடுக்க வேணாம் என்டாங்க. அதோட Headset உம் 40 நிமிஷம் பாவிச்சா 10 தொடக்கம் 20 நிமிஷம் காதுக்கு Rest கொடுக்கச் சொன்னாங்க. இல்லன்னா செவிப்பறை பாதிக்கப்படுமாம். பாத்து நடந்துக்கங்க. ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிட்டன், அப்புறம் உங்க இஸ்டம்.

1 comments:

வடுவூர் குமார் on February 21, 2009 at 11:36 AM said...

சரி.நன்றி

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy