ஒரு இணை இயக்குனராக அஜித் அவதாரம் எடுத்திருக்கும் படம் அசல். தகப்பனாக வரும் அஜித்தின் இரண்டாவது தாரத்துக்குப் பிறந்தவர் ஹீரோ அஜித். தனது சொத்துக்களை அசல் வாரிசுகளுக்கு எழுதிவைக்காமல், அஜித்துக்கு எழுதிவைத்துவிட்டு தந்தை இறந்துவிட, தந்தையின் தோற்றத்தில் இருக்கும் அஜித்மீது ஏற்கனவே பொறாமையில் இருக்கும் அவரது தம்பிமாரால் வரும் பிரச்சினைகளைகளையும் அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதும்தான் கதை. ஆனால் அதையே கொஞ்சம் சுவாரசியத்தோடு சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் சரண்.
அஜித், படம் முழுக்கவே அசத்துகிறார். அவரது பாடி லேங்க்விஜும், சிகார் பிடிக்கும் ஸ்டைலும், ஸ்டைலான நடையுமாகக் கலக்குகிறார். அவரது உடலுக்குப் பொருத்தமான காஸ்ட்யூம் மறைக்கவேண்டியவற்றை மறைத்து, அஜித்தை இன்னும் எடுப்பாகக் காட்டுகிறது. நடனம் வழமையான அஜித் பாணி. அவ்வளவாக ஆடாவிட்டாலும், அதுவும் வேண்டாமோ என்று தோன்றியது. சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகமும், கம்பீரமுமாக படம முழுவதையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
பாவனா, இந்தப்படத்தோடு அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டார். அனியாயத்துக்கு அழகாக இருக்கிறார். அழகாக வெட்கப்படுகிறார், அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார், சூப்பராகச் சிரிக்கிறார், அப்படியே கடைசியில் அஜித்தைக் கைப்பிடித்தும் விடுகிறார். கலக்கலான ஒரு இன்னசன்ட் கதாபாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார் இவர்.
சமீரா ரெட்டி. அளவான ஆடைகளோடு அஜித்தை உரசிக்கொண்டே திரிந்தாலும் ஏனோ அவ்வளவாகக் கவரவில்லை. ஒட்டுமொத்த இடத்தையும் பாவனாவே எடுத்துக்கொண்டுவிட்டார். சமீரா, ஐ ஆம் சாரி.
யூகிசேது, சிரிக்கவைத்தாலும், சீரியசான நேரங்களில் கடுப்பைக் கிளப்புகிறார். இடைவேளைக்குப் பிறகு எற்படும் தொய்வுக்கு இவரது பாத்திரமும் காரணமாக இருக்கலாம். குறைத்திருக்கலாம், அல்லது தவிர்த்திருக்கலாம்.
பிரபு நட்புக்காக வந்திருப்பதாலோ என்னவோ இறுதியில் நண்பருக்காகக் கொஞ்சம் அடிவாங்கிவிட்டுப் போகிறார். அவ்வளவுதான். வேறு சொல்லும்படியாக எதுவும் செய்துவிடவில்லை.
படத்தின் ஒளிப்பதிவு அசத்துகிறது. மலேசியாவையும், பிரான்சையும் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஆரம்பக்காட்சி படு அசத்தல். வேகமான சண்டைக்காட்சிகளும் கச்சிதமாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன.
இசை பரத்வாஜாமே? டைட்டிலில் மட்டும் தெரிந்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பாடல்களில் துஸ்யந்தா கலக்கல். இப்போது ‘டொட்டடொய்ங்’ம் பிடிக்கிறது – பாவனாவுக்காக.
கிளைமார்க்ஸ் காட்சி அக்மார்க் தமிழ்ப்படம். பலதடவை பார்த்தமாதிரி இருக்கிறது. இறுதியில் வந்த சண்டைக்காட்சிகூட முன்னயவற்றை விட சுமார். ஏனோவென்று முடிந்துவிடுகிறது.
மொத்த்ததில் அசல் – அஜித் – அசத்தல்.
19 comments:
தலயும் இயக்கப் (அட பட இயக்கமப்பா)பக்கம் தன்ர கவனத்தக் கொண்டுபோறார்....
பாப்பம்...
அப்ப இந்தப் படத்திலயும் அஜித் வடிவா நடி(ட)க்கிறார் எண்டுறீங்களா?
நல்லது.
//பாவனா, இந்தப்படத்தோடு அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டார்.//
மனசில பச்சக் எண்ட வார்த்தைய இப்ப தான் கேள்விப்படுறன்...
//சமீரா, ஐ ஆம் சாரி//
சமீரா, ஐ ஆம் ஜீன்ஸ் அன்ட் ரீ சேட்... :P
அண்ணே, பாவனா இரசிகர் மன்றம் எப்ப தொடங்கிறியள்?
wow kalakkal thala.. thanks.. :)
:)
இப்ப சந்தோஷமா? :)
சொன்னமில்ல..
//அப்படியே கடைசியில் அஜித்தைக்
கைப்பிடித்தும் விடுகிறார்.//
vimarsanaththil ithai thavirththirukkalaam!
வேட்டைக்காரன் ரசிகர் யாரோ மைனஸ் போட்டாங்கள்.:))
அண்ணே நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள் அஜித்தின் ஹெயார் ஸ்டைலை..:p
//சமீரா, ஐ ஆம் சாரி//
சமீரா ஆன்ரி சேட் மட்டும்தானே போடுறா..ஹீஹீ..:p
பாவனாவின் டொட்டடொய்ங்ங் கலக்கல் என..;)
//யூகிசேது, சிரிக்கவைத்தாலும், சீரியசான நேரங்களில் கடுப்பைக் கிளப்புகிறார்//
அவர் இல்லாட்டி படம் டொட்டடொய்ங்ங் அண்ணே..
மற்றது அப்பா அஜித் மகன் அஜித் இருவருக்கும் ஒரே தாடி கட்டிங் செய்திருப்பது கவலையளிக்கிறது,(அசல் எண்டதுக்காக தாடில கூடவா?)
அப்புறம் ரொம்ப நாளைக்குப்பிறகு வந்திருக்கீங்க SO welcome back..;)
அசலாய் வந்திருக்கிரிர்கள்
இன்னும் நான் படம் பார்க்க வில்லை
பார்த்து விட்டு சொல்லுகிறேன் எப்பிடி என்பதை
// பாவனா, இந்தப்படத்தோடு அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டார். அனியாயத்துக்கு அழகாக இருக்கிறார். அழகாக வெட்கப்படுகிறார், அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார்,//'
இதுக்காவது படம் பாக்கனுமே...
நல்லது..:-))))))
வழக்கமாய் எனக்கு அஜித் படம் பிடிக்காது, ஆனால் விஜய் ரசிகனல்ல பார்த்துவிட்டு சொல்கிறேன்.
அஜீத் கெட்டப் மட்டும் அசத்தல்...
நன்றி கோபி, அந்த நடைதான் படத்திலேயே பெரிய ப்ளஸ்
நன்றி கார்த்திக்
ஆமா லோஷன் அண்ணா
சரி வரோ, இனிமே பண்ணிடலாம்
விடுங்க வானம்பாடிகள் சார்
பவன், ஏனய்யா உனக்கு இப்படி ஒரு ஆசை? யூகிசேது படத்தின் போக்கை மாற்றுகிறார். அதுதான் சொன்னேன்
நன்றி சங்கர்
பாத்துடுங்க ஜெட்லி
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி யோ
நன்றி வசந்த், :))
கிளைமார்க்ஸ் காட்சி அக்மார்க் தமிழ்ப்படம். பலதடவை பார்த்தமாதிரி இருக்கிறது//
இவனுக திருந்தவே மாட்டனுகளா
ஐயோ நான் இன்னும் ஒரு படமும் பாக்கலயே என்ன பண்ணுவேன் ... இங்க எங்கயாவது ஓடுதான்னும் தெரியல யே..???
NAN ENNUM PADAM PARKAVILLAI, POTHUVAGA NAN EPPA VARUM PADANGALAI UNGALAI POL MEDIA MULAM VARUM THIRAI VIMARSANGALAI PADITHU VITTU THAN PADAM PARKKA POVEN SO APPADI UNGA VIMARCHANATHAI PARKUM POLUTHU PADAM PARKA POGALAMA OR ERUKAVE ERUKU NAMA NET GALLERY.......... ATULAEY ....MUDUCHADALAMUNU THONUTHU NANBA.
நான் இன்னும் படம் பார்க்க வில்லை.
திருட்டு cd வரட்டும்... :)
நாணும்தான் திருட்டு விசிடி வரும்வரைக்கும் வெயிட்டிங்க..
padam sariyana mokkai
Post a Comment