Sunday, February 21, 2010

உண்மையின் விலை


  
   original_Ajith_49396e497d0c8
இன்று மாலை திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைப் பதிவர்களின் சந்திப்பை முடித்துவிட்டு கணினியைத் திறந்த எனக்கு நடிகர் அஜித் மன்னிப்புக் கேட்கமாட்டேன், வேண்டுமானால் நடிப்பை விட்டுவிடத் தயார் என்ற செய்திதான் மகத்தில் அறைந்தாற்போல் முதலில் கண்ணில் பட்டது.
 
வீட்டில் அப்பா கமல் ரசிகர், அம்மா அஜித் ரசிகர். இதனாலேயே இந்த இரண்டு நடிகர்களின் படங்களை சிறுவயதுமுதலே பார்ப்பதற்குத் தவறுவதில்லை. எனக்கு கமலைப் பிடித்துப்போனாலும், திரையைத்தாண்டி அஜித்தைப்பற்றிய செய்திகளால் அஜித்தும் என் மனதில் சிம்மாசனம் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்.
 
எனக்குத்தெரிந்து இதுவரை அஜித்துடன் நடித்த நடிகைகள் எல்லோருமே அவரைப்பற்றி கூறியது “அஜித் ஒரு Gentleman” என்பதுதான். ஏன், ஏனய பிற நடிகர்கள் பலரும்கூட அவரைப்பற்றிக்கூறுவது ஒரு சிறந்த மனிதர். மனதில் எதையுமே வைத்திருக்கமாட்டார். வெளிப்படையாகப்பேசிவிடுவார் என்பதுதான்.
 
இந்த உண்மை பேசும் குணமே அவருக்கு ஆப்பாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் கூட்டம் ஒன்றுகூடி உண்மை பேசியதற்காக மன்னிப்புக்கேட்கவேண்டுமென்று அறிக்கை விட்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை ஆமை புகுந்த வீடு போலத்தான் அரசியல் புகுந்த இடமும். கலையைக் கலையாக மதிக்கத்தெரியாதவர்கள்தான் இன்று உயர்ந்த அந்தஸ்தில் கலைஞராக, பெருந்தலைகளாக இருந்துகொண்டு கலையைக் கற்பழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Film-chamber-1
உண்மைபேச கற்றுக்கொடுத்த தமிழர் பரம்பரையினர் இன்று உண்மை பேசிய அஜித் தமிழன் இல்லை என்று வாய் கிழியக் கத்துகின்றனர். உண்மைகள் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும், கலையை மதிக்கத்தெரியாதவர்களும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களே.
 
சினிமா அமைப்புக்களையும், இன்னபிற பெருந்தலைகளையும் வரிசையாக நிற்கவைத்து முகத்தில் காறி உமிழவேண்டும்போல் இருக்கிறது. நாசமாப் போங்கடே
 

37 comments:

Subankan on February 21, 2010 at 10:03 PM said...

விடயத்தைக் கேள்விப்பட்டவுடன் வந்த கோபத்தில் உடனடியாக எழுதியது. பதிவின் தொடற்சித்தன்மையிலோ, இல்லை பயன்படுத்திய சொற்களிலோ ஏதாவது குறை இருப்பின் இந்த ஒருமுறை மன்னித்துவிடுங்கள்

Mathuvathanan Mounasamy / cowboymathu on February 21, 2010 at 10:09 PM said...

எனக்கும்தான் சுபாங்கன்... அரசியல் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கு...

ஜாக்குவாரின் முகத்தைப் பாக்கவே குத்துவிடவேணும் போல கிடக்குது... :(

vasu balaji on February 21, 2010 at 10:11 PM said...

hats off to ajith. good flow subangan. nicely written.

Atchuthan Srirangan on February 21, 2010 at 10:16 PM said...

சாவின் விளிம்பில் நிற்ற ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்ற தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

Bavan on February 21, 2010 at 10:28 PM said...

என்னாது? அஜித் நடிப்பை விடப்போகிறாரா? எ.கொ.இ

உண்மை பேசினவன் எவன் வாழ்ந்திருக்கான்.

ஜகுவார் தங்கம் தனது வீடு தாக்கினதா சொன்னது எல்லாம் ஒரு செட்டப்தான் போல கிடக்கு, ஸ்டண்ட் மாஸ்டர் இதிலயும் தன்ட ஸ்டண்டக்காட்டிட்டார்.

எனக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது, ஆனா இந்தாள் ரொம்ப நல்லவரா இருக்கிறார், இப்ப தலைக்கு தலைவணங்குகிறேன்...

//சினிமா அமைப்புக்களையும், இன்னபிற பெருந்தலைகளையும் வரிசையாக நிற்கவைத்து முகத்தில் காறி உமிழவேண்டும்பொல் இருக்கிறது. நாசமாப் போங்கடே//

துப்பினாக்கூட அதுகள் திருந்தாது, ஒரேயடியா கும்பீபாகம் நடத்தினாத்தான் சரி,

Atchuthan Srirangan on February 21, 2010 at 10:39 PM said...

தல எப்பவும் தல தான், இவரை பார்த்தாவது அந்தர் பல்டி… ஆகாசப் பல்டி!அடிப்பவர்கள் திருந்தவேண்டும்....

ப்ரியமுடன் வசந்த் on February 21, 2010 at 11:00 PM said...

அஜீத்க்குன்னு இல்ல சுபா பொதுவா இந்த உலகத்தில் வெளிப்படையா பேசுற யாரையுமே யாருக்கும் பிடிக்கிறதில்லை....வாய் கூசாமல் பொய் பேசி போலியா நடிக்கறவங்களையும் முகஸ்துதி பேசுறவங்களையும்தான் எல்லாருக்குமே பிடிச்சுருக்கு...

இந்த வெளிப்படையா பேசுற ஒரே குணத்தினால் அஜீத் என்னோட மனசுல விஜயை விட மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் நடிகன் என்பதையும் தாண்டி ஒரு மனிதனா அஜீத் என்னோட ரோல் மாடல்....

குட் போஸ்ட் சுபா...

கலகலப்ரியா on February 22, 2010 at 2:43 AM said...

superb...!! intha idugaikku oru sabash... subankan..!!! (masked ppl are more than enough...for this world..)

KANA VARO on February 22, 2010 at 7:27 AM said...

“மறப்போம், மன்னிப்போம்” இதுதான் கலைஞருக்கு தமிழ்ல தெரிஞ்ச ஒரே வார்த்தை. கலைஞர் காலில விழுந்து மன்னிப்புக் கேட்டாலும், திரைமறைவில் சதி நடக்கும். இதற்கு திரைத்துறையில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள், தம்மில் ஒருவன் அஜித் எனப் பார்க்காது கலைஞருக்கு வால் பிடிக்குதுகள். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லாத அஜித்தை அரசியலில் இறங்க வைத்துவிடும் இவர்கள் நடவடிக்கைகள். (எதிரிக்கு எதிரி நண்பன் தானே)

புல்லட் on February 22, 2010 at 10:08 AM said...

அருமையான பதிவு.. அஜித் தின் நேர்மையும் வைராக்கியமும் பிடித்திருக்கிறது.. ஆனால் பாவம் நரிகளிடையே அகப்பட்டுள்ளார்.. சிக்கி சின்னாபின்னமாகப்போகிறார்..

Karthik on February 22, 2010 at 11:05 AM said...

Strong words thala! Thanks.

சசிகுமார் on February 22, 2010 at 12:54 PM said...

நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Bala on February 22, 2010 at 1:12 PM said...

அஜித் நேர்மையானவர். அதனால் தான் எத்தனை சோதனை வந்தாலும் அவற்றைதாண்டி அவரால் ஜெயிக்க முடிகிறது. இதையும் தாண்டி ஜெயிப்பார்.

நேரமிருந்தால் படித்து பாருங்கள்
www.balapakkangal.blogspot.com

malar on February 22, 2010 at 3:12 PM said...

''''பிரியமுடன்...வசந்த்

அஜீத்க்குன்னு இல்ல சுபா பொதுவா இந்த உலகத்தில் வெளிப்படையா பேசுற யாரையுமே யாருக்கும் பிடிக்கிறதில்லை....வாய் கூசாமல் பொய் பேசி போலியா நடிக்கறவங்களையும் முகஸ்துதி பேசுறவங்களையும்தான் எல்லாருக்குமே பிடிச்சுருக்கு...'''


அருமை வழிமொழிகிறேன்.

Anonymous said...

ஏய் பரதேசி புல்லட்... அது என்ன ""அஜித் தின் நேர்மையும் வைராக்கியமும் பிடித்திருக்கிறது.. ஆனால் பாவம் நரிகளிடையே அகப்பட்டுள்ளார்.. சிக்கி சின்னாபின்னமாகப்போகிறார்.."" நேர்மையாக ஒரு நாள் வாழ்ந்து அழிந்தாலும் பரவாயில்லை.. அதற்காக சிக்கி சின்னாபின்னமாகப் போனாலும் நேர்மையாக இருந்தேன் என்ற எண்ணமே ஒரு வகை மன அமைதியைத் தரும். உண்ட வாய் சரியான அழுகின வாய்.. ஹம்ப்

கடைசி வரி நல்ல நெத்தியடி சுபாங்கி. பவனின் கடைசி வரியும் உண்மையே.. :))

S.M.S.ரமேஷ் on February 22, 2010 at 4:25 PM said...

//உண்மை பேசினவன் எவன் வாழ்ந்திருக்கான்.//
உண்மைதான்!

//
எனக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது, ஆனா இந்தாள் ரொம்ப நல்லவரா இருக்கிறார், //

விருப்பத்தை பகிரங்க படுத்தியதற்கு!!


//உண்மைபேச கற்றுக்கொடுத்த தமிழர் பரம்பரையினர் இன்று உண்மை பேசிய அஜித் தமிழன் இல்லை என்று வாய் கிழியக் கத்துகின்றனர்//

அது உண்மைதான்!

எல்லாம் காலம் பதில் சொல்லும்!

Anonymous said...

woo your is in the top of some tamilsh list.. congrats..

கன்கொன் || Kangon on February 22, 2010 at 6:46 PM said...

கூகுளுக்கோ, அல்லது உந்த எயார்ரெல் இற்கோ எனது கண்டனங்கள்...
நான் காலையில் வந்து எனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றினேன்... வாக்கு மட்டும் பதிவாகியிருக்கு.
பின்னூட்டம் போகேல...

சரி...

அஜித் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை, அதைவிட நீங்கள் பிழையாக ஏதும் எழுதிவிட்டோமோ என்றும் யோசிக்கத் தேவையில்லை.
4 கெட்ட வார்த்தை போட்டு எழுதினாலும் பரவாயில்லை.
ஏனென்றால் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

அதற்குள்ளும் எத்தனை அரசியல்கள்..

உண்மையாக எனக்கு அஜித்தை ஒரு நடிகனாக பெரிதாகப் பிடிக்காது.
ஆனால் கடந்த சில நாட்களாக அஜித் இன் சில நடவடிக்கைகள் அஜித் மீது பெரிய மதிப்பை கொண்டுவந்திருக்கின்றன.
எவரும் சொல்ல முனைப்புறாத ஒன்றை அந்தச் சபையில் போட்டுடைத்த தைரியத்திற்கு உண்மையில் தலைவணங்குகிறேன்.

// எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் கூட்டம் ஒன்றுகூடி உண்மை பேசியதற்காக மன்னிப்புக்கேட்கவேண்டுமென்று அறிக்கை விட்டிருக்கிறது. //

நீங்களே சொல்லிவிட்டீர்களே எலும்புக்கு வாலாட்டும் கூட்டமென்று.
இவர்கள் தான் இழி மக்கள்.


//உண்மைபேச கற்றுக்கொடுத்த தமிழர் பரம்பரையினர் இன்று உண்மை பேசிய அஜித் தமிழன் இல்லை என்று வாய் கிழியக் கத்துகின்றனர்.//

இதில் மட்டும் எனக்கு சிறிய ஒற்றுமையின்மை உண்டு.
எனக்குத் தெரிந்து தமிழர்களிடம் உண்மை, நேர்மையெல்லாம் போய்விட்டது.
தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் எல்லோரும் திருடர்களாகவே இருக்கிறார்கள்.
இதில் தேவையில்லாமல் அஜித் இன் இனத்தை இழுத்து தங்கள் இழி குணத்தைக் காட்டிக் கொள்கிறார்கள்.

அஜித் இன் பேட்டியொன்று வாசித்தேன் இன்று.
I do not feel like facing the camera again என்பது தான் அதிலுள்ள முக்கிய விடயம்.
( http://bit.ly/c0RYVx )
வாழ்க தமிழர்கள்... வாழ்க...

Subankan on February 22, 2010 at 9:08 PM said...

// மதுவதனன் மௌ. / cowboymathu said...

எனக்கும்தான் சுபாங்கன்... அரசியல் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கு...

ஜாக்குவாரின் முகத்தைப் பாக்கவே குத்துவிடவேணும் போல கிடக்குது... :(//

அந்தாளோட முகத்தை நான் பாத்ததே இப்பதான். என்னா ஒரு ஐடியா

Subankan on February 22, 2010 at 9:09 PM said...

// வானம்பாடிகள் said...

hats off to ajith. good flow subangan. nicely written.//

Thanks sir

// Atchu said...

சாவின் விளிம்பில் நிற்ற ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்ற தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.//

என்ன செய்ய அச்சு, அவற்றை எழுதமுடியாதே

Subankan on February 22, 2010 at 9:12 PM said...

// Bavan said...

என்னாது? அஜித் நடிப்பை விடப்போகிறாரா? எ.கொ.இ

உண்மை பேசினவன் எவன் வாழ்ந்திருக்கான்.//

கஸ்டம்தான்

//

ஜகுவார் தங்கம் தனது வீடு தாக்கினதா சொன்னது எல்லாம் ஒரு செட்டப்தான் போல கிடக்கு, ஸ்டண்ட் மாஸ்டர் இதிலயும் தன்ட ஸ்டண்டக்காட்டிட்டார்.
//

அப்படித்தானாம்

//
எனக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது, ஆனா இந்தாள் ரொம்ப நல்லவரா இருக்கிறார், இப்ப தலைக்கு தலைவணங்குகிறேன்...
//

ம்..

//
துப்பினாக்கூட அதுகள் திருந்தாது, ஒரேயடியா கும்பீபாகம் நடத்தினாத்தான் சரி//

உண்மைதான்

Subankan on February 22, 2010 at 9:13 PM said...

// Atchu said...

தல எப்பவும் தல தான், இவரை பார்த்தாவது அந்தர் பல்டி… ஆகாசப் பல்டி!அடிப்பவர்கள் திருந்தவேண்டும்...//

அவர்தான் அசல் ஹீரோ

// கலகலப்ரியா said...

superb...!! intha idugaikku oru sabash... subankan..!!! (masked ppl are more than enough...for this world..)//

நன்றி ப்ரியா

Subankan on February 22, 2010 at 9:14 PM said...

// பிரியமுடன்...வசந்த் said...

அஜீத்க்குன்னு இல்ல சுபா பொதுவா இந்த உலகத்தில் வெளிப்படையா பேசுற யாரையுமே யாருக்கும் பிடிக்கிறதில்லை....வாய் கூசாமல் பொய் பேசி போலியா நடிக்கறவங்களையும் முகஸ்துதி பேசுறவங்களையும்தான் எல்லாருக்குமே பிடிச்சுருக்கு...//

100% உண்மை
//

இந்த வெளிப்படையா பேசுற ஒரே குணத்தினால் அஜீத் என்னோட மனசுல விஜயை விட மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் நடிகன் என்பதையும் தாண்டி ஒரு மனிதனா அஜீத் என்னோட ரோல் மாடல்....//

இப்போ என்னோடதும் :)
//
குட் போஸ்ட் சுபா...//

நன்றி வசந்த்

Subankan on February 22, 2010 at 9:16 PM said...

// VARO said...

அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லாத அஜித்தை அரசியலில் இறங்க வைத்துவிடும் இவர்கள் நடவடிக்கைகள். (எதிரிக்கு எதிரி நண்பன் தானே)//

அது கஸ்டம் வரோ

// புல்லட் said...

அருமையான பதிவு.. அஜித் தின் நேர்மையும் வைராக்கியமும் பிடித்திருக்கிறது.. ஆனால் பாவம் நரிகளிடையே அகப்பட்டுள்ளார்.. சிக்கி சின்னாபின்னமாகப்போகிறார்..//

உண்மைதான் அண்ணா, நன்றி

// Karthik said...

Strong words thala! Thanks.//

Thanks thala

Subankan on February 22, 2010 at 9:20 PM said...

// சசிகுமார் said...

நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி சசி

// Bala said...

அஜித் நேர்மையானவர். அதனால் தான் எத்தனை சோதனை வந்தாலும் அவற்றைதாண்டி அவரால் ஜெயிக்க முடிகிறது. இதையும் தாண்டி ஜெயிப்பார்.

நேரமிருந்தால் படித்து பாருங்கள்
www.balapakkangal.blogspot.com//

படித்தேன் பாலா, நிறைய விசயங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்களே!

// malar said...

''''பிரியமுடன்...வசந்த்

அஜீத்க்குன்னு இல்ல சுபா பொதுவா இந்த உலகத்தில் வெளிப்படையா பேசுற யாரையுமே யாருக்கும் பிடிக்கிறதில்லை....வாய் கூசாமல் பொய் பேசி போலியா நடிக்கறவங்களையும் முகஸ்துதி பேசுறவங்களையும்தான் எல்லாருக்குமே பிடிச்சுருக்கு...'''


அருமை வழிமொழிகிறேன்.//

நன்றி மலர்

Subankan on February 22, 2010 at 9:23 PM said...

// முகிலினி said...

ஏய் பரதேசி புல்லட்... அது என்ன ""அஜித் தின் நேர்மையும் வைராக்கியமும் பிடித்திருக்கிறது.. ஆனால் பாவம் நரிகளிடையே அகப்பட்டுள்ளார்.. சிக்கி சின்னாபின்னமாகப்போகிறார்.."" நேர்மையாக ஒரு நாள் வாழ்ந்து அழிந்தாலும் பரவாயில்லை.. அதற்காக சிக்கி சின்னாபின்னமாகப் போனாலும் நேர்மையாக இருந்தேன் என்ற எண்ணமே ஒரு வகை மன அமைதியைத் தரும். உண்ட வாய் சரியான அழுகின வாய்.. ஹம்ப்

கடைசி வரி நல்ல நெத்தியடி சுபாங்கி. பவனின் கடைசி வரியும் உண்மையே.. :))//

// முகிலினி said...

woo your is in the top of some tamilsh list.. congrats..//

நன்றி முகிலினி

Subankan on February 22, 2010 at 9:27 PM said...

// S.M.S.ரமேஷ் said...

எல்லாம் காலம் பதில் சொல்லும்!//

நன்றி ரமேஷ்

// கன்கொன் || Kangon said...

கூகுளுக்கோ, அல்லது உந்த எயார்ரெல் இற்கோ எனது கண்டனங்கள்...
நான் காலையில் வந்து எனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றினேன்... வாக்கு மட்டும் பதிவாகியிருக்கு.
பின்னூட்டம் போகேல...//

அதானே, கங்கோனா கொக்கா

//சரி...

அஜித் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை, அதைவிட நீங்கள் பிழையாக ஏதும் எழுதிவிட்டோமோ என்றும் யோசிக்கத் தேவையில்லை.
4 கெட்ட வார்த்தை போட்டு எழுதினாலும் பரவாயில்லை.
ஏனென்றால் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

அதற்குள்ளும் எத்தனை அரசியல்கள்..
//

ஆமாம்

//
உண்மையாக எனக்கு அஜித்தை ஒரு நடிகனாக பெரிதாகப் பிடிக்காது.
ஆனால் கடந்த சில நாட்களாக அஜித் இன் சில நடவடிக்கைகள் அஜித் மீது பெரிய மதிப்பை கொண்டுவந்திருக்கின்றன.
எவரும் சொல்ல முனைப்புறாத ஒன்றை அந்தச் சபையில் போட்டுடைத்த தைரியத்திற்கு உண்மையில் தலைவணங்குகிறேன்.
//

இப்போது பலரும் இதைத்தான் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் சரி

//
//

இதில் மட்டும் எனக்கு சிறிய ஒற்றுமையின்மை உண்டு.
எனக்குத் தெரிந்து தமிழர்களிடம் உண்மை, நேர்மையெல்லாம் போய்விட்டது.
தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் எல்லோரும் திருடர்களாகவே இருக்கிறார்கள்.
இதில் தேவையில்லாமல் அஜித் இன் இனத்தை இழுத்து தங்கள் இழி குணத்தைக் காட்டிக் கொள்கிறார்கள்.
//

பொதுப்படைக் கருத்துக்கள் வேண்டாமே கோபி

SUREஷ்(பழனியிலிருந்து) on February 22, 2010 at 10:07 PM said...

//“அஜித் ஒரு Gentleman” //

நடிகை ஹீரா கூட அப்படி ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு

யோ வொய்ஸ் (யோகா) on February 22, 2010 at 11:07 PM said...

அஜித்தை நடிகனாக எனக்கு என்றும் பிடித்ததில்லை, ஆனால் ஆமாம் சாமி போடும் நடிகர்களுக்கு மத்தியில் துணிச்சலாக கருத்தை சொல்லிய அஜித்துக்கு சல்யுட் செய்கிறேன், ரஜனியை கூட எனக்கு நடிகனாக மட்டுமே பிடிக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜனிகாந்த் அந்தர் பல்டி அடிப்பதனால் பிடிப்பதில்லை.

Hats off Ajith, you're a true hero

அஹோரி on February 22, 2010 at 11:46 PM said...

கழக கண்மணிகள் திருந்துமா ? சான்சே இல்ல.

nadpudan kathal on February 23, 2010 at 7:24 AM said...

உண்மைகளுக்கு என்றும் இந்த உலகில் இடம் இல்லை போலும் அண்ணா...

ஆனாலும் அஜித் நடிப்பை இடை விடுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் ஜாகுவார் என் கையில் மாட்டக் கூடாது என்றும் பிரார்த்திக்கிறேன்.....
என்ன வில்லத்தனம்

இலங்கன் on February 23, 2010 at 12:21 PM said...

அண்ணா இனித்தான் அஜித்திற்கு ரசிகர்கள் கூடுவார்கள்..... ம்... என்ன செய்ய நல்லதுக்கு காலமில்லை பாருங்கோ.... தமிழன் தான் உண்மையை சொல்லுவான் அதை உரத்து சொல்லுவான் .. இப்பிடிப் பாரக்கும் போது அஜித் மறத்தமிழன்.......

Subankan on February 23, 2010 at 8:01 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

//“அஜித் ஒரு Gentleman” //

நடிகை ஹீரா கூட அப்படி ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு//

அவர் மட்டுமல்ல, வேறு பலரும் கூட :)


***********************

// யோ வொய்ஸ் (யோகா) said...

அஜித்தை நடிகனாக எனக்கு என்றும் பிடித்ததில்லை, ஆனால் ஆமாம் சாமி போடும் நடிகர்களுக்கு மத்தியில் துணிச்சலாக கருத்தை சொல்லிய அஜித்துக்கு சல்யுட் செய்கிறேன், ரஜனியை கூட எனக்கு நடிகனாக மட்டுமே பிடிக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜனிகாந்த் அந்தர் பல்டி அடிப்பதனால் பிடிப்பதில்லை.

Hats off Ajith, you're a true hero//

:))

நன்றி அண்ணா

Subankan on February 23, 2010 at 8:03 PM said...

// அஹோரி said...

கழக கண்மணிகள் திருந்துமா ? சான்சே இல்ல.//

ஆமாம். எல்லாம் அரசியல்

***************************

// அனுதினன் said...

உண்மைகளுக்கு என்றும் இந்த உலகில் இடம் இல்லை போலும் அண்ணா...//

உண்மாதான் அனு

//
ஆனாலும் அஜித் நடிப்பை இடை விடுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் ஜாகுவார் என் கையில் மாட்டக் கூடாது என்றும் பிரார்த்திக்கிறேன்.....
என்ன வில்லத்தனம்//

அதேதான், உங்களுக்கும் என்னா ஒரு வில்லத்தனம் :P

Subankan on February 23, 2010 at 8:06 PM said...

// இலங்கன் said...

அண்ணா இனித்தான் அஜித்திற்கு ரசிகர்கள் கூடுவார்கள்..... ம்... என்ன செய்ய நல்லதுக்கு காலமில்லை பாருங்கோ.... தமிழன் தான் உண்மையை சொல்லுவான் அதை உரத்து சொல்லுவான் .. இப்பிடிப் பாரக்கும் போது அஜித் மறத்தமிழன்......//

உண்மைதான் இலங்கா, இந்த நிகழ்விலிருந்து ஒன்று விளங்கியது, சினிமா ரசிகர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

Ramesh on February 24, 2010 at 8:52 AM said...

///உண்மைகள் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும், கலையை மதிக்கத்தெரியாதவர்களும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களே.///

உண்மைய சொல்லிருக்கீங்க சினிமா கலையில் வகைப்படுத்த வேண்டியது ஒழிய அரசியலில் வருவதை எதிர்க்கிறேன்

TechShankar @ டெக்‌ஷங்கர் on February 28, 2010 at 10:49 AM said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy