Thursday, January 29, 2009
ஆத்தா! நான் திரைப்படத்திற்குக் கதை எழுதுகிறேன்!
எனது இந்தப் பதிவிற்கும் நான் முன்னர் இட்ட “ஒரு படத்தின் கதை அம்பலம்” என்ற பதிவிற்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. அதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து இங்கே சொடுக்கி அதைப் படித்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கவும்.
கனது அந்தப் பதிவிற்கு நான் யாருடைய பதிவுகளையெல்லாம் படிப்பதையே பெருமையாக நினைக்கின்றேனோ, அவர்களே வந்து பின்னூட்டம் இட்டதில் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை எழுத வார்த்தைகளே இல்லை. ஆனால் அதைவிட மகிழ்ச்சியான / நகைச்சுவையான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. அது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நண்பனுடனான உரையாடல். இதோ…..
அவன் :- மச்சான் நீ நேற்று Blog ல எழுதியிருந்தியே கதை, நல்லா இருந்துதுடா
நான் :- Thanx டா
அவன் :- அது சரி, உனக்கு எப்பிடிக் கிடச்சுது?
நான் :- ????!!!!
அவன் :- இல்ல, உண்மயிலயே அவுட் ஆயிட்டுதா?, இல்ல நீ சும்மா அடிச்சு விடுறியா?
நான் :- இல்லடா, சும்மா fun க்கு எழுதினது. சரியா வாசி, எல்லாப் பழய கதையும் அதில இருக்கும்.
அவன் :- அது தெரியுதடா, ….. சும்மாதான் கேட்டனான். Ok! Bye..
நம்பினால் நம்புங்கள்.
அந்த நடிகரின் கதை என நம்பும் அளவிற்கு எனது கதை அவ்வளவு ( மோசமாக / நன்றாக ) இருந்ததா, இல்லை அந்த நடிகரின் எல்லாப் படக் கதைகளுமே (?) ஒரே மாதிரி இருப்பதால் வந்த பிரச்சினையா என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment