நான் கடந்த வியாழக்கிழமை யாழிலிருந்து கொழும்பு வருவதற்காகக் காத்திருந்தபோது நடந்த சம்பவம் இது. பலர் அன்று ஏமாறக் காரணமாக நானும் ஒரு மறைமுகக் காரணமாக இருந்துவிட்டதால் ஏற்பட்ட உறுத்தல் இன்னமும் இருப்பதால் இதை எழுதுகிறேன்.
யாழ் – கொழும்புக்கான A9 வீதி அண்மையில் திறக்கப்பட்டது அறிந்ததே. ஆனாலும் அதனூடு பயணிப்பவர்கள் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒருமித்த வாகனத்தொடரணியாகவே வவுனியா வரை அழைத்துவரப்படுகிறார்கள். அன்றும் இந்த பரிசோதனை முடிக்கக் காத்திருத்தோர் ஆயிரதிற்கும் அதிகம். அண்மையில்தான் A9 வீதி திறக்கப்பட்டமையால் அதனூடு பயணம் செய்வதற்கான விதிமுறைகள் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமாகவே இருந்தனர்.
பஸ்சிற்கு மக்களை ஏற்றும் யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒரேயொரு போட்டோ பிரதி எடுக்கும் கடை மாத்திரமே காணப்படுகிறது. அங்கேயும் ஏனய கடைகளை விட மூன்றுமடங்கிற்கும் அதிகமான கட்டணம் அறவிடப்படுகிறது. ( ஒரு பக்கத்திற்கு 10 ரூபா ).
நான் புகையிரத நிலையத்திற்கு சென்றடைந்த போது ஒருவர் அடையாள அட்டை, மற்றும் பயண அனுமதி ( Clearance ) ஆகிய இரண்டிலும் தலா இரண்டு போட்டோ பிரதிகள் தேவை எனவும் இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார். என்னிடம் இல்லாததால் அதை எடுப்பதற்காக அக் குறிப்பிட்ட கடைக்குச் சென்றேன். அங்கே பெரிய வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஏறத்தாள இருபது நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு போட்டோ பிரதியுடன் திரும்பினேன். என் பின்னாலும் பலர் காத்திருந்தனர். வெளியே வந்த நான் அங்கிருந்த சிலருக்கு இதைப்பற்றி அறிவுறுத்த, அவர்களும் அதற்காக சென்றார்கள்.
பின்னர் சோதனைக்காக சென்றோம். அங்கே இராணுவத்தினரால் கோரப்பட்டது ஒரேயொரு அடையாள அட்டையின் பிரதி மாத்திரமே!
மூன்று ரூபா பெறுமதியான போட்டோ பிரதிக்கு பத்து ரூபா அறவிடுவது மாத்திரமல்லாமல் மக்களை பொய்யான வழியில் ஏமாற்றி அதிக பிரதிகள் எடுக்க வைத்ததும் அந்தக் குறிப்பிட்ட கடைக்காரர் என்பதை ஊகிக்க முடிகிறதல்லவா? அன்று ஒருநாள் மட்டும் அவருக்கு இலாபம் பல ஆயிரங்கள். அத்தோடு நின்றுவிடாது இது அங்கே தினம்தினம் தொடரும் ஒரு செயற்பாடு.
இதைப்பற்றி அங்கிருந்த இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. அங்கிருந்த உயரதிகாரியொருவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
ஆனாலும் ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள் இல்லாயா?
17 comments:
இலங்கையிலும் இவங்கள திருத்த ஒரு கந்தசாமி/அந்நியன் தேவை போலிருக்கு....
:)))
சுபாங்கன்.இதைவிடப் பெரிய கேவலமான கதையெல்லாம் இருக்கும். நிறையக் கதை வச்சிருப்பீங்க.எடுத்து விடுங்கோ ஒவ்வொன்றாய்.மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள் சுபாங்கன்.
//இதைப்பற்றி அங்கிருந்த இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. அங்கிருந்த உயரதிகாரியொருவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.//
வேலியே பயிரை மேயும் கதையாக இல்லாமல் போனால் சரிதான்.
ஈனப்புத்தி என்று சொல்வார்கள் தெரியுமா? அது தான் இது.
எரியிற வீட்டில பிடுங்கினது இலாபம் என்ற கொள்கைக்கு தமிழர்கள் முக்கியத்துவம் வழங்குபவர்கள்.
திருந்தமாட்டார்கள்...
இப்படி ஏராளமான திருடர்கள் (இதுவும் திருட்டு தானே) இருக்கிறார்கள்.
இதெல்லாம் ஜுயீப்பி விமானத்தில் செல்பவர்களிடம் சிலர் பிடுங்குகின்றார்கள். அண்மையில் ஒருவர் அவசரமாக போகவேண்டும் என 2 மடங்கு பணம் கொடுத்து ரிக்கெட் எடுத்தார் ஆனால் ரிக்கெட்டில் சாதாரண விலைதான். அவர் ரிக்கெட் எடுத்தது ஒரு புரோக்கர் மூலம்.
இப்படி தவிச்ச முயல் அடிக்கின்ற கூட்டம் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்.
நானும் இரண்டுதான் எடுத்தேன் ஆனா கேட்டது ஒண்டுதான். அதுவும் என்ர யாழ்ப்பாண நண்பன் ஒருவன்தான் எடுத்தான் பாவம் எவ்வளவுதான் கொடுத்தானோ தெரியல??
"இரண்டிலும் தலா இரண்டு போட்டோ பிரதிகள் தேவை எனவும் இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார்."
இது தெரியாமலா வந்தீங்க.... அது தான் சொல்றது முன்ன பின்ன தெரிந்தவங்களைக் கேக்கணும் என்று.. (இப்படித் தான் பலர் சொல்வார்கள்..)
"அங்கே இராணுவத்தினரால் கோரப்பட்டது ஒரேயொரு அடையாள அட்டையின் பிரதி மாத்திரமே!"
உண்மை தான்.........
"இதைப்பற்றி அங்கிருந்த இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. அங்கிருந்த உயரதிகாரியொருவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்."
நீங்க
நிட்சயமாக சொல்லி இருக்க மாட்டீங்க...
நினைத்த அளவுக்குப் பரிசோதனைகள் குறைவு....
தொடர் விளையாட்டொன்றிற்கு அழைத்திருக்கிறென்...
வந்து கலக்குங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.html
@ வழிப்போக்கன்
ம்.. அப்படி அவங்க வந்துட்டா மட்டும்?
@ ஹேமா
இன்னும் இருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் எழுத்ததான் முடியாது. நன்றி
@ சந்ரு
உண்மைதான். நன்றி
@ கனககோபி
உண்மைதான். கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான்.
@ வந்தியத்தேவன்
நீங்கள் சொன்ன கதைதான் கடந்த நான்கு ஆண்டுகாலமாகத் தொடர்கிறதே!
@ கார்த்தி
ம்.. எல்லாம் எமது விதி, வேறென்ன சொல்ல.
//Sinthu said...
"இரண்டிலும் தலா இரண்டு போட்டோ பிரதிகள் தேவை எனவும் இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார்."
இது தெரியாமலா வந்தீங்க.... அது தான் சொல்றது முன்ன பின்ன தெரிந்தவங்களைக் கேக்கணும் என்று.. (இப்படித் தான் பலர் சொல்வார்கள்..)//
இதிலெல்லாம் ஆப்பு வைப்பார்கள் என்று யார் கண்டது.
//இதைப்பற்றி அங்கிருந்த இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. அங்கிருந்த உயரதிகாரியொருவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்."
நீங்க
நிட்சயமாக சொல்லி இருக்க மாட்டீங்க...//
ஏன் இந்தக் கொல வெறி?
//நினைத்த அளவுக்குப் பரிசோதனைகள் குறைவு....//
சும்மா ஒரு Formality தான் எல்லாம்.
யாழில் மட்டும் அல்ல சுபாங்கன், வவுனியாவிலிருந்து யாழுக்கு செல்கிற நிலையும் அப்படி தான். வவுனியா எல்லையில் இருந்த அனுமதி எடுக்கும் இடம் ஈரத்பெரியகுலத்துக்கு மாற்றப்பட்டது. ஆட்டோ செலவு போவதுக்கு 500 /-, வருவதுக்கு வேறு. அங்கும் போட்டோகொப்பி அதேவிலை, அதே 2 கொப்பி. இது பலகிப்போச்சுடா.
@ Niroojan
ம்.. எல்லாம் தலைவிதி
Post a Comment