கமலின் பாணியிலான விறுவிறு வேகம், ஆங்கிலப்படத்துக்கேயுரிய நீளம், ஆங்காங்கே உறுத்தாத நகைச்சுவை, அருமையான ஒளிப்பதிவு, படத்தையே தூக்கிநிறுத்தும் பின்னணி இசை, அளவான பாத்திரங்கள், அருமையான நடிப்பு. இதுதான் உன்னைப்போல் ஒருவன்.
சண்டைக்காட்சிகள் இல்லாது, பாடங்கள் இல்லாது, முக்கியமாக ஹீரோயின் இல்லாது ஒரு தமிழ்ப்படம் எடுத்ததற்கே கமலைப் பாராட்டலாம். ரீமேக்தான் என்றாலும் இப்படித் தமிழில் எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தமிழ் சினிமாவில் புதுமை புகுத்துவதென்றால் அது கமலாகத்தான் இருக்கமுடியுமென்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.
தவறிவிழும் ஒற்றைத் தக்காளியைக்கூட பொறுக்கி எடுத்துக்கொண்டு வரும் கமல், ஆறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கமிஷனருக்கு போன் செய்யும்போதே நிமிர்ந்து உட்காரவைத்துவிடுகிறார் இயக்குனர். இறுதிவரை அந்த ஆர்வத்தைக் குறையவிடாமல் அப்படியொரு வேகம், இறுதிக்காட்சிவரை தொடர்கிறது.
படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர் அற்புதமாகச் சிரிக்கவைக்கிறார் என்றால் பின்னர் எலக்சனுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையே என்று கேட்கும் காட்சியில் முதல்வர் எல்லாத்தையுமே தூக்கிச்சாப்பிட்டுவிடுகிறார். அரசியல்வாதிகளின் புத்தியை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.
கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் அந்த இரு இளைஞர்கள், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், லக்ஸ்மி எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். வசனங்களில் இரா. முருகன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.
மென்பெருளைப் பயன்படுத்தி வேகமாகப் பயணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கமல், சரளமாகப் பேசப்படும் ஆங்கிலம் என்பன சராசரி ரசிகனிற்குப் புரியுமா என்பது சந்தேகமே என்றாலும் படத்தின் விறுவிறுப்பிற்கு அவை நிறையவே கைகொடுத்திருக்கின்றன.
படத்தின் சில காட்சிகளில் சினிமாத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி ஒரு தமிழ்ப்படம் பார்த்ததே அவற்றையெல்லாம் எழுதவிடாமல் செய்துவிட்டது.
உன்னைப்போல் ஒருவன் - ஒரு சாதாரணனின் கோபம், கொஞ்சம் சினிமாத்தனமாக.
17 comments:
விமர்சனம் நன்றாக இருக்கிறது,
சாதாரணனுக்கும் புரியும்படி எளிமையாக
வாழ்த்துக்கள்
//படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர்
இது இப்ப தேவையா? விஜய்மேல அப்படி என்ன கோபம் உனக்கு?
இப்பவே பார்க்கனும் போல இருக்கு....
விரும்பத்தகு வழியிலான திரைப் பார்வை
@ நிகழ்காலத்தில்...
நன்றி
// Anonymous said...
//படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர்
இது இப்ப தேவையா? விஜய்மேல அப்படி என்ன கோபம் உனக்கு?//
அந்த டாக்டர் பட்டம், பாடி லாங்விச் எல்லாத்தையும் பாத்துட்டு சொல்லுங்க, அது வேற யாரு?
@ தெரு விளக்கு
நன்றி, கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்
I haven't seen this movie yet. Sounds like a good movie.
அப்ப படம் அசத்தல் எண்டுறீங்க?
ஆனா ஒரே ஒரு கவலை...
படம் வெல்லுமா?
ஏனென்டா நல்ல படம் எண்டு எல்லாரும் சொல்லுறாங்க...
நம்மட ஆக்களுக்கும் நல்ல படத்துக்கும் பெருசா ஒத்து வராதே...???
@ Srithanya
அப்படியா? சீக்கிரமே பாத்துடுங்க
@ கனககோபி
உண்மைதான். நேற்றே தியேட்டர் ஈயாடுது. இதெல்லாம் ஒரு படமா? கட்டடத்தையும் கமலையும்தான் காட்டறாங்கள் என்று சொன்னான் படம் பார்த்துவிட்டு வந்த நண்பன் ஒருவன். காட்டவேண்டியதைக் காட்டினால்தான் இவங்களேல்லாம் பார்ப்பாங்கள். காலக்கொடுமை.
நல்ல விமர்சனம் சுபாங்கன் வழக்கம் போல் நம் மக்கள் கமல் படத்திற்கு மரியாதை கொடுத்துவிட்டார்கள். தியேட்டரில் சனம் இல்லை( தியேட்டர்காரர் நோன்பு காரணம் என்றார்கள்). தலைவலிகளினதும் தறுதலைகளினதும் படத்தை பார்த்து சொந்தச் செலவில் சூனியம் செய்யும் நம்மவர்கள் ஏனோ நல்ல படங்களுக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள்.
@ வந்தியத்தேவன்
அவங்களைச் சொல்லிக் குத்தமில்லை. அப்படியே பழகிட்டாங்கள். நன்றி.
அப்படியே சண் டிவி இல திரை விமர்சனம் பார்த்த மாத்திரி ஒரு உணர்வு.. நன்றி சுபாங்கன் அண்ணா.. பன்ல்கடேஷ் இல் இருந்தாலும் படம் திரைவிமர்சனம் பார்க்கக் கூடியதாக இருந்தமைக்கு சேச்சே வாசிக்கக் கூடியதாக இருந்தமைக்கு..
நன்றி சிந்து
நல்ல விமர்சனம் சுபாங்கன்
நன்றி செந்தில்வேலன்
அண்ணே வணக்கம்.
நீங்க பெரிய பதிவரு தான். நீங்க பேசாம சினிமா விமர்சனம் செய்யிறதுக்கு தனியா ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம்ல?
அப்புறமா ஒரு சின்ன மேட்டர். அதாவது நீங்க ஃபேஸ்புக்குல உங்கள மாதிரி ஆளுங்க கூட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிறது யூஸ்புல்லா இருக்கும்னு சொன்னீங்க. ஆனா நான் உங்களுக்கு அனுப்பின ரிக்குவெஸ்ட டிக்லைன் பண்ணிடீங்களே?
Post a Comment