நான் பதிவெழுத வந்த கதையை பனையூரான், சுபானு இருவருமே எழுதச்சொல்லிக் கேட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். இதற்குமேலும் தாமதிக்கக்கூடாது என்பதால் இன்றய மழைக்குளிருக்குக் குட்டித்தூக்கம் கூடப் போடாமல் இதை பதிவிடுகிறேன்.
அப்போது பல்கலையில் June term நடந்துகொண்டிருந்த காலம். விளையாடுவது எப்படி என நடந்துகொண்டிருந்த லெக்சரில் வரவைப் பதிந்துவிட்டு பின்வாசல் வழியாக லெக்சரிலிருந்து ‘எஸ்’ ஆகி மீன்தொட்டியின் சிங்களப்பதத்தால் செல்லமாக அழைக்கப்படும் கணினி ஆய்வுகூடத்தினுள் ஐக்கியமானேன். அங்கே எனக்கு முன்னரே ‘எஸ்’ ஆகியிருந்த நண்பன் ஒருவனினால் அறிமுகப்படுத்தப்பட்டதே லோஷன் அண்ணாவின் தளம். எதற்கும் இருக்கட்டும் என்று அதிலே இருந்த “Create a blog” இனைக் கிளிக்கி நானும் ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அன்றுமுதல் லோஷன் அண்ணாவின் பதிவுகளையும், அவர் இணைப்புக்கொடுத்திருந்த ஏனய பதிவர்களின் பதிவுகளையும் படிக்கத் தொடங்கினேன்.
அதே June termஇன் இரண்டாவது பாதி. ஏதாவது ஒரு Project சமர்ப்பிக்க வேண்டிய காலம். டிபார்ட்மென்டில் கூட இருந்த ஒரேயொரு தமிழ் நண்பனும் நானும் வெவ்வேறு குழுக்களாக்கப்பட்டுவிட தமிழ் பேசக் கூட யாருமே இல்லாத நிலையில்தான் நானும் பதிவெழுதினால் என்ன என்ற விபரீத ஆசை எனக்குள்ளும் துளிர்விட்டது.
அப்போது எனக்கு தமிழ்மணம், தமிழிஷ், ஏன் திரட்டிகளில் பதிவுகள் திரட்டப்பட்டுத்தான் பலரையும் சென்றடைகின்றது என்பதுகூடத் தெரியாது. பின்னர் ஆங்காங்கே பதிவுகளில் இருக்கும் இணைப்புக்களை சொடுக்கி அவற்றைப்பற்றி அறிந்து, இணைப்பது எப்படி எனத் தெரியாது விழித்து, என அவை எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை.
பதிவுகள் எழுதத் தொடங்கும்போதே facebookஇன் புண்ணியத்தில் தமிழ்99 தட்டச்சும், யுனிக்கோட் பற்றிய அறிவும் இருந்ததால் அதில் பிரச்சினை ஏற்படவில்லை.
பதிவுலகம் எனக்குக் கொடுத்தவை ஏராளம். பல முகம்தெரியாத பதிவர்களுடன் கூட பலகாலம் பழகிய ஒரு உணர்வை இது எனக்குத் தந்திருக்கிறது. கூடவே இதுவரை நான் யார்கூறியும் கேட்டறியாத கெட்ட வார்த்தைகள் அடங்கிய அனானிப் பின்னூட்டங்களையும்தான். அதிகம் தொழில்நுட்பப் பதிவுகள் இடத் தொடங்கியமைக்கு அவையும் ஒரு காரணம்.
பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர்தான் பல இடங்களில் எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இன்று பதிவிடல் தொடர்பாக என்னிடமும் சிலர் ஆலோசனை கேட்கும்போது ஒருவகைப் பெருமையாகவே இருக்கும்.
எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சுயபுராணம் பாடும்போதும் கொஞ்சம் அடக்கியே பாடவேண்டும். அதனால் இத்தோடு முடிக்கிறேன்.
ஏற்கனவே இதைப் பலரும் எழுதி முடித்துவிட்டதால் இனி யாரையும் அழைக்கப் போவதில்லை. மன்னிக்க.
10 comments:
நல்ல புராணம் தான்.... தொடருங்கள்............
//எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சுயபுராணம் பாடும்போதும் கொஞ்சம் அடக்கியே பாடவேண்டும். அதனால் இத்தோடு முடிக்கிறேன்.//
நன்றாகத்தான் தெளிந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்..
உங்களது தளத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து வாசித்து வருகின்றேன்.
ரசிகனும் கூட.......
வாழத்துக்கள் தொடருங்கள்!!!!
தொடர்ந்து எழுதுங்கோ....
வாழ்த்துக்கள்.
தன்னடக்கமான் அளவான பதிவு.....பாராடுக்கள். நிலாமதி
நன்றி சிந்து
நன்றி சுபானு
நன்றி கார்த்தி
நன்றி வேந்தன்
நன்றி நிலாமதி
நீங்கள் கருத்திரை இட்டது ஒரு தொடர் பதிவுக்கு... உங்களையும் இப்பதிவைத் தொடரும்மறு கேட்டுக் கொள்கிறேன்.. தொடரணியில் இணைக்க......
interesting story. keep up the good work. =)
@ சிந்து
எழுதிட்டாப் போச்சு
@ Srithanya
Thanks Akka
Post a Comment