இந்தப் பதிவுக்கு சிந்து அழைத்து குறைந்தது ஒரு வாரமாவது ஆகிவிட்டிருக்கும். தலைப்பு கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் இனியும் எழுதாவிட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தாலும் வந்துவிடுவார் என்பதால் இன்று பட்ட கடனில் ஒன்றைக் குறைத்துக்கொள்கிறேன்.
காதல்
எனக்கு இதற்குமான தொடர்பு கொஞ்சம் வித்தியாசமானது. ஒருவகை ஈர்ப்பின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் தவிர்த்து உண்மைக் காதலை என்னுள் இதுவரை உணர்ந்ததில்லை. கொஞ்சம் ஒதுங்கியே இருக்கவேண்டும் என விரும்புபவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்கலையில் நடைபெறவுள்ள வாணிவிழாவில் எனது தலைப்பு பல்கலைக்கழகக் காதல். விதி யாரை விட்டது?
கடவுள்
இவர் தொடர்பான எல்லாவற்றுக்கும் மனம் அர்த்தம் தேடிக்கொண்டிருந்தாலும் சிக்கலான சமயங்களில் அடிக்கடி மனதின் அமைதிக்கு இவரே தேவைப்படுவார். இவரிடம் எதையும் வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் இருக்கிறது. அங்கே மனம் அமைதியடைவதையும் உணர்ந்திருக்கிறேன். கடவுளை நம்புகிறேன். மனிதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட உருவங்களை அல்ல. அந்த உருவங்களால் இன்று மனிதர்கள் பிரச்சினைப்படுவதை அந்தக் கடவுளே விரும்பமாட்டார்.
பணம்
இன்றய உலகின் ஈடு இணையற்ற கடவுள். மனித மனங்களையே புரட்டிப்போடும் சக்தி இதற்குத்தான் உண்டு. நிஜ வாழ்க்கையில் எத்தனையோ நடிகர்களை உருவாக்கிய பெருமை இதற்குண்டு. இதனால் மனிதர்கள் மாறும் வேகம் கண்டு எத்தனையோ நாள் பிரமித்திருக்கிறேன். மனம் முதல் மாளிகை வரை இதற்கு அடிமை. இதைச் சேமிக்கலாம், நேர்மையாக மாத்திரம்.
அழகு
இயற்கையின் படைப்பில் எல்லாமே அழகுதான். அதைப் பார்க்கும் பார்வைகள்தான் வித்தியாசப்படுகின்றன. அழகை ரசிப்பதில் தவறில்லை, அனுபவிக்க ஆசைப்படக்கூடாது என்பதே எனது கொள்கை. இன்று நட்பு முதல் வேலைவாய்ப்புக்கள் வரை அத்தனையிலும் இது செல்வாக்குச் செலுத்துவதே வருந்தத்தக்க உண்மை.
இதைத் தொடர நான் அழைப்பது
24 comments:
கடவுள் - மதம் - ஓகே but மனிதர் - மதம் ?
நான் ஏற்கனவே இந்தப் பதிவை எழுதிவிட்டேன். ஆகவே இன்னொருவரை அழைக்கவும். உங்கள் அழைப்புக்கு நன்றிகள்.
http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_16.html
கச்சிதமா சிக்கனமா சொல்லியிருக்கீங்க.நல்லாயிருக்கு சுபாங்கன்.
//யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...
கடவுள் - மதம் - ஓகே but மனிதர் - மதம் ?//
முடிந்தால் இதைப் படியுங்கள்.
@ வந்தியத்தேவன்
அட்டா, கவனிக்கவில்லையே, சரி இருந்துவிட்டுப் போகட்டும்.
@ ஹேமா
நன்றி அக்கா
வாணிவிழா முசிந்தவுடன் நீங்க எப்படி இருப்பீங்களோ.....?
நல்ல வர்ணனை.. நீங்க பணத்தைப் பற்றி சொன்னது முற்றும் உண்மை.. உங்களுக்கும் அனுபவம் இருக்கா?
கடவுளைக் கோவித்ததுண்டா???
@ சிந்து
நீங்களே நல்லா விடமாட்டீங்கள் போல இருக்கே. பண விடயத்தில் அனைவரது அனுபவமும் ஏறத்தாள ஒன்றுதான்.
@ பனையூரான்
அவரிடமிருந்து எதையாவது எதிர்பார்த்து, அது கிடைக்காவிட்டால்தானே கோபம் வரும்.
////கடவுளை நம்புகிறேன். மனிதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட உருவங்களை அல்ல. அந்த உருவங்களால் இன்று மனிதர்கள் பிரச்சினைப்படுவதை அந்தக் கடவுளே விரும்பமாட்டார்.////
இந்தக் கருத்துடன் என்னுடைய மனமும் ஒத்துச் செல்கிறது.
நல்லா சொல்லியிருக்கீங்க. நன்று!
//கொஞ்சம் ஒதுங்கியே இருக்கவேண்டும் என விரும்புபவற்றில் இதுவும் ஒன்று. //
ஏன் பதிவர்கள் எல்லாரமெ இப்பிடி இருக்கிறீங்க? (அல்லது காடட்டிக் கொள்றீங்க?)
உங்கள் கடவுள் சம்பந்தமான கருத்து தான் என் கருத்தும்...
என்ன செய்ய... ம்...
ம்.. தொடர்கிறேன்...
/*...பல்கலையில் நடைபெறவுள்ள வாணிவிழாவில் எனது தலைப்பு பல்கலைக்கழகக் காதல். விதி யாரை விட்டது? ...*/
சும்மா விதி மேல பழிய போடாதேயும்... அந்த தலைப்பு தான் வேணும் என்று அடம் பிடுச்சு வேண்டினது எனக்கெல்லோ தெரியும்..... :D
@ மருதமூரான்
ம்.. என்னைப்போல் ஒருவன்.
@ மங்களூர் சிவா
நன்றி
@ கனககோபி
நாங்க எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க.
// Thinks Why Not - Wonders How said...
/*...பல்கலையில் நடைபெறவுள்ள வாணிவிழாவில் எனது தலைப்பு பல்கலைக்கழகக் காதல். விதி யாரை விட்டது? ...*/
சும்மா விதி மேல பழிய போடாதேயும்... அந்த தலைப்பு தான் வேணும் என்று அடம் பிடுச்சு வேண்டினது எனக்கெல்லோ தெரியும்..... :D//
இருங்க, போன் அடிக்குது, என்னன்னு பாத்துட்டு வந்துடறேன். யாருப்பா அது?
முதலாவதையும் கடைசியையும் தவிர மற்றது ஓகே... இந்த கிழட்டு வயசாகியும் காதல் வரெல்ல எண்டால் என்ன கதை? ;-)
அழகை அனுபவிப்பது தவறா? உதென்ன கதை? பெண் , காமம் என்ற சிறு வட்டத்தினுள் நின்று யோசிப்பது போல் தெரிகிறது.. அழகான பூனைக்குட்டியை தடவி மகிழ்வது தவறா?
@ புல்லட்
காதல் எனக்கு மட்டும் வந்து என்ன பிரியோசனம்? lol
//அழகை அனுபவிப்பது தவறா? உதென்ன கதை? பெண் , காமம் என்ற சிறு வட்டத்தினுள் நின்று யோசிப்பது போல் தெரிகிறது.. அழகான பூனைக்குட்டியை தடவி மகிழ்வது தவறா?//
இது அப்படியல்ல, ஒரு பூவைப் பார்த்து ரசிப்பது வேறு. அதைப் பறித்துப் பார்க்க நினைப்பதுதான் தவறு. இதிலே எங்கே காமம் இருக்கிறது?
ஆதிரை மேட்டருக்குப் பிறகு பூனைக்குட்டிலயே நிக்கிறீங்களே? அதையும் தொடர்ந்து தடவிக்கொண்டிருந்தால் அதுக்கும் வருத்தம், உங்கள்க்கும் வருத்தம் வந்துவிடும். பார்த்து.
நல்லா சொல்லிருக்கீங்க!
@ அருணா
நன்றி
மனிதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட உருவங்களை அல்ல. அந்த உருவங்களால் இன்று மனிதர்கள் பிரச்சினைப்படுவதை அந்தக் கடவுளே விரும்பமாட்டார்.
அருமையாக சொன்னீர்கள்
@ Busooly
நன்றி
Post a Comment