மூணு மாச லீவுன்னு சொல்லிட்டு முழுசா மூணு வாரம் முடியறதுக்குள்ளயே வாடா வெண்ணைன்னுட்டானுங்க கம்பஸ் காரங்க. ஏறத்தாள 400 நாட்களிற்கப்புறம் ஊருக்குப்போன சந்தோசத்தையும், பெற்றோரை, நண்பர்களை, ஆசிரியர்களை சந்தித்த கணங்களை தனிப்பதிவாக இடும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை.
நான் இறுதியாகச் சென்றபோதிருந்த சங்கக்கடைகளின் கியூக்களையும், கடை வாசங்களில் இரண்டுமடங்கு விலையுடனான விலைப்பட்டியலையும் இம்முறை காண முடியவில்லை என்பதால் சிறிய சநதோசம் என்றாலும் ஏறத்தாள யாழின் அடையாளமாகவே இருக்கும் அந்தக் கலாச்சாரமும் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள கல்வியாளர்களின் கருத்து, நேரில் கண்ட உண்மையும் கூட. கொடுக்கப்போகும் விலை அதிகம்தான் என்பது புரிகிறது.
இம்முறை கப்பலில் பயணித்தது வித்தியாசமான அனுபவம். அதைப்பற்றி மட்டும் ஒரு பதிவு விரைவில் வரும், கொஞ்சம் நகைச்சுவையாக. மொத்தத்தில் பில்லா அஜித் பாணியில் நான் சொல்ல வர்றது என்னண்ணா, I Am Back!
5 comments:
வாங்க வாங்க
நல்வரவு
வாங்க சுபாங்கன். பயணங்கள் எப்படி.... உங்கள் உங்களுக்கு நாங்க வேல தந்திருக்கமில்ல. தொடர் பதிவை தொடருங்க...
@ நிகழ்காலத்தில்
நன்றி
@ சந்ரு
எழுதிட்டாப் போச்சு
Welcome back!! :)
Post a Comment