Tuesday, July 21, 2009

கன்னிச்சதமும், முன்னமே கிடைத்த பரிசும்!



இன்று எனது நூறாவது பதிவு. கம்பஸ்சில் தேடித்தமிழ் பேசவேண்டும் என்றிருந்த எனது நிலமை தமிழ்த் தளங்களை அதிகம் தேடவைத்தது. அப்போது அறிமுகமானதுதான் லோஷன் அண்ணாவின் ப்ளாக். அவரது எழுத்துக்களும், அவரது தளம் மூலமாக எனக்கு அறிமுகமான ஏனய பதிவர்களின் எழுத்துக்களும் என்னையும் எழுதத்தூண்டியது.

எனது எழுத்துக்களும், நான் எழுதிய விதமும் ஆரம்பத்தில் ஒரு மாதிரித்தான் இருந்தது. அப்போதெல்லாம் எனக்கு ஆலோசனை கூறித் திருத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். அடுத்து சந்ரு அண்ணாவைப்பற்றிக் கூறியே ஆகவேண்டும். என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து பதிவுலகில் எனக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த இவர் அதே வேகத்தில் பட்டாம்பூச்சி விருதையும் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.  மேலும் என்னைத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும், பின்னூட்டமிட்டும், ஓட்டளித்தும் உற்சாகமூட்டும் அனைவருக்கும் நன்றிகள்.

சந்ரு அண்ணா நான் எனது நூறாவது பதிவை அண்மிக்கும்போது கொடுத்த படாம்பூச்சி விருதை வலையுலக தர்மப்படி மேலும் மூன்று பேருக்குக் கொடுத்தாக வேண்டும்.

  • 1.   சுபானு (ஊஞ்சல்) – அவ்வப்போது எழுதினாலும் அழகாக எழுதும் இவரது அனைத்துப் பதிவுகளுமே எனக்குப் பிடிக்கும்.
  • 2.   சுகுமார் சுவாமிநாதன் (வலைமனை) – இவர் போட்டோ காமென்ட்ஸ் போடும் பதிவுகள் அத்தனையும் அசத்தல்.
  • 3.   கலையரசன் (வடலூரான்) – இவரது வித்தியாசமான பதிவுகள் அனைத்துமே என்னைக் கவர்ந்தவை.

அவ்வளவுதான். வேறென்ன? நம்மகிட்ட இருந்த பந்தைப் பாஸ் பண்ணியாச்சு. அசத்துங்க!

36 comments:

கோவி.கண்ணன் on July 21, 2009 at 12:47 PM said...

வாழ்த்துகள் சுபங்கன் !

நண்பர் லோஷனை சிங்கையில் பார்த்த போது உங்களைப் பற்றியும் விசாரித்தேன்.

வால்பையன் on July 21, 2009 at 1:02 PM said...

நூறுக்கு வாழ்த்துக்கள் தல!

Subankan on July 21, 2009 at 1:32 PM said...

@ கோவி.கண்ணன்

நன்றி, மிக்க மகிழ்ச்சி.

Subankan on July 21, 2009 at 1:33 PM said...

@ வால்பையன்

மிக்க நன்றி.

ARV Loshan on July 21, 2009 at 1:47 PM said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்.. அசத்தி வருகிறீர்கள். உங்களுக்கான தனியான இடம் உண்டு. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

பட்டாம் பூச்சி சிறகடிக்கட்டும்

கோவி அண்ணன் போல சிலர் எங்களை ஊக்குவித்ததையே நாமும் தொடர்ந்தோம்.. :)

Subankan on July 21, 2009 at 1:49 PM said...

@ LOSHAN

நன்றி அண்ணா, உங்கள் வாழ்த்துக்கள்தான் எனக்கான Boost!

Admin on July 21, 2009 at 1:50 PM said...

உங்கள் நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் பலநூறல்ல பல்லாயிரம் இடுகைகள் உங்கள் வலைப்பதிவில் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்...

சுபானு on July 21, 2009 at 1:52 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கள்.
மேலும் மேலும் தொடர்ந்து சிறந்த தகவல்களைத் தரவேண்டும்.

Subankan on July 21, 2009 at 1:52 PM said...

@ சந்ரு

மிக்க நன்றி.

Subankan on July 21, 2009 at 1:54 PM said...

@ சுபானு

நன்றி, நிச்சயமாக.

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) on July 21, 2009 at 2:18 PM said...

வாழ்த்துக்கள் சுபா இன்னும் பல நூறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். உங்களைப்போன்ற பதிவாளர்கலால்தான் தாயகத்துடன் தொடர்ந்து தொடர்புடன் இருக்கிறோம் என்ற ஒரு உணர்வு உண்டாகிறது எம்மைப்போன்றவர்களுக்கு தொடர்ந்து எழுதுங்கள். மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்:..............!!!!

குறிப்பு :- Internet Explorer il உங்கள் தளத்தை திறக்க முடியாமல் இருக்கிறது நெருப்பு நரியிநூடாகவே திறந்து பார்க்கிறேன் கவனித்துக்கொள்ளுங்கள் . மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை ?? எனக்கும் இந்தப்பிரச்சனை இருந்ததது Follow இல் உள்ள சில HTML பிழைகள் காரணமாகவே எனக்கு பிரச்சனை கொடுத்ததது. உங்க்களுக்கு வேற ஏத்தும் HTML பிழையாக இருக்கலாம் கவனித்துக்கொள்ளுங்கள்.

Menaga Sathia on July 21, 2009 at 3:23 PM said...

100வது பதிவுக்கும் விருது பெற்றதற்க்கும் வாழ்த்துக்கள் சுபாங்கன்!!விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

கலையரசன் on July 21, 2009 at 3:49 PM said...

100 வாழ்த்துகளும், 200 அட்வான் வாழ்த்துக்களும் சுபங்கன்!

விருது குடுத்து கெளரவித்ததற்க்கு நன்றி!!

(டேய் கலை.. இன்னுமாடா இந்து ஊரு உன்ன நம்புது?)

Karthik on July 21, 2009 at 4:42 PM said...

வாவ், வாழ்த்துக்கள். :)

Subankan on July 21, 2009 at 4:53 PM said...

@ R.V.Raj

நன்றி, சரிபார்த்துவிடுகிறேன்.

Subankan on July 21, 2009 at 4:53 PM said...

@ Mrs.Menagasathia

மிக்க நன்றி

Subankan on July 21, 2009 at 4:56 PM said...

@ கலையரசன்

நன்றி கலை, நம்பிக்கையைக் காப்பாத்திக்குங்க.

Subankan on July 21, 2009 at 4:57 PM said...

@ Karthik

மிக்க நன்றி

Sukumar on July 21, 2009 at 6:40 PM said...

வெற்றிகரமான நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சுபாங்கன்... இன்னும் பல நூறு பதிவுகள் கண்டு வலை உலகில் வெற்றி கொடி நாட்ட மனமார வாழ்த்துகிறேன்.....!!! இந்த பட்டாம் பூச்சி விருதினை பல தளங்களை பார்த்திருக்கிறேன்.. அது இன்று தங்கள் மூலமாக எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.....!!!

Venkatesh Kumaravel on July 21, 2009 at 7:00 PM said...

மகிழ்ச்சி! வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதவும். ஊக்குவிப்பின் பலத்தை நானும் அறிவேன். நூறாவது பதிவைத் தாண்டியும் உங்களிடம் விஷயம் இருக்கத்தானே செய்கிறது... குட் லக்! இந்த சந்தோஷமான தருணத்தில் இந்த விருதும் உங்கள் தளத்தை அலங்கரிக்கட்டும்:
http://paathasaari.blogspot.com/2009/07/blog-post_21.html

Subankan on July 21, 2009 at 10:00 PM said...

@ Sukumar Swaminathan

மிக்க நன்றி

Subankan on July 21, 2009 at 10:01 PM said...

@ வெங்கிராஜா

உங்க வாழ்த்திற்கும், விருதிற்கும் நன்றி தல

Admin on July 22, 2009 at 7:27 AM said...

//R.V.Raj said...
குறிப்பு :- Internet Explorer il உங்கள் தளத்தை திறக்க முடியாமல் இருக்கிறது நெருப்பு நரியிநூடாகவே திறந்து பார்க்கிறேன் கவனித்துக்கொள்ளுங்கள் . மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை ?? எனக்கும் இந்தப்பிரச்சனை இருந்ததது Follow இல் உள்ள சில HTML பிழைகள் காரணமாகவே எனக்கு பிரச்சனை கொடுத்ததது. உங்க்களுக்கு வேற ஏத்தும் HTML பிழையாக இருக்கலாம் கவனித்துக்கொள்ளுங்கள்.//


சுபாங்கன் நான் Internet Explorer மற்றும் firefox மூலமாகவும் வலைப்பதிவுகள பார்வையிடுகிறேன் அதிலும் அதிகமாக Internet Explorer மூலமாகத்தான் வலைப்பதிவுகளை பாரபார்வையிடுகிறேன். உங்கள் வலைப்பதிவில் இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை R.V.Raj பக்கம் எதும் பிரட்சனை இருக்கலாமோ தெரியவில்லை....

Subankan on July 22, 2009 at 11:33 AM said...

// சந்ரு said...

சுபாங்கன் நான் Internet Explorer மற்றும் firefox மூலமாகவும் வலைப்பதிவுகள பார்வையிடுகிறேன் அதிலும் அதிகமாக Internet Explorer மூலமாகத்தான் வலைப்பதிவுகளை பாரபார்வையிடுகிறேன். உங்கள் வலைப்பதிவில் இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை R.V.Raj பக்கம் எதும் பிரட்சனை இருக்கலாமோ தெரியவில்லை...//

அவர் Internet Explorer 6 பயன்படுத்துவார் போலத் தெரிகிறது. Internet Explorer 8 பயன்படுத்துவோருக்கு பிரச்சினை வராது. நன்றி

சப்ராஸ் அபூ பக்கர் on July 22, 2009 at 11:39 AM said...

நூறு அடிச்சிட்டீங்க... இனி என்ன?....

பட்டய கிளப்புங்க....

வாழ்த்துக்கள்.....

Subankan on July 22, 2009 at 12:16 PM said...

@ சப்ராஸ் அபூ பக்கர்

நன்றி.

sshathiesh on July 22, 2009 at 2:28 PM said...

சதத்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து கலக்குங்கள்.

Subankan on July 22, 2009 at 3:14 PM said...

@ sshathiesh

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் on July 22, 2009 at 3:24 PM said...

வாழ்த்துகள் நண்பரே

Subankan on July 22, 2009 at 3:30 PM said...

@ ஆ.ஞானசேகரன்

நன்றி நன்றி

சி தயாளன் on July 22, 2009 at 4:38 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன். தொடர்ந்து எழுந்துங்கள்..:-)

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) on July 23, 2009 at 2:08 AM said...

இப்போது பிரச்சனை இல்லை சுபங்கன்' Internet Explorer இல் தான் இப்போது பார்க்கிறேன். நானும் Internet Explorer 8 ஐத்தான் பயன்படுத்துகிறேன் சிலவேளை என்னுடைய கணணி அன்று பிரச்சனைப்படுத்தியிருக்கலாம். நன்றி உங்கள் தகவலுக்கு தற்ப்போது பிரச்சனையில்லை.

geevanathy on July 23, 2009 at 5:02 PM said...

100வது பதிவுக்கும் விருது பெற்றதற்க்கும் வாழ்த்துக்கள் சுபாங்கன்!

Subankan on July 24, 2009 at 12:18 PM said...

@ ’டொன்’ லீ

நன்றி தல

Subankan on July 24, 2009 at 12:19 PM said...

@ R.V.Raj

எப்படியோ, தெரிந்தால் சரிதான்.

Subankan on July 24, 2009 at 12:20 PM said...

@ த.ஜீவராஜ்

மிக்க நன்றி.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy