பார்ட் 1 தந்த தைரியத்தில் பார்ட் 2 பார்க்கப்போனால் ஏன்டா வந்தாய் என்று செருப்பால் அடித்தமாதிரி இருந்தது படம். படம் முழுவதும் ரோபோக்களின் பைட். இடையில் அவ்வப்போது கதாநாயகன், கதாநாயகி கூடி முத்தமிடுவதும், குத்துப்பாட்டு மட்டும் இருந்திருந்தால் நம்ம விஜய் படம் பார்த்த திருப்தியாவது கிடைத்திருக்கும். படத்தில் கதையென்று சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை. படம் முழுவதும் தகரத்தைப் போட்டு வெட்டுவதுபோல ஒரே சத்தம். முடியல.
படத்தின் அனிமேசனுக்கு ஒரு பெரிய சல்யூட்டே கொடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. உருண்டுவரும் போல்ஸ்கள் குட்டி ரோபோவாக எழுந்துநிற்பது, வானத்தில் இருந்துவரும் பந்து தண்ணீரில் யம்ப் பண்ணி, புலிவடிவ ரோபோவாக மாறி யம்ப்புவது என சொல்லிக்கொண்டே போகலாம். ரோபோ அழுவது முதல், அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிலும் ஹீரோவுக்கு உதவும் அந்த பச்சை, மற்றும் சிகப்பு ( பெயர் வாயில நுளையலப்பா, தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க) ரோபோக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளில் அவை ஆண், பெண் ரோபோக்களோ என சந்தேகம் வருகிறது. பார்த்தால் உடலமைப்பும் அப்படியே. கிரேட்!. கிளைமார்க்சில் பிரமிட்டை உடைக்கும் ரோபோவை கீழேயிருந்து காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது.
முதல்பாகத்ததில் இறந்த வில்லன் ரோபோ மீண்டும் உயிர்பெறுவதும் நம்ம ஆப்டிமஸ் இறப்பதும், பின் ஹீரோ அவருக்கு உயிர் கொடுப்பதும் ரோபோக்களின் மூதாதயர்கள் மறைத்து வைத்திருக்கும் சூரியனை அழிக்கும் இயந்திரத்தை அழிப்பதும்தான் கதை. இறந்த ஹீரோ மறுபடியும் உயிர்பெறும் காட்சியில் லாஜிக் இருப்பதாகக் காட்டினாலும் நம்ம தமிழ்ப்பட ஞாபகம் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. மற்றபடி அந்த விறுவிறு நேரத்திலும் ஹீரோயின் ஓடிவரும் காட்சியில் பெரிய்ய்..ய ‘ம்ம்….’ தான் வருகிறது.
வசனங்களில் ஆங்கிலப்படத்திற்கே உரிய கெட்ட வாடை. சில இடங்களில் வசனங்கள் புல்லரிக்க வைக்கிறது, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. என்னைப் பொறுத்தவரை முன்னரே சொன்னதுபோல அப்படியே நம்ம விஜய் படம், பாட்டு மட்டும் மிஸ்ஸிங். அனிமேஷனுக்காக (மட்டும்) பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
4 comments:
என்னத்தச் சொல்வது...ம்ம்ம்ம் ம்ம்ம்.....
@ சந்ரு
பரவாயில்லை, ஏதாவது சொல்லுங்களேன்.
தம்பி சுபாங்கன்,
அங்கை நிண்ட க்யு பத்தி ஒண்டும் சொல்லவில்லையே?
இன்னும் 100 பதிவு போடலாமே?
@ ramesh
ஏலேய் சின்னமணி கதைதானே? வேணாம், விவேக் பாவம். விட்டுடுங்க.
Post a Comment