நம் இருவரின் உறவையும்
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!
ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!
உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!
உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?
நீ
நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?
17 comments:
//உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!//
நமக்கும் பொருந்துமோ.....
வரிகள் அருமை வாழ்த்துக்கள் சுபங்கன்.... தொடரட்டும் உங்கள் கவிதைகள்...
//ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!
//
சுபாங்கன் சுகம்தானே.நிறைய நாளா உங்கட பக்கம் வரேல்ல.கவிதை கண்டேன் ஓடி வந்திட்டேன்.
காதலா...ம்ம்ம்...கவிதை அருமை.
நிறையவே தேடலோடு பல விஷயங்களையும் எழுதிக் கலக்குறீங்க.
வாழ்த்துக்கள் சின்னப் பெடியா...!
@ சந்ரு
நன்றி அண்ணா
//நமக்கும் பொருந்துமோ.....
//
யாவும் கற்பனை. lol
@ ஹேமா
நன்றி, அவ்வப்போது வாருங்கள் அக்கா
superb!
ஒரு சொல்லில் சொல்வதென்றால்..
Superb! :)
வாழ்த்துக்கள்...
ஆமா.. யாரடா அந்த அதிஸ்ட தேவதை.. சும்மா என்று மட்டும் சொல்லாத.. அப்படித் தெரியவில்லை..!
@ சுபானு
இன்றுவரை எனது காதலியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. கவிதையைப் படித்தபின்பாவது ...
நம்புங்கப்பா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ NPP
Thanks Pranavan.
ஸ்ஸ்ஸபா....
இப்பவே கண்ணாக்கட்டுதே....
கலக்கல் !!!
:)))
தொடரட்டும் உங்கள் கவிதைகள்...
தொடரட்டும் உங்கள் தேடல்!
வாழ்த்துக்கள்!!!
@ வழிப்போக்கன்
அந்தக் கண்ணாடிய முதல்ல கழட்டுப்பா, சரியாயிடும்.
@ பிரவின்குமார்
நன்றி நண்பா
I like all the lines of this poem. The last line is the best..(Is that true?) Ethaiyaavathu kayila vaiththirukkireenkalaa?
@ Sinthu
எத்தனை பேரைப் பாத்திருக்கோம்? எனக்கு இல்லை!!! விடமாட்டேங்கிறாங்களே!
Useless -Pls don't try kavithai's you don't have any quality to write kavithai.
Gopal Rao
Ada...
Super bro...
Post a Comment