நண்பர் சந்ரு என்னை, ஆரம்பப் பள்ளிப் பருவத்தைப் பற்றி எழுதச் செல்லி தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். எனக்கு இதுதான் முதலாவது தொடர்பதிவு. எனது இளமைக்காலத்தை மீண்டும் அசைபோட வைத்த அவருக்கு முதலில் நன்றிகள்.
எனது பாலர் வகுப்புக் கல்வி அப்பாவின் பணி நிமித்தம் ஏற்பட்ட இடமாற்றங்களினால் இரண்டு வருடங்களில் மூன்று வெவ்வேறு பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தது. அதனாலோ என்னவோ, அங்கு செல்வதிலோ, அந்த விளையாட்டுடன் கூடிய கற்றலிலோ மனது ஒட்டவில்லை. எப்போது பாடசாலை முடியும், வீடு செல்லலாம் என்பதே ஒரே குறிக்கோள். அது மட்டுமல்ல, பாடசாலை நடைபெறும் போதுகூட அம்மாவோ, இல்லை சித்தியோ அங்கே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் பாடும் சோலோவில் யாருமே படிக்க முடியாது.
இவ்வாறு மிக்க ஆர்வத்தோடு கற்ற என்னை ஆரம்பக் கல்விக்காக வட இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் (அப்போது அது கலவன் பாடசாலையாக இருந்து பின் மகளிர் பாடசாலை ஆக்கப்பட்டது) சேர்த்துவிட்டார்கள். இப்போது என்னை பாடசாலைக்கு கொண்டுபோய் விடும் வேலை பெரியப்பாவினுடையது. அவர் இப்போது எம்முடன் இல்லாதபோதும், இதை எழுதும்போது அவருடன் கூடவே பயணிப்பது போலவே இருக்கின்றது.
அதே வகுப்பில் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தியும் வந்து சேர்ந்தாள். அதுவரை சோலோ பாடிக்கொண்டிருந்த எனக்கு டூயட் பாடும் வாய்ப்பு இப்போது. எப்படியோ, கடனே என்று அந்த ஒரு வருடத்தையும் ஓட்டிவிட்டேன்.
அடுத்தவருடம் வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்த அப்பா நாடு திரும்பியதால் ஆண்டு இரண்டு முதல் சொந்த ஊரான கொக்குவிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆண்டு இரண்டுக் கல்வியைத் தொடர்ந்தேன். அப்பாவின் வழிகாட்டலும், புதிய பாடசாலையின் சூழலும், என்னாலும் படிக்க முடியும் என்று எனக்கே தெரிவித்தது. ஆண்டு இரண்டில் கணித பாடத்தில் நான் எடுத்த நூறு மதிப்பெண்களுடன் எனக்கு கணித்ததின்பால் ஏற்பட்ட ஈர்ப்புத்தான் என்னை உயர்தர வகுப்பில் கணித பாடம் கற்கவும், பின் இன்றுவரை கணித்ததின்பால் ஏற்பட்ட ஈர்ப்புக்கும் காரணம் என்று நினைக்கின்றேன்.
ஆண்டு மூன்றில்தான் எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் கிடைத்தார். கௌரி டீச்சர். ஆசிரியர் என்றால் அடிப்பார் என்ற எனது நினைப்பை மாற்றியவர் அவர்தான். சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட பாராட்டுவார். அவரிடம் பாராட்டுப் பெறுவதற்காகவே ஏதோ படித்துக்கொண்டிருந்த நான் எனக்காகவும் படிக்கத் தொடங்கினேன். என்றுமே மறக்க முடியாத ஆசிரியர் அவர்.
ஆண்டு நான்கு. என்னடா இவன், ரோம்ப நாளா ஒரே ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கேனேன்னு யாருக்கோ போர் அடிச்சிரிச்சு போல, அதனால யாழ்ப்பாணத்துல போர் வெடிச்சிரிச்சு. ஆரம்பத்துல கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தொடங்கி, பின் இடம்பெயர்ந்து, சிறிதுகாலம் படிப்பு ஏதுமின்றி வெட்டியாக கிரிக்கெட் ஆடி, பின் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள சின்னத்தம்பி வித்தியாலயத்தில் சிறிதுகாலம் படித்து, பின் மீண்டும் கொக்குவில் வந்து வெட்டியாகத் திரிந்து, பின் மறுபடியும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் என்று பிட்டுப் பிட்டாகப் படித்தாலும் பிட் அடிக்காமல் பாஸ் பண்ணி ஆண்டு ஐந்திற்கு போய்விட்டேன்.
ஐந்தாம் ஆண்டில்தான் புலமைப் பரிசில் பரீட்சை. இலங்கைப் பெற்றோர்களிற்கு பிள்ளை இதில் பாஸ் செய்வது கௌரவப் பிரச்சினையாகக் கருதப்படும். வகுப்பில் கற்பிக்கப்படும் பாடங்களுடன் சம்பந்தமே இல்லாமல் பொது அறிவு, IQ போன்றவற்றை பரீட்சிப்பதற்காக அரசாங்கத்தால் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை. எனக்கு ஐந்தாம் ஆண்டில் அடிக்கடி சுகவீனம் வந்து வேறு அல்லற்படுத்தியது. பாதி நாட்கள் பாடசாலைக்குப் போக முடியவில்லை. இதனால் பாடசாலைக் கல்வியை விட்டுவிட்டு, தனியே புலமைப்பரிசிற் பரீட்சைக்கு மட்டும் படித்து வந்தேன். இதனால் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் இருபதிலிருந்து முப்பதாவது இடத்தையே பிடித்துவந்தேன். அப்போது வகுப்பாசிரியர் திருமதி பாலதயானந்தன் அவர்கள். ஆரம்பத்தில் அவரிடம் நிறையவே வாங்கிக் கட்டிக் கொண்டாலும், பின் எனது நிலை தெரிந்து அவர் தந்த ஆதரவு மறக்க முடியாது. இவ்வாறு புயலடித்த ஆண்டு ஐந்தின் புலமைப்பரிசிற் பரீட்சையில் பாடசாலையில் முதலிடமும், மாவட்டத்தில் மூன்றாவது இடமும் பெற்றதோடு என் ஆரம்பக் கல்வி இனிதே முடிவடைதது.
இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்
17 comments:
இந்த மாதிரி ஆசிரியர்கள் தான் இன்றைய சூழ்நிலையில் வேண்டும் மலரும் நினைவுகள் அருமை
@ Suresh Kumar
உண்மைதான். இன்று ஓரளவு ஆரம்பப் பாடசாலைகளில் அப்படித்தான். நன்றி.
அப்போ நீங்க எல்லாவற்றிலும் கில்லாடின்னு சொல்லுங்க....
அடுத்து நம்ம லோசன் அண்ணாவ அழைத்தமைக்கு நன்றி சுபாங்கன்...
அவசரத்தில் பதிவிட்டிருங்க போலும் சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அந்த பிழைகள் வேறு போருளைத்தருகின்றன... திருத்தி விடுங்கள்
@ சந்ரு
//அவசரத்தில் பதிவிட்டிருங்க போலும் சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அந்த பிழைகள் வேறு போருளைத்தருகின்றன... திருத்தி விடுங்கள்
//
உண்மைதான். ஒரளவு சரிபார்த்துவிட்டேன். நன்றி.
thanks 4 calling....
i'l do it ...
:)))
இவ்வாறு புயலடித்த ஆண்டு ஐந்தின் புலமைப்பரிசிற் பரீட்சையில் பாடசாலையில் முதலிடமும், மாவட்டத்தில் மூன்றாவது இடமும் பெற்றதோடு என் ஆரம்பக் கல்வி இனிதே முடிவடைதது.//
வாழ்த்துகள்...
இலங்கை பதிவர்களுக்கு தனிக்களம் அமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டு வரும் “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் பதிவுகளும் இடம்பெறுகின்றன.
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்
“நிலாமுற்றம்”
http://www.nilamuttram.com/
அன்பின் நண்பன் சுபாங்கன்...
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html
பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
நன்றி வழிப்போக்கன்
@ சந்ரு
உங்களிடமிருந்து விருது வாங்குவதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி.
என்ன இப்படிக் கவிட்டிட்டீன்களே.....
My post will be coming after a while, is that ok? becuse I'm in Jaffna...
@ Sinthu
பரவாயில்லை, நேரம்கிடைக்கும்போது தொடருங்கள். நானும் யாழில்தான் இருப்பேன் - வரும் செவ்வாயன்று
ஆம் Subankan சிறப்பாக இருந்தது.இளமை காலத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி
எனக்கும் பதிவு எழுத ஆசை ஆனல் தமிழில் தட்டச்சு செய்ய நிண்ட நேரம் பிடிக்கிதே என்ன செய்ய பாப்பம் இந்த விடுமுறைக்கு எழுதுவம்
http://newtamilscience.blogspot.com/
sindujn
நன்றி
@ sindujan
நன்றி, தமிழ் 99 இல் தட்டச்சுவது சுலபம்.
நன்றி.Subankan
முயற்சி செய்கிறேன்
Post a Comment