வெற்றிகரமாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர்களின் முதலாவது ஒன்றுகூடலைத் தொடர்ந்து இருக்கிறமில் அனைவரும் சந்தித்துக்கொண்டாலும் அது வெறுமனே கூடினோம், கு… குதுகலித்தோம், பின்னர் பிரிந்துவிட்டோம் என்பதைத் தவிர்த்து பதிவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யவில்லை என்பதே பலரதும் ஒருமித்த கருத்து.
இதனாலேயே இரண்டாவது சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்பு பலரது பதிவுகளில் தெரிந்தாலும் அதை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளவே இந்தப் பதிவு. இரண்டாவது சந்திப்பு தொடர்பான உங்கள் ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையுமே பின்னூட்டமிடுங்கள். அல்லது தனிமடலில் தெரியப்படுத்துங்கள். உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யலாம். கலந்துகொள்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்து இடத்தை முடிவுசெய்யலாம். இந்த மாத இறுதியில், இல்லை அடுத்த மாத ஆரம்பத்தில் சந்திக்கலாம்.
வேறென்ன? ஸ்டாட் மீசிக்…..
12 comments:
ஸ்டார்ட் மீயுஜிக்… :))))
started music....
go ahead
உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் சுபாங்கன்.
அண்மைக்காலமாக ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை எதிர்கொள்வதற்க்கு இன்னொரு சந்திப்பு அவசியமானது அத்தியாவசியமானது ஆரம்பித்துவிட்டீர்கள் பலர் வருவார்கள் என நினைக்கின்றேன்.
சிறப்பான திட்டமிடல் அவசியம் இல்லையென்றால் ..... (விளங்குகிறதோ)
எங்கேயாவது ஒரு beah hotel இல் நடத்தலாமே. :)
சந்திப்போம்....சந்திப்போம்....:))
//sanjeevan said...
எங்கேயாவது ஒரு beach hotel இல் நடத்தலாமே. :)//
beach இல் நடத்தலாம், hotel தான் இடிக்குது....
//அண்மைக்காலமாக ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை//
:)
நண்பர்களே....
ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தால் சிறப்பாக இருக்கும்..
சுபாங்கன்...
எமது கூகிள் குழுமத்தில் தனியே ஒரு கலந்துரையாடலை '2ஆவது பதிவர் சந்திப்பு ஆலோசனைகள்' என்ற பெயரில் திறப்போம்...
அனைவரும் தங்கள் ஆலோசனைகளை முன்வைக்கச் சொல்லுவோம்....
என்னைப் பொறுத்தவரை ஒழுங்குபடுத்தல் குழு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்...
அதற்கு முன்னர் ஆலோசனைகளைப் பெறுவோம்.
இடத்தைத் தெரிவுசெய்வது முக்கியம் என்றாலும் மற்றைய விடயங்களும் முக்கியமானவை.
கட்டாயம் சந்திக்க வேண்டும்!
எங்கே, எப்போது- அதுதான் கேள்வி!
ஹ்ம்.... காலிமுகத்திடலில் சந்திப்போமா? வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இல்லாவிட்டால் தமிழ்ச்சங்கம் அல்லது இராமகிருஷ்ணமிஷன் சிறிய மண்டபம் நல்ல தெரிவாக இருக்கும்.
கையில் கொஞ்சம் காசு இருந்தால் - எங்கேயாவது சிறிய கொன்ஃபரன்ஸ் (மாநாட்டு மண்டபம்)ஹோலில் ப்ரொஃபெஷனலாக நடத்தலாம்!
மு.மயூரன் said...
//அண்மைக்காலமாக ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை//
:)
ஹாஹா உங்களுக்குத் தான் உள்குத்து நன்றாக விளங்கியிருக்கிறது.
சிலரின் எம்மைப் பற்றிய எரிச்சலான விமர்சனத்தை காழ்ப்புணர்ச்சி என்றுதால் சொல்லவேண்டியிருக்கின்றது.
என்னுடைய ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு. விரைவில், காத்திரமான சந்திப்புக்கு வழிகோலுவோம். வாழ்த்துக்கள்.
போக்குவரத்து மற்றும் இட வசதிகள் பூரணமாக இருக்கும் இடமாக பார்த்து சந்திப்பு நடக்கும் இடத்தை தெரிவு செய்யுங்கள் நண்பர்களே (நானும் அடக்கம் சரியா கனககோபி)
சந்திப்போம்... வலை பதிவு பற்றி நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வலைப்பதிவுகளில் புகுந்து விளையாட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. பல vidayankal therivathum இல்லை. நான் appadiye விட்டுவிட்டேன். பல திரட்டிகளில் கூட நான் இணையவில்லை.
உங்கள் ஆர்வத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம்
Post a Comment