அண்மையில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார், உங்களுக்கு எப்போதும் இல்லாத சமூக அக்கறை பதிவெழுதத் தொடங்கியவுடன் மாத்திரம் எங்கிருந்து வந்துவிடுகிறது என்று. அதற்கு நான் எங்கிருந்து வந்தாலென்ன, நல்ல விடயம்தானே என்றேன். விடாத அவர் அதெப்படி எல்லாப் பதிவர்களுக்கும் சொல்லி வைத்தாற்போல வருகிறது? அடுத்தவர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் ஆயுதம்தான் இது என்றார். இதற்கு நான் கொடுத்த பதிலைப் பிறகு தருகின்றேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
**********
பின்னூட்டம் இடப்படும்போது தானியங்கிமுறையில் இடப்படும் Spam பின்னூட்டங்களை தடுப்பதற்காகவே Word Verification பயன்படுகின்றது. தமிழ்ப் பதிவுகளில் Spam பின்னூட்டங்கள் பெரிதாக வருவதில்லை என்பதாலும், Word Verification படிப்பவர்களை எரிச்சற்படுத்தும் என்பதாலும் யாரும் அதை செயற்படுத்துவதில்லை.
ஆனால் அண்மைக்காலமாக எனக்கு அப்படியான Spam பின்னூடங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் வருகின்றன. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காகவே அது இடப்படுகிறது. (அந்த நிறுவனத்திற்கும் தமிழ் பதிவுலகிற்கும் எந்த சம்பந்தமுமில்லை) பின்னூட்டங்களை மட்டுறுத்தி வைத்திருப்பதனால் அவற்றை வெளியிடுவதில்லை. பின்னூட்டங்களை மட்டுறுத்தாத பதிவர்கள் இது தொடர்பாக கொஞ்சம் அவதானமாக இருங்கள். இல்லாவிட்டால் பதிவுகளை அவை குப்பையாக்கிவிடும்.
**********
இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம் என்பதால் எனக்கு அதிகம் பயன்படுகிறது. உங்களுக்கும் பயன்படலாம். பார்வையிட இங்கே சொடுக்கவும்.
**********
பரீட்சை முடிவடைந்த்தால் DVD யில் ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது. வித்தியாசமான கதைக்கரு. படம் இறுதிவரை சுவாரசியம் குறையாமல் இருந்தது சிறப்பு. காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!
**********
பேராண்மை திரைப்படமும் இப்போதுதான் பார்க்கக்கிடைத்தது. அருமையான கதை. ஆனால் ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், சாதி வெறிக் காட்சிகளும் – ஒரு துளி விஷம். தவிர்த்திருக்கலாம். ஆனால் மேலே கூறிய காரணத்துக்காகவே இதைப் பாராட்டலாம்.
**********
இதற்கு வார்த்தைகள் தேவையா?
29 comments:
சரக்கு வந்திருச்சு,
அப்புறம் பின்னூட்டுகிறேன்
கிக்கு கம்மின்னாலும்
சரக்கு சூப்பர்...
//உங்களுக்கு எப்போதும் இல்லாத சமூக அக்கறை பதிவெழுதத் தொடங்கியவுடன் மாத்திரம் எங்கிருந்து வந்துவிடுகிறது //
என்னைப்பொறுத்த வரை சமூக அக்கறை இல்லாதவர் என்று எவனும் இருக்க முடியாது, ஏனெனில் நாங்கள் தான் சமூகம்.. ஒரு பிரச்சனை என்றால் எல்லோருக்குமதான்... ஆனால் என்ன எங்களின் இயலாமை அதை பேச்சுடன் நிறுத்தி விடுகிறது...
//விடாத அவர் அதெப்படி எல்லாப் பதிவர்களுக்கும் சொல்லி வைத்தாற்போல வருகிறது? அடுத்தவர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் ஆயுதம்தான் இது என்றார். இதற்கு நான் கொடுத்த பதிலைப் பிறகு தருகின்றேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்//
நாலு பேர் சேர்ந்து நாங்கள் அரட்டை அடிக்கும்போது நக்கல் பிக்கல் பிடுங்கல் போக இரண்டு விடயமாவது ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறோமோ இல்லியோ ... பதிவெழுத வந்த பிறகு அதை பகிரந்து விடுகிறோம் அவ்வளவுதான் . நல்லதோ கெட்டதோ நாலு பேரிடம் பகிரந்து கொளவதல் ஒரு திருபதி..இது ஒரு ஆயுதமும் அல்ல மண்ணும் இல்ல...
//பின்னூட்டம் இடப்படும்போது தானியங்கிமுறையில் இடப்படும் Spam பின்னூட்டங்களை தடுப்பதற்காகவே Word Verification பயன்படுகின்றது.//
எனக்கு இது வரை இரண்டு தான் வந்திருக்கிறது அதுதானா..ரொம்ப பிரபலமானால் இதுதான் பிரச்சனை
//மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம்//
நல்ல தகவல்..நன்றிகள்
/பரீட்சை முடிவடைந்த்தால் DVD யில் ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது. வித்தியாசமான//
ஷங்கர் தொடரந்து நல்ல படங்களை வழங்கி வருகிறார் நான் இன்னும் பாரக்கவில்லை ... எங்களுக்கு பரீடசை எப்பன்னே தெரியாது ஆகவே எப்படியும் பாரத்துவிடுவேன்..
//பேராண்மை திரைப்படமும் //
என்னவோ எனக்கு பிடக்கவில்லை ஏனெனில் கதையில இருக்கம் சீரியஸ் காடசிகளில் இல்லை இறுதிக்காடசிகள் சிரிப்புதான் வந்தது ஆனால் ஆங்கிலப்படங்களில் அக்சன் காடசிகளை பாரத்து பழகியதோ தெரியவில்லை..
அந்த படம் அருமை ...
எப்படி பின்னூட்டம் சுபாங்கனின் பதிவில் ஒருமுறை அடித்த கும்மி ருசி பின்னூட்டம் போட வந்தால் போக மனம வருகுதில்லை..
//ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது.//
அடியேனும் தங்களுடன் சேர்ந்துதானே பார்த்தேன், படம் சூப்பர் ஆனால் பயம்தான் இன்னும் தெளியவில்லை...
தண்ணீரைப்பார்த்தாலே குலை நடுங்குகிறது..
//இதற்கு வார்த்தைகள் தேவையா?//
:D:D:D
சரக்கு அழகு....
சமூக அக்கறை தொடர்பாக,
பாலவாசகனின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் சமூகம் சார்ந்த அக்கறை இருக்கும், ஆனால் சாதாரணனாக வீதியில் ஒரு அநியாயம் நடக்கும்போது அதை எதிர்ப்து என்பது எங்கள் நாட்டில் எந்தளவுக்கு சாத்தியமானது என்று தெரியவில்லை.
இப்போது சாதாரண மக்களிடத்தேயும் வன்முறைகள் நிறையவே புகுந்துவிட்டதால் சமூக அக்கறையை நேரடியாக வெளிப்படுத்த எந்த சாதாரணனனுக்கும் முடிவதில்லை.
ஆனால் பதிவுலகத்திற்கு வந்த பின்னர் எங்கள் கருத்துக்களை ஓரளவுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்த முடிகிறது.
(சில மேற்தட்டு அரசியல் விடயங்களைத் தவிர)
மற்றும்படி எம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக என்ற கருத்து எனக்கு விளங்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரை பதிவர்கள் எல்லோரும் சமூக அக்கறையை கொஞ்சமாவது கொண்டவர்கள். எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கும் போது எனக்கும் சமூக அக்கறை என்று காட்டுவுதன் மூலம் எவ்வாறு என்னை நான் வேறுபிரித்துக் காட்ட முடியும்?
வேறுபிரித்துக் காட்டுவதற்கு வேறுசில வழிகள் இருக்கின்றன.
சில பதிவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்.
மின் அகராதிக்கு நன்றி.
நீங்கள் முதல் சுட்டியைத் தந்தபோது அது எனக்குப் பயன்பட்டது.
பதிவில் வெளியிட்டதால் இன்னும் நிறையப்பேர் அறிய வாய்ப்புக் கிடைக்கும்.
ஈரம் வித்தியாசமான முயற்சிதானாம்...
இன்னும் பார்க்கவில்லை.
அமானுசியம் என்பது என்னை படத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிறது.
நேற்று யாவரும் நலம் பார்த்ததன் பின்னர் ஈரம் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது.
பார்ப்போம்.....
பேராண்மையில் ஆரம்ப இரட்டை அர்த்த வசனங்கள் எனக்கும் பிடிக்கவில்லைத் தான்.
எனினும் நிறைய மொக்கைப் படங்களுடன் ஒப்பிடும்போது நல்ல முயற்சியென எனக்குப்பட்டது.
படம் அழகு... :)
//நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?// பதிவர்களும் ஒருவகை செய்தி கடத்துனரே. அந்த வகையில் சமூகத்தால் கட்டி எழுப்பப் படுகின்ற விடயங்கள் சமூகத்தைப் பாதிக்கின்ற போது இந்த சமூகத்தில் ஒருவன்/ஒருத்தி என்ற உள்ளுணர்வு பதிவுலகிற்கு வரும் போது அதிகமாகிறது (காரணம்: தேடல்கள் அதிகரிக்கையில் சமூகத்திப் பதிவர்கள் பார்க்கும் கோணம் சாதாறனமானவர்களிடையிளிருந்து வேருபடிகிறது.) என்னைத் தேடாதீங்க.... (என் கருத்தைக் கேட்டு அடிக்க வந்திடுவீன்களோ என்ற பயம் தான்..)
//உங்களுக்கும் பயன்படலாம். //
நன்றி...
//காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!//
உண்மை தான்.
//இதற்கு வார்த்தைகள் தேவையா?//
வார்த்தையால் வர்ணிக்க என்னிடமும் மொழி இல்லை...
// யோ வொய்ஸ் (யோகா) said...
சரக்கு வந்திருச்சு,
அப்புறம் பின்னூட்டுகிறேன்//
சரி, ஆணிகள் குறைந்தபின் வாருங்கள்
// அகல்விளக்கு said...
கிக்கு கம்மின்னாலும்
சரக்கு சூப்பர்..//
நன்றி அகல்விளக்கு
// Balavasakan said...
என்னைப்பொறுத்த வரை சமூக அக்கறை இல்லாதவர் என்று எவனும் இருக்க முடியாது, ஏனெனில் நாங்கள் தான் சமூகம்.. ஒரு பிரச்சனை என்றால் எல்லோருக்குமதான்... ஆனால் என்ன எங்களின் இயலாமை அதை பேச்சுடன் நிறுத்தி விடுகிறது...
//
உண்மைதான் பாலா, அதன் மறுவடிவம்தான எங்கள் எழுத்துகள்
//
நாலு பேர் சேர்ந்து நாங்கள் அரட்டை அடிக்கும்போது நக்கல் பிக்கல் பிடுங்கல் போக இரண்டு விடயமாவது ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறோமோ இல்லியோ ... பதிவெழுத வந்த பிறகு அதை பகிரந்து விடுகிறோம் அவ்வளவுதான் . நல்லதோ கெட்டதோ நாலு பேரிடம் பகிரந்து கொளவதல் ஒரு திருபதி..இது ஒரு ஆயுதமும் அல்ல மண்ணும் இல்ல...
//
அதே
//
எனக்கு இது வரை இரண்டு தான் வந்திருக்கிறது அதுதானா..ரொம்ப பிரபலமானால் இதுதான் பிரச்சனை
//
இதற்கும் பிரபலத்திற்கும் சம்பந்தமில்லை, எங்கள் பதிவின் முகவரி அவர்களிடம் மாட்டினாலே போதும்.
//
நல்ல தகவல்..நன்றிகள்
//
நன்றி
//Balavasakan said...
ஷங்கர் தொடரந்து நல்ல படங்களை வழங்கி வருகிறார் நான் இன்னும் பாரக்கவில்லை ... எங்களுக்கு பரீடசை எப்பன்னே தெரியாது ஆகவே எப்படியும் பாரத்துவிடுவேன்..
//
பாருங்கள், வித்தியாசமான அனுபவமாக இருக்கும்
//
என்னவோ எனக்கு பிடக்கவில்லை ஏனெனில் கதையில இருக்கம் சீரியஸ் காடசிகளில் இல்லை இறுதிக்காடசிகள் சிரிப்புதான் வந்தது ஆனால் ஆங்கிலப்படங்களில் அக்சன் காடசிகளை பாரத்து பழகியதோ தெரியவில்லை.//
தமிழிற்கு இது புதிது. அவ்வளவுதான். ஆங்கிலப்படத்தோடு எல்லாம் ஒப்பிடக்கூடாது.
//Balavasakan said...
அந்த படம் அருமை ...
எப்படி பின்னூட்டம் சுபாங்கனின் பதிவில் ஒருமுறை அடித்த கும்மி ருசி பின்னூட்டம் போட வந்தால் போக மனம வருகுதில்லை.//
ஆகா, நன்றி நண்பா
// Bavan said...
//ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது.//
அடியேனும் தங்களுடன் சேர்ந்துதானே பார்த்தேன், படம் சூப்பர் ஆனால் பயம்தான் இன்னும் தெளியவில்லை...
தண்ணீரைப்பார்த்தாலே குலை நடுங்குகிறது.//
பார்த்து, குளிக்கவாவது பயன்படுத்துங்கள் :P
// கனககோபி said...
சரக்கு அழகு....//
நன்றி
//சமூக அக்கறை தொடர்பாக,
பாலவாசகனின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் சமூகம் சார்ந்த அக்கறை இருக்கும், ஆனால் சாதாரணனாக வீதியில் ஒரு அநியாயம் நடக்கும்போது அதை எதிர்ப்து என்பது எங்கள் நாட்டில் எந்தளவுக்கு சாத்தியமானது என்று தெரியவில்லை.
இப்போது சாதாரண மக்களிடத்தேயும் வன்முறைகள் நிறையவே புகுந்துவிட்டதால் சமூக அக்கறையை நேரடியாக வெளிப்படுத்த எந்த சாதாரணனனுக்கும் முடிவதில்லை.
ஆனால் பதிவுலகத்திற்கு வந்த பின்னர் எங்கள் கருத்துக்களை ஓரளவுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்த முடிகிறது.
(சில மேற்தட்டு அரசியல் விடயங்களைத் தவிர)//
உண்மைதான் கோபி
//மற்றும்படி எம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக என்ற கருத்து எனக்கு விளங்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரை பதிவர்கள் எல்லோரும் சமூக அக்கறையை கொஞ்சமாவது கொண்டவர்கள். எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கும் போது எனக்கும் சமூக அக்கறை என்று காட்டுவுதன் மூலம் எவ்வாறு என்னை நான் வேறுபிரித்துக் காட்ட முடியும்?//
அதே
//வேறுபிரித்துக் காட்டுவதற்கு வேறுசில வழிகள் இருக்கின்றன.
சில பதிவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்.//
புரிகிறது :)
//கனககோபி said...
மின் அகராதிக்கு நன்றி.
நீங்கள் முதல் சுட்டியைத் தந்தபோது அது எனக்குப் பயன்பட்டது.
பதிவில் வெளியிட்டதால் இன்னும் நிறையப்பேர் அறிய வாய்ப்புக் கிடைக்கும்.//
அதற்காகத்தான் பதிவிலிட்டேன்.
//
ஈரம் வித்தியாசமான முயற்சிதானாம்...
இன்னும் பார்க்கவில்லை.
அமானுசியம் என்பது என்னை படத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிறது.
நேற்று யாவரும் நலம் பார்த்ததன் பின்னர் ஈரம் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது.
பார்ப்போம்.....
//
அமானுஸ்யத்தை நம்புபவர்கள்தான் படம் பார்க்கவேண்டுமென்பது இல்லையே, பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்
//பேராண்மையில் ஆரம்ப இரட்டை அர்த்த வசனங்கள் எனக்கும் பிடிக்கவில்லைத் தான்.
எனினும் நிறைய மொக்கைப் படங்களுடன் ஒப்பிடும்போது நல்ல முயற்சியென எனக்குப்பட்டது.
//
same blood
//
படம் அழகு... :)
//
நன்றி
// விபு said...
பதிவர்களும் ஒருவகை செய்தி கடத்துனரே. அந்த வகையில் சமூகத்தால் கட்டி எழுப்பப் படுகின்ற விடயங்கள் சமூகத்தைப் பாதிக்கின்ற போது இந்த சமூகத்தில் ஒருவன்/ஒருத்தி என்ற உள்ளுணர்வு பதிவுலகிற்கு வரும் போது அதிகமாகிறது (காரணம்: தேடல்கள் அதிகரிக்கையில் சமூகத்திப் பதிவர்கள் பார்க்கும் கோணம் சாதாறனமானவர்களிடையிளிருந்து வேருபடிகிறது.) என்னைத் தேடாதீங்க.... (என் கருத்தைக் கேட்டு அடிக்க வந்திடுவீன்களோ என்ற பயம் தான்..)
//
பதிவர்களும் சாதாரணமானவர்கள்தானே என்பதே அவரது வாதம். ஆனால் பதிவுலகிற்குள் வரும்போது தேடல்கள் அதிகரிப்பது காரணமாகலாம்.
//காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!//
உண்மை தான்.
// இதற்கு வார்த்தைகள் தேவையா?//
வார்த்தையால் வர்ணிக்க என்னிடமும் மொழி இல்லை..//
நன்றி விபு
நீங்கள் தெரிவித்த பதிலை எப்போது வெளியிடுவீர்கள் சுபாங்கன் அண்ணா...?
//அமானுஸ்யத்தை நம்புபவர்கள்தான் படம் பார்க்கவேண்டுமென்பது இல்லையே, பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்//
உண்மைதான்...
இதுவரை நாளும் உந்த அம்மன் வந்து ஆடுற படங்களையும், உந்த பேய், பூதக் கதைகளையும் பெரிதாகப் பார்ப்பதில்லை....
இனி சும்மா பொழுதுபோக்கிற்காகப் பார்க்கலாம் என்று நேற்றுத் தான் முடிவெடுத்தேன்.....
(ஆதவன் படம் இரண்டு தரம் முழுமையாப் பார்த்திருக்கிறன்.... அத விட வேற என்ன தகுதி வேணும் எனக்கு?)
நானும் பாலவாசகரின் கருத்தை ஆமோதிக்கிறேன், லேலும் அகராதியின் சுட்டிக்கு நன்றி, எனக்கு ஸபேம் பின்னூட்டம் வருவதில்லை, இதுக்குதான் பிரபல பதிவர் ஆககூடாது என சொல்லுறது, இப்ப புரியுதா?
அருமையான பதிவு சுபாங்கன்
//இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம் என்பதால் எனக்கு அதிகம் பயன்படுகிறது. உங்களுக்கும் பயன்படலாம். பார்வையிட இங்கே சொடுக்கவும்.//
மிகவும் பயனுள்ளதொன்றையும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!
//கனககோபி said...
//அமானுஸ்யத்தை நம்புபவர்கள்தான் படம் பார்க்கவேண்டுமென்பது இல்லையே, பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்//
உண்மைதான்...
இதுவரை நாளும் உந்த அம்மன் வந்து ஆடுற படங்களையும், உந்த பேய், பூதக் கதைகளையும் பெரிதாகப் பார்ப்பதில்லை....
இனி சும்மா பொழுதுபோக்கிற்காகப் பார்க்கலாம் என்று நேற்றுத் தான் முடிவெடுத்தேன்.....
(ஆதவன் படம் இரண்டு தரம் முழுமையாப் பார்த்திருக்கிறன்.... அத விட வேற என்ன தகுதி வேணும் எனக்கு?)//
நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாகப் பாருங்கள்
// யோ வொய்ஸ் (யோகா) said...
நானும் பாலவாசகரின் கருத்தை ஆமோதிக்கிறேன், லேலும் அகராதியின் சுட்டிக்கு நன்றி, எனக்கு ஸபேம் பின்னூட்டம் வருவதில்லை, இதுக்குதான் பிரபல பதிவர் ஆககூடாது என சொல்லுறது, இப்ப புரியுதா?//
என்ன கொடுமசார் இது? நான் பிரபலமும் இல்லை, பிரபலத்துக்கும் இதுக்கும் சம்பந்தமும் இல்லை. இது சாபக்கேடு. நன்றி அண்ணா
// யாழினி said...
அருமையான பதிவு சுபாங்கன்
மிகவும் பயனுள்ளதொன்றையும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!//
நன்றி யாழினி
நான் சொன்ன பதில் இதுதான். அனைவருக்கும் சமுதாயத்தின்மீது கோபம் வருவது இயற்கை. அந்த கோபத்துக்கான வடிகாலாக பதிவு எழுதுவதைத் தேர்ந்தெடுத்தவர்கள்தான் பெரும்பாலான பதிவர்கள். மற்றபடி பிரித்துக் காட்டுவதற்கான தேவை இல்லை. ஆனால் என்னைப்போய் இப்படி ஒரு வம்புக்கு இழுத்தாரே, எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது.
// Subankan said...
நான் சொன்ன பதில் இதுதான். அனைவருக்கும் சமுதாயத்தின்மீது கோபம் வருவது இயற்கை. அந்த கோபத்துக்கான வடிகாலாக பதிவு எழுதுவதைத் தேர்ந்தெடுத்தவர்கள்தான் பெரும்பாலான பதிவர்கள். மற்றபடி பிரித்துக் காட்டுவதற்கான தேவை இல்லை. ஆனால் என்னைப்போய் இப்படி ஒரு வம்புக்கு இழுத்தாரே, எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது.//
கவனித்தீர்களா சுபா அண்ணா?
பொதுவாக அனைவருமே இந்தப் பதிலைத் தான், அல்லது இதை ஒட்டி பதிலைத் தான் சொன்னார்கள்...
இது தான் பதிவர்களின் மனநிலை....
உண்மையான மனநிலை....
// கனககோபி said...
கவனித்தீர்களா சுபா அண்ணா?
பொதுவாக அனைவருமே இந்தப் பதிலைத் தான், அல்லது இதை ஒட்டி பதிலைத் தான் சொன்னார்கள்...
இது தான் பதிவர்களின் மனநிலை....
உண்மையான மனநிலை..//
உண்மைதான் கோபி
நீண்ட நாட்களின் பின்னர் சரக்கடிக்கவைத்துவிட்டீர்கள்.
என்னையும் பலர் சமூக அக்கறை பற்றிக் கேட்டுள்ளார்கள். பாலவாசகனை நான் வழிமொழிகின்றேன். குட்டிச் சுவர்களில் இருந்த நாள் முதல் இன்று இணைய அரட்டை வரை பலதும் பத்தும் கதைத்தாலும் ஏதாவது ஒரு சமூக அக்கறைக் கருத்து வந்தே தீரும்.
எனக்கும் சில நாட்கள் சிலரின் ஸ்பாம் வந்தது மட்டுறுத்தல் இருப்பதால் அவற்றை வெளியிடுவதில்லை.
இந்த அகராதியை ஏற்கனவே ட்விட்டரில் எம்முடன் பகிர்ந்துகொண்டிர்கள் என நினைக்கின்றேன். நல்லதொரு அகராதி.
ஈரம் நல்ல படம் ஆனால் ஆவிக்குப் பதில் ஒருவர் கொலை செய்வதாக காட்டியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.
பேராண்மையில் சாதிவெறிக் காட்சிகளை வசனத்துடன் விட்டிருந்தால் அந்த மலைவாழ் மக்களை எப்படி அடக்குகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கலாம் ஆனால் அவற்றைச் சென்சார் செய்து தேவையற்ற காட்சிகளை விட்டுவிட்டார்கள்.
// வந்தியத்தேவன் said...
நீண்ட நாட்களின் பின்னர் சரக்கடிக்கவைத்துவிட்டீர்கள்.
என்னையும் பலர் சமூக அக்கறை பற்றிக் கேட்டுள்ளார்கள். பாலவாசகனை நான் வழிமொழிகின்றேன். குட்டிச் சுவர்களில் இருந்த நாள் முதல் இன்று இணைய அரட்டை வரை பலதும் பத்தும் கதைத்தாலும் ஏதாவது ஒரு சமூக அக்கறைக் கருத்து வந்தே தீரும்.//
உண்மைதான்
//எனக்கும் சில நாட்கள் சிலரின் ஸ்பாம் வந்தது மட்டுறுத்தல் இருப்பதால் அவற்றை வெளியிடுவதில்லை.//
உங்களுக்குமா?
//இந்த அகராதியை ஏற்கனவே ட்விட்டரில் எம்முடன் பகிர்ந்துகொண்டிர்கள் என நினைக்கின்றேன். நல்லதொரு அகராதி.//
ஆமாம், அதேதான்
//ஈரம் நல்ல படம் ஆனால் ஆவிக்குப் பதில் ஒருவர் கொலை செய்வதாக காட்டியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.//
ம்..
//பேராண்மையில் சாதிவெறிக் காட்சிகளை வசனத்துடன் விட்டிருந்தால் அந்த மலைவாழ் மக்களை எப்படி அடக்குகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கலாம் ஆனால் அவற்றைச் சென்சார் செய்து தேவையற்ற காட்சிகளை விட்டுவிட்டார்கள்.
//
அதேதான்.
Post a Comment