இணைய உலகில் இன்று பரபரப்பைக் கிளப்பியிருக்கும் விடயம் கூகுல் வேவ். கூகுல் மட்டுப்படுத்தப்பட்டோருக்கே இதனைப் பாவிக்க அனுமதி அளித்துள்ளமை இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இன்று டிவிட்டரில் அதிகமாக டிவிட்டப்படும் முதல் பத்து வார்த்தைகளுக்குள் கூகுல் வேவும் ஒன்று. அந்தளவுக்கு அமைந்துள்ளது இதன் எதிர்பார்ப்புகள்.
கூகுல் தான் தெரிவுசெய்த பாவனையாளர்களுக்கே அழைப்புக்களை அனுப்பியுள்ளதுடன் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களால் அழைக்கப்படும் நபர்களும் கூகுலின் மேற்பார்வையின் கீழே அழைப்புகளைப் பெறுகின்றனர். இதனால் அனுப்பப்படும் அழைப்புகள் உடனடியாகப் போய்ச் சேர்வதும் கிடையாது. அவை கிடைக்காமல் விடுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனக்கு அண்மையிலேயே ஆதிரை அண்ணாவால் அழைப்பு அனுப்பப்பட்டு கூகுல் வேவ் கணக்கு கிடைத்தது. ஆனால் அழைப்பு அனுப்பி ஐந்து நாட்களின் பின்னரே அது கிடைத்தது.
கூகுல் வேவின் தற்போதய பாவனையாளர்கள் பலர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். கூகுலின் user friendly தன்மை இதிலும் இருந்தாலும் இது புதிதாக இருப்பதால் பலர் சரிவர இதனை விளங்கிக்கொள்ளவில்லை என இதுபற்றி கூகுல் குறிப்பிட்டுள்ளது.
இதில் தொடங்கப்படும் ஒவ்வொரு உரையாடங்களையும் ஒவ்வொரு அலை எனக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு அலைக்கும் தேவையான நண்பர்களை இணைத்துத்தொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கும். இவற்றை சீர்திருத்தலாம். குறிப்பிட்ட செய்திகளுக்கு மட்டும் பதிலளிக்கலாம். மேலும் இவை அனைத்தும் Real time இல் தெரிவதால் அந்த அலையில் இணைந்திருப்போர் நீங்கள் செய்பவற்றை உடனுக்குடன் காணவும் முடியும். மேலும் மேலே படத்தில் இருக்கின்ற கட்டங்களை எமக்கு ஏற்றாற்போல் மாற்ற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
தற்போது பாவனையில் இருக்கும் கூகுல் வேவ் ஆனது ஒரு Preview version ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் ஒவ்வொன்றும் Under construction என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிமேல்தான் இதன் Beta version வரவிருக்கிறது.
இவ்வாறு கூகிலால் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படும் கூகுல் வேவ் எதிர்காலத் தொடர்பாடலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?, மின்னஞ்சல் கலாச்சாரத்தை உடைக்குமா?, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
30 comments:
இப்போது உள்ள நிலையில் இது தனி நபருக்கு ஏற்றதாக இல்லை.. நிறுவங்களில் குழு செயல்பாடுகளுக்குத் தான் பயனாக இருக்கும். இதில் ஏராளமான bot சேர்த்துக் கொண்டு கொஞ்சம் பொழுது போக்கலாம். இனி வரும் காலத்தில் என்ன இருக்கும் என தெரியவில்லை.
ஆதிரையால் எனக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு நானும் எப்படி அலையடிப்பது என தெரியாமலிருக்கிறேன்.
முன்பெல்லாம் MSN & Yahoo வில் இருந்த சாட் பாக்ஸ் போல ஒரு தோற்றம் அளிக்கின்றது - படத்தை பார்த்தால்
இன்னும் பாவிக்கவில்லை ...
புதுசு புதுசா பண்றாங்கப்பா ......
ஓ.... வேவ் ஆ?
நானும் ஒருத்தன் இருக்கிறனப்பா....
நிறையப் பேருக்கு என்ர மின்னஞ்சல் முகவரி தெரியும்...
அழைப்பு அனுப்புங்கப்பா...
(அழைப்பு அனுப்பிற்று இருக்கிறம் மாதிரி காலை வாரினா பதிவு போட வேண்டி வரும். ;) )
புதுசு, புதுசா வருது புதுசு, புதுசா சொல்றிங்க எனக்கு ஒண்ணுமே புரியல்ல... (லொள்ளு)
//கனககோபி said...
ஓ.... வேவ் ஆ?
நானும் ஒருத்தன் இருக்கிறனப்பா....
நிறையப் பேருக்கு என்ர மின்னஞ்சல் முகவரி தெரியும்...
அழைப்பு அனுப்புங்கப்பா...
(அழைப்பு அனுப்பிற்று இருக்கிறம் மாதிரி காலை வாரினா பதிவு போட வேண்டி வரும். ;) )//
என்ன கோபி தாத்தா இப்படி எல்லாம் பயப்படவைக்கிரிங்க... மூத்தவங்களுக்கு ஒன்னும் பண்ணமாட்டோம் என்ற நம்பிக்கைதானே.
புதுசு புதுசா ஏதோ பண்ணுறாங்க
நாங்க மட்டும் .....
யாராவது ஒரு நல்ல உள்ளம் எனக்கும் ஒரு "கூகுல் வேவ்" அழைப்பை அனுப்புங்கோ... :))))
மின்னஞ்சல் முகவரி :- veenthan@gmail.com
கூகுல் வேவ் பற்றிய விளக்கத்திற்கு இங்கு செல்லவும்...
http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ
// சந்ரு said...
//கனககோபி said...
ஓ.... வேவ் ஆ?
நானும் ஒருத்தன் இருக்கிறனப்பா....
நிறையப் பேருக்கு என்ர மின்னஞ்சல் முகவரி தெரியும்...
அழைப்பு அனுப்புங்கப்பா...
(அழைப்பு அனுப்பிற்று இருக்கிறம் மாதிரி காலை வாரினா பதிவு போட வேண்டி வரும். ;) )//
என்ன கோபி தாத்தா இப்படி எல்லாம் பயப்படவைக்கிரிங்க... மூத்தவங்களுக்கு ஒன்னும் பண்ணமாட்டோம் என்ற நம்பிக்கைதானே //
சந்ருவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடப்படுகிறது...
நாளை Blue cross இலிருந்து உங்களைத் தேடி ஆட்கள் வருவார்கள் பாருங்கள்....
//கனககோபி said...
சந்ருவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடப்படுகிறது...
நாளை Blue cross இலிருந்து உங்களைத் தேடி ஆட்கள் வருவார்கள் பாருங்கள்....//
கனக கோபி என்னை கடுமையாக மிரட்டி வருகின்றார் எனக்கு ஏதாவது பிரச்சனை ஏட்பட்டால் அவர் பொறுப்பல்ல...
அத்தோடு இது தொடர்பாக அனானியிடம் முறையிடவும் இருக்கின்றேன்.
// SanjaiGandhi™ said...
இப்போது உள்ள நிலையில் இது தனி நபருக்கு ஏற்றதாக இல்லை.. நிறுவங்களில் குழு செயல்பாடுகளுக்குத் தான் பயனாக இருக்கும். இதில் ஏராளமான bot சேர்த்துக் கொண்டு கொஞ்சம் பொழுது போக்கலாம். இனி வரும் காலத்தில் என்ன இருக்கும் என தெரியவில்லை.//
எனக்குக் கொஞ்சம் நண்பர்கள் சேர்ந்துவிட்டதால் பொழுதுபோகிறது. பாதுகாப்பான கும்மிக்கு ஏற்ற இடம்.
// யோ வாய்ஸ் (யோகா) said...
ஆதிரையால் எனக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு நானும் எப்படி அலையடிப்பது என தெரியாமலிருக்கிறேன்.//
என்னோடு அலையடிக்கலாம். இணைந்துவிட்டீர்கள்தானே?
// நட்புடன் ஜமால் said...
முன்பெல்லாம் MSN & Yahoo வில் இருந்த சாட் பாக்ஸ் போல ஒரு தோற்றம் அளிக்கின்றது - படத்தை பார்த்தால்
இன்னும் பாவிக்கவில்லை .//
ஏறத்தாள அதே மாதிரித்தான். உங்களை எனது Contacts இல் பார்த்த ஞாபகம். பயன்படுத்தத் தொடங்கலாமே?
// Balavasakan said...
புதுசு புதுசா பண்றாங்கப்பா ....//
ஆமாப்பா..
// கனககோபி said...
ஓ.... வேவ் ஆ?
நானும் ஒருத்தன் இருக்கிறனப்பா....
நிறையப் பேருக்கு என்ர மின்னஞ்சல் முகவரி தெரியும்...
அழைப்பு அனுப்புங்கப்பா...
(அழைப்பு அனுப்பிற்று இருக்கிறம் மாதிரி காலை வாரினா பதிவு போட வேண்டி வரும். ;) )//
இதைப்பார்த்தே யாரும் அழைப்பு அனுப்பமாட்டார்கள்.
// சந்ரு said...
புதுசு, புதுசா வருது புதுசு, புதுசா சொல்றிங்க எனக்கு ஒண்ணுமே புரியல்ல... (லொள்ளு)//
இப்பெல்லாம் ரொம்பவே லொள்ளு பண்ணுறீங்க?
// தியாவின் பேனா said...
புதுசு புதுசா ஏதோ பண்ணுறாங்க
நாங்க மட்டும் ....//
நீங்களுப் பண்ணலாம். இலகுதான்.
// வேந்தன் said...
யாராவது ஒரு நல்ல உள்ளம் எனக்கும் ஒரு "கூகுல் வேவ்" அழைப்பை அனுப்புங்கோ... :))))
மின்னஞ்சல் முகவரி :- veenthan@gmail.com
கூகுல் வேவ் பற்றிய விளக்கத்திற்கு இங்கு செல்லவும்...
http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ//
என்னிடம் இல்லை நண்பா. யாராவது அனுப்புவார்கள். லிங்கிற்கு நன்றி.
எனக்கு அலையடிக்க சரியான பஞ்சியாக இருக்கின்றது சில நாட்களில் பழகிவிடும் என நினைக்கின்றேன்
// வந்தியத்தேவன் said...
எனக்கு அலையடிக்க சரியான பஞ்சியாக இருக்கின்றது சில நாட்களில் பழகிவிடும் என நினைக்கின்றேன்//
அடித்துப்பாருங்கள், பழகிவிடும்.
இதுக்கும் ஒருக்க போய்ப் பாருங்கோ http://googlewaveapps.info/
@ ஆண்டவர்
நன்றி
வேவ்வுக்கு (wave) அடுத்து டைடா (tide) ?
// கலையரசன் said...
வேவ்வுக்கு (wave) அடுத்து டைடா (tide) ?//
சுனாமியாக்கூட இருக்கலாம். அவ்வவ்
முடிஞ்சா எனக்கும் ஒரு இன்விடேசன் அனுப்புங்க அண்ணா.........
என் மின்னஞ்சல்: supathamizhiniyan@gmail.com
@ சுப.தமிழினியன்
மன்னிக்கவும், என்னிடம் இல்லை நண்பரே
// சந்ரு said...
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் வந்து தொடருங்கள்.
http://shanthru.blogspot.com/2009/11/blog-post_09.html#//
நன்றி, தொடர்கிறேன்.
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
எனக்கும் ஒரு இன்விடேசன் அனுப்புங்க அண்ணா.........
Post a Comment