Friday, October 9, 2009

சரக்கு வித் சைடிஸ்நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி சிகப்பு விளக்கு ஏரியா வேலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட, அவர் கூறியதாகக் கூறி விபச்சாரத்தில் ஈடுபடும் ஏனய நடிகைகளின் பெயர்களை மஞ்சள் பத்திரிகை தினமலர் (அப்படித்தான் சொல்றாங்களே – பார்க்க படம்) வெளியிட, இதைக்கண்டித்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்களை பச்சை பச்சையாகத் திட்ட, அதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் நடிகர்களுக்கெதிராக கறுப்புக்கொடி பிடிக்க என்று நடக்கின்ற கலர்புல்லான கலாட்டாக்களிலேயே இந்தவார பொழுது போய்விடும் போல இருக்கிறது. 


******************************


இலங்கை வலைப்பதிவர்களுக்கு இது பொற்காலம். இலங்கையிலிருந்து வெளியாகும் இரு வார இதழ் ‘இருக்கிறம்’ ஏற்கனவே இலங்கைப் பதிவர்களின் படைப்புக்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரல் பத்திரிகை பிரதி ஞாயிறு யாழ்தேவி திரட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்களையும், நட்சத்திரப் பதிவரின் சிறந்த படைப்பு ஒன்றை அவரது புகைப்படத்துடனும் வெளியிடவுள்ளது. நான் யாழ்தேவியில் ஏற்கனவே நட்சத்திரமாகி விட்டதால் – சொக்கா எனக்கில்லை… எனக்கில்லை…


******************************


இன்று கம்பஸ்சில் எனக்கு இருந்த விரிவுரை இரத்துச் செய்யப் பட்டதால் நிம்மதியாக வீட்டிலே இருந்து இரண்டு பதிவாவது இட்டுவிடலாம் என நினைத்துக் காலையில் எழுந்தால் வீட்டில் கரண்டும் இல்லை, தண்ணீரும் இல்லை. இலங்கையில் Total Power Failure என்று வந்திருந்த SMS தகவல் சொல்லியது. மின்சாரம் வரும்வரை தண்ணீரும் இல்லை. வளர்ச்சியடைந்த நாடுகளில்  Total Power Failure இற்கான சாத்தியக்கூறுகள் பதினைந்து வருடங்களிற்கு ஒருமுறை கூட இல்லையாம். நாமெல்லாம் எந்த மூலைக்கு?


******************************


Social network தளங்களில் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்களாம். எனக்குத்தெரிந்த ஆண் நண்பர்கள் சிலர் பெண்கள் பெயரில்தான் அவ்வாறான தளங்களில் இயங்குகிறார்கள். அவர்களது சில நடவடிக்கைகளுக்கு பெண்ணின் பெயரில் இருப்பது சௌகரியமாக இருக்கிறது போலத் தெரிகிறது. இப்படி இருந்தால் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் என்னசெய்யும்?
******************************
18 comments:

Sinthu on October 9, 2009 at 7:28 PM said...

கடைசியாகப் போட்டுள்ள படத்துக்கு விளக்கம் தராமல் போயிட்டீங்களே....?

Subankan on October 9, 2009 at 10:02 PM said...

@ சிந்து

இன்னும் கொஞ்ச நாளில அந்தப்படத்துக்கு எல்லோருமே விளக்கம் தருவாங்க. பார்ங்களேன்!

வந்தியத்தேவன் on October 9, 2009 at 10:41 PM said...

சரக்கு நல்லாத்தான் இருக்கு. சும்மாவே முதல் ரவுண்டே புவனேஸ்வரி என்றால் ஏறத்தான் செய்யும். கடைசி ரவுண்ட் அம்மணியின் பெயர் என்ன? எங்கடை ஏரியாவில் இரவு தான் க்ரண்ட் போனது பகல் முழுக்க இருந்தது.

Subankan on October 9, 2009 at 10:53 PM said...

@ வந்தியத்தேவன்

அவங்கதான் வேட்டைக்காரி - அனுஸ்ஸ்ஸ்கா.

வந்தியத்தேவன் on October 9, 2009 at 10:59 PM said...

ஓ அருந்ததீதீதீதீதீ யா இப்படி அழகாக இருக்கின்றாரே.

Subankan on October 9, 2009 at 11:05 PM said...

@ வந்தியத்தேவன்

அது ஒண்டுமில்லை, படத்தோட ஆங்கிள் அப்பிடி.

Anonymous said...

athukku vizhzkkzm verai kudukkanuma?

ஆதிரை on October 9, 2009 at 11:44 PM said...

//அது ஒண்டுமில்லை, படத்தோட ஆங்கிள் அப்பிடி.

பார்த்தீங்களா.... எப்படியோ வந்தியரை அங்கிள் என்று சொல்லாமல் சொல்லுறீங்கள்

வந்தியத்தேவன் on October 9, 2009 at 11:55 PM said...

//Subankan on October 9, 2009 11:05 PM said...

அது ஒண்டுமில்லை, படத்தோட ஆங்கிள் அப்பிடி.//

ஆங்கிள் மட்டுமில்லை, அனுஷ்காவும் இன்னும் தமிழ்சினிமா ரசிகர்களிடம் எடுபடவில்லை. வேட்டைகாரன் வந்தால் இடம் கிடைக்கும் இல்லையா எனத் தெரியும்.

//ஆதிரை on October 9, 2009 11:44 PM said...

பார்த்தீங்களா.... எப்படியோ வந்தியரை அங்கிள் என்று சொல்லாமல் சொல்லுறீங்கள்//

ஆதிரை ஐயா சுபாங்கன் சொல்வது ஆங்கிள் அங்கிள் இல்லை. இதுக்குத்தான் மைய்மலுக்கை வெளியே போகவேண்டாம் என்பது.

கலையரசன் on October 10, 2009 at 11:55 AM said...

அனுஷ்கா படமா இது? டிரஸ் எல்லாம் போட்டியிருக்காங்க?

Subankan on October 10, 2009 at 12:27 PM said...

@ ஆதிரை

அதெல்லாம் சொல்லாமல் சொல்லுற விசயமா?

Subankan on October 10, 2009 at 12:30 PM said...

@ வந்தியத்தேவன்

கூகிலாண்டவரிட்ட கேட்டுப்பாருங்க. வேட்டைக்காரனுக்குப்பிறகு உங்க ஜொள்ளு லிஸ்டில இன்னும் ஒண்டு சேரும்.

//ஆதிரை ஐயா சுபாங்கன் சொல்வது ஆங்கிள் அங்கிள் இல்லை. இதுக்குத்தான் மைய்மலுக்கை வெளியே போகவேண்டாம் என்பது.
//

சரி விடுங்க. ஏதாவது பூனை பிடிக்கிற வேலை இருந்திருக்கும்.

Subankan on October 10, 2009 at 12:33 PM said...

@ கலையரசன்

எல்லாம் கூகிலாண்டவரோட கிருபைதான்.

Subankan on October 10, 2009 at 12:35 PM said...

//Anonymous said...
athukku vizhzkkzm verai kudukkanuma?//

சரி, விடுப்பா. ஏதோ தெரியாம கேட்டுட்டாங்க.

யோ வாய்ஸ் (யோகா) on October 12, 2009 at 10:01 AM said...

//நான் யாழ்தேவியில் ஏற்கனவே நட்சத்திரமாகி விட்டதால் – சொக்கா எனக்கில்லை… எனக்கில்லை…//

சேம் பிளட்

கனககோபி on October 15, 2009 at 3:49 PM said...

//நான் யாழ்தேவியில் ஏற்கனவே நட்சத்திரமாகி விட்டதால் – சொக்கா எனக்கில்லை… எனக்கில்லை… //

அட நீங்களாவது பரவாயில்ல...
இந்த விஷயம் நடக்கிறதுக்கு முதல் கிழமை தான் நான் நட்சத்திரம்...
நான் பாவம்...

ம்...
அந்த முதல் பந்தியில் நிறங்களை தடித்த எழுத்தில் போட்டது அழகாக இருந்தது,

அது சரி... நீங்களும் பதிவுக்கு கடைசில ஒரு 'படம்' போடுற வந்தியண்ணான்ட முறையை பிடிச்சிற்றீங்களா?

Subankan on October 15, 2009 at 3:54 PM said...

@ கனககோபி

நன்றி

//அது சரி... நீங்களும் பதிவுக்கு கடைசில ஒரு 'படம்' போடுற வந்தியண்ணான்ட முறையை பிடிச்சிற்றீங்களா?
//

ம், அவங்கதான் என்னோட குரு

Subankan on October 15, 2009 at 3:55 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)

உங்களுக்குமா?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy