Saturday, October 17, 2009

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை.





நண்பன் ஒருவனை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த்தாலும், அவனும் நானும் சேர்ந்து தியேட்டருக்குப் போக எடுத்த முயற்சிகள் முன்பு பலமுறை தோற்றதாலும் இன்று எப்படியாவது அவனுடன் ஆதவன் பார்ப்பது என முடிவானது. தியேட்டருக்கு போன பிறகுதான் அது எப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவு என்பது உறைத்தது. போலீஸ் வந்து தடியடி தடாத்துமளவுக்கு அங்கே நிலமை இருந்தது. ஒருவழியாக மூன்றரை மணிநேர காத்திருப்புக்குப் பிறகு தியேட்டருக்குள் நுளைய முடிந்தது. இலங்கையில் இவ்வளவு ரசிகர்கள் சூர்யாவுக்கு இருப்பது எனக்கு இப்போதுதான் தெரியும்.


காத்திருந்ததற்கு குறைவைக்கவில்லை படத்தின் முதல்பாதி. விறுவிறு ஆரம்பமும், கூடவே சேர்ந்துகொண்ட வடிவேலுவின் நகைச்சுவையும் இடைவேளைவரை தொடர்ந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு வடிவேலுவின் நகைச்சுவை ரசிக்கக்கூடியதாக இருந்தது. கந்தசாமியில் டிக்கி ஆட்டியதுபோல எங்களை நெளியவைக்கவில்லை. பல ஒற்றை வசனங்களே இன்னும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றது. Hats off வடிவேலு.


சரோஜாதேவி, இன்றய நவநாகரிகப் பாட்டி, ஓ சாரி அம்மம்மாக்களின் (படத்தைப் பாருங்க, புரியும்) பிரதிபலிப்பு. அவருக்காகப் பாடல் காட்சி வேறு. கலக்கல். அதிலும் பாடலில் அவரது காட்சிகளை கறுப்பு – வெள்ளையில் காட்டியது அழகு.


வில்லன் ராகுல் தேவ் அசத்தல். ஆனால் அவரை ஒரு டாக்டராகத்தான் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. டாக்டர்களுக்கான ஒரு வரையறை மனதில் பதிந்துவிட்டது காரணமாக இருக்கலாம். பெரிய குழுவுக்கே தலைவனான அவர் ஆள் வைத்துக் கொலை செய்வதற்குச் சொல்லும் காரணமும் ப்ச். அவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது காட்சிகளில் லாஜிக் ஓட்டைகள் நிறைய. சரிசெய்திருக்கலாம்.


நயன்தாரா. இவரது அறிமுகக் காட்சியில் மாத்திரமே விசில். அதன்பிறகு இவரை யாரும் கணக்கிலேயே எடுக்கவில்லை. சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.




சூர்யா, நடிப்பில் அதே வேகம். நடனக் காட்சிகளுக்கு கைதட்டல் வாங்குகிறார். ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியெடுக்கிறார். ஆனால் இவரது பத்து வயதுக் கதாபாத்திரத்தோடுதான் மனம் ஒட்ட மறுக்கிறது. அதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். கடைசி வாரணம் ஆயிரத்தில் வந்த வயதிலாவது நடித்திருக்கலாம். முடியல.


இடைவேளை வரை கலகல + விறுவிறுவாகப் போய்க்கொண்டிருந்த திரைப்படம் இடைவேளைக்குப்பிறகு கறுமம் பிடித்த காதல் ஆரம்பித்ததாலோ என்னவோ கொஞ்சம் தொய்யத் தொடங்கிவிடுகிறது. இத்தனைக்கும் படத்தில் நேரடிக் காதல் காட்சிகள் இல்லை. லாஜிக் மீறல்கள் தாராளமாக தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி, ஐயோ அம்மா, முடியலடா சாமி.


ரெட் ஜெயன்ட் மூவீசின் குருவியில் விமானம். இதில் ஹெலிகொப்டர். அடுத்த படத்தில் ராக்கெட், ஏவுகணை என்று ஏதாவது முயற்சிசெய்வார்கள் போல. வில்லன் உடனடியாக வெடிக்கும் ராக்கெட் லாஞ்சரை அடிக்காமல் டைம் செட் செய்து வெடிப்பதை அடித்துவிட்டு, அது வெடிக்கும்வரை காத்திருக்காமல் பறந்துவிடுவாராம். அதை சூர்யா பிடுங்கி ஹெலிகொப்டரில் பாய்ந்து குத்துவாராம். ஐயோ, தமிழ் ரசிகர்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியான அபத்தங்களை தாங்குவதோ தெரியவில்லை. ஏதாவது புதுசா யோசீங்கப்பா.


மொத்தத்தில் ஆதவன் – அரை அறுவை. முதல் பாதி மட்டும் மூன்றுமுறை பார்க்கக்கூடிய படம்.


இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?


31 comments:

Anonymous said...

சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.//

அப்ப கழுத்துக்குக் கீழ ஓகேவா? நல்லாக் கவனிக்கிற நீயி.

ISR Selvakumar on October 18, 2009 at 12:05 AM said...

ஏமாற்றமளித்த படம்

வந்தியத்தேவன் on October 18, 2009 at 12:24 AM said...

நல்ல விமர்சனம் சூர்யாவும் ஹீரோயிசம் வலையில் விழுந்து ஏமாத்திவிட்டார்.

SUREஷ்(பழனியிலிருந்து) on October 18, 2009 at 7:26 AM said...

//சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம்//

சில பதிவர்களும் அப்பாடா தப்பித்தோம் என்று சொல்லிக் கொள்ளலாமோ?

நாடோடி இலக்கியன் on October 18, 2009 at 9:42 AM said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா.

Subankan on October 18, 2009 at 5:21 PM said...

//Anonymous said...
சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.//

அப்ப கழுத்துக்குக் கீழ ஓகேவா? நல்லாக் கவனிக்கிற நீயி//

ஹீ ஹீ ஹீ

Subankan on October 18, 2009 at 5:22 PM said...

@ r.selvakkumar

ஆமாம். எதிர்பார்ப்புக்கள் அதிகமானதும் ஒரு காரணம்.

Subankan on October 18, 2009 at 5:22 PM said...

@ வந்தியத்தேவன்

நன்றி

Subankan on October 18, 2009 at 5:23 PM said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

யாரந்த சிலர்?

Subankan on October 18, 2009 at 5:24 PM said...

@ நாடோடி இலக்கியன்

நன்றி நண்பா

வழிப்போக்கன் on October 18, 2009 at 7:44 PM said...

super comments....
want 2 watch...

வழிப்போக்கன் on October 18, 2009 at 7:48 PM said...

super comment...
want 2 watch...

Unknown on October 19, 2009 at 2:30 AM said...

///இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?///

ஆனாலும் உமக்குக் குசும்பு கொஞ்சம் கூட ஓய்...

இந்த விமர்சனம் எல்லாம் படித்துப் படித்து தியேட்டர் செலவை சேமிக்கிறேன். ஓடி ஓடி விமர்சனம் செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க

ARV Loshan on October 19, 2009 at 10:52 AM said...

பரவாயில்லையே.. ஒத்த அலைவரிசைகள் பல இடங்களில் ஓடுதே.. ;)

ஆனால் இதுக்காக அவ்வளவு நேரம் கியூவில் நின்றதெல்லாம் கொடுமை.. முதல் பாதிக்காக தேற்றிக் கொள்ளலாம்..

//இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?//
hahaha

Subankan on October 19, 2009 at 4:20 PM said...

@ வழிப்போக்கன்

thanks

Subankan on October 19, 2009 at 4:21 PM said...

@ Kiruthikan Kumarasamy

இப்படியே போனா தயாரிப்பாளர் சங்கம் இதுக்கும் தடை விதிச்சுடுவாங்களோ?

Subankan on October 19, 2009 at 4:23 PM said...

// LOSHAN said...
பரவாயில்லையே.. ஒத்த அலைவரிசைகள் பல இடங்களில் ஓடுதே.. ;)
//

Same blood ;)

//
ஆனால் இதுக்காக அவ்வளவு நேரம் கியூவில் நின்றதெல்லாம் கொடுமை.. முதல் பாதிக்காக தேற்றிக் கொள்ளலாம்..
//

சொந்த செலவில் சூனியம் வைக்கிறது எண்டால் அது இதுதான்.

Anonymous said...

@ Subankan said...
// LOSHAN said...
பரவாயில்லையே.. ஒத்த அலைவரிசைகள் பல இடங்களில் ஓடுதே.. ;)
//

Same blood ;)
@

அடங்குடா

Subankan on October 19, 2009 at 5:20 PM said...

//Anonymous said...
@ Subankan said...
// LOSHAN said...
பரவாயில்லையே.. ஒத்த அலைவரிசைகள் பல இடங்களில் ஓடுதே.. ;)
//

Same blood ;)
@

அடங்குடா//

எதுக்கு இந்தக் காண்டு?

Beski on October 19, 2009 at 5:30 PM said...

//கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.//

:))))))

Subankan on October 19, 2009 at 9:13 PM said...

@ எவனோ ஒருவன்

:))

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்குபா..... சூர்யாவும் இப்போ பறக்க ஆரம்பிச்சிட்டாரா.... பரவாயில்ல தமிழ் சினிமா விளங்கிரும்..... கழுத்துக்கு கீழ மேல லாம் ரொம்ப டீடெய்லா விமர்சிக்கிற! :)

வாழ்த்துக்கள்!

Unknown on October 20, 2009 at 10:09 AM said...

//இடைவேளைக்குப்பிறகு கறுமம் பிடித்த காதல் ஆரம்பித்ததாலோ என்னவோ கொஞ்சம் தொய்யத் தொடங்கிவிடுகிறது //
சீ.. சீ...
அந்தப்பழம் புளிக்கும்... அது தானே... ;)

நல்ல விமர்சனம்...

Subankan on October 20, 2009 at 2:48 PM said...

@ ஷீ-நிசி

நன்றி

Subankan on October 20, 2009 at 2:48 PM said...

@ கனககோபி

//சீ.. சீ...
அந்தப்பழம் புளிக்கும்... அது தானே... ;)//

எ(கி)ட்டாப் பழம் புளிக்கும்.

Badshah on October 20, 2009 at 7:53 PM said...

ரவிக்குமார் படம் இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சே போனது ஏன் தப்பு தான். அது சரி, தசாவதாரதிக்கு பிறகாவது மாறி இருப்பாருன்னு நினைத்தேன். உஹும்...
வடிவேல் ரெண்டு காட்சிகளில்.. Judga..நீ போடிரியா இல்ல நான் போடட்டுமா? கேப்பாரு ...அப்பவாவது ரவிக்குமார் சார் சுதரிசிருக்க கூடாதா.. படம் ரொம்ப இழுவையா போகுதுன்னு...Judge பகல் புறா வெளிய சுத்துராறு...ராத்திரி தன வீட்டுக்கு வாராரு..நம்ம சூரியா வீட்டுகுல்லவே இருந்துகிட்டு காப்பாதுராரம்... வெத்து வெட்டு வில்லன் ..ஹே நீ போடறியா இல்ல நான் போடட்டுமா? பேசிகிட்டே தான் இருக்கான்..
அதே விட காமெடி கிளைமாக்ஸ் தான்.. பாம் லான்ச் பண்ணி 3 நிமிடம் டைம் வேற குடுப்பாரம்...

Subankan on October 20, 2009 at 10:24 PM said...

@ Badshah

நன்றாகக் கவனித்திருக்கிறீர்கள். இப்படி ஓட்டைகளை எழுத்த் தொடங்கினால் எழுதிக்கொண்டே போகலாம்.

உண்மைத்தமிழன் on October 20, 2009 at 11:38 PM said...

///இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?///

தம்பீ சுபாங்கன்..

நான் இன்னமும் படத்தினைப் பார்க்கவில்லை.

இதற்காகவே பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..!

என்னைப் போன்ற அறியாத சிறுவர்களையும் ஞாபகம் வைத்திருப்பதற்கு எனது நன்றிகள்..!

Subankan on October 20, 2009 at 11:43 PM said...

@ உண்மைத் தமிழன்

ஆகா, பாத்துட்டீங்களா?

//இதற்காகவே பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..!//

ஏன் இந்த விபரீத முடிவு? படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

Bhuvanesh on October 22, 2009 at 9:28 AM said...

//கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.//

என்னது?? நயன் அவங்க கழுத்துக்கு மேல கவனிக்கறது இருக்கட்டும்.. நீங்க ஏன் அசிங்கமா அவங்க கழுத்துக்கு மேல எல்லாம் பாக்கறீங்க?? மில்டரி ஹோட்டல் போய் யாராவது தயிர் சாதம் கேப்பாங்களா??

Subankan on October 22, 2009 at 4:13 PM said...

@ Bhuvanesh

அதுக்காக? கலவை சரியாக இல்லாவிட்டாலும் கடுப்புத்தானே?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy