உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்று கூகுல் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வினாடிக்கும் புதிதாக ஒரு பிளாக் உருவாக்கப்படுகிறதாம் (இவற்றில் 90% ஆனவை ஒரு மாதத்திலேயே செயலிழந்து விடுவது வேறு கதை). இன்றய இணையத்தள நெரிசல்களுக்கு பிளாக்குகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
இன்றய இணையப் பாவனையாளர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் சொந்தமாக ஒரு பிளாக்காவது வைத்திருக்கின்றனர். இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.
பதிவுகள் பெரும்பாலும் இலகு மொழிநடையில் சொந்த அனுபவங்கள் சார்ந்தே எழுதப்படுவதால் இவற்றை விரும்பி வாசிப்போரும் அதிகம். நான்கூட பல்கலைக்கழக அசைன்மென்டுகள் தொடர்பான ஏதாவது தேடலில் இணையத்தளங்களை மட்டுமல்லாது, பதிவுகளிலும் ஒருமுறை தேடிக்கொள்வேன், காரணம் அவை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கும்.
பாவனையாளர்களின் இந்த பிளாக்குகளின் மீதான ஈர்ப்பு பல முன்னணி நிறுவனங்களையும் பிளாக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளது. அவை தமது தயாரிப்புக்கள் மற்றும் சலுகைகளை தமது இணையத்தளங்களிற்கு முன்னதாகவே பிளாக்குகளில் அறிவிக்கின்றன. அவற்றின் இணையத்தளங்களை விட பிளாக்குகளையே அதிகமானோர் பார்வையிடுவதுடன், இதனால் வருமானமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.
‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.
இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?
22 comments:
தெரியலப்பா....
//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //
:)
ஆஹா.... என்ன நடந்தது? Comment moderation enabled?
யாரோ ஆப்பு வைக்கிறாங்களா?
பதிவர்களுக்கு சுதந்திரம் இருப்பது உண்மை தான்...
ஆனால் நாங்களெல்லாம் அப்பாவிகளப்பா....
//‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.
இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?//
ஆம் மேற்சொன்னவர்களை பயமுறுத்துகிறார்கள்
இலங்கை வலைப்பதிவர்களுக்கு 100% சுதந்திரம் இருப்பதாகத் தெரியவில்லையே.
//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //
:))
பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.//
உண்மையே.
பதிவர்கள் பற்றி நீங்க எழுதியிருப்பது - சிந்திக்கப் பட வேண்டிய விடயம். பயப்படுபவர்களுக்கு - நான் சொல்வதெல்லாம் - மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? பதிவர்களின் நோக்கம் உயர்வானது - எந்த வகுப்பினரையோ / இனத்தவரையோ / மதத்தினரையோ / தனிநபரையோ - வசை பாடாத வரையிலும்.
//பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை.//
100% உண்மை.
என்னிடம் இணைய வாசிப்பு பழக்கம் அதிகரிதது நான் பதிவு எழுத வந்த பின்தான்.
பதிவர் பயமுறுத்துவதில்லை.. அவர்கள் தங்களது சொந்த கருத்துகளை வெளியிடுகிறார்கள், சில நிர்பந்தங்களுடன்.
முன்னேறிய நாடுகளில் இவ்வாறு பயமுறுத்தலாம். ஆசிய நாடுகளில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை
நல்ல பதிவு
////கனககோபி said..
பதிவர்களுக்கு சுதந்திரம் இருப்பது உண்மை தான்... ஆனால் நாங்களெல்லாம் அப்பாவிகளப்பா....////
நானும் தான்.
ஆமாம். . .
பயமுறுத்துகிறார்கள் . . .
தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கும் எல்லோரையும் கேள்வி கேட்டு பயமுறுத்துகிறார்கள் . . .
இந்த பயமுறுத்தல் தொடரும் . . . வளரும்.
//இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.//
இதென்னவோ நிஜம் தாங்க.. யாரைப் பார்த்தாலும் அப்டி தான் தோனுது.. :)
Subankan, you are writing great articles like this. Keep it up.
Even when you are student if you write so good, with more experience you will shine more.
நான் முதல் பதிவு எழுதும் போது பொழுதுபோக்கிற்காகவே எழுதினேன்.இப்போது சமூகப்பார்வையுடன் நோக்குகிறேன்.
//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //
சரியா சொன்னீங்க தல.....
பதிவுகள் தான் இன்றைய யுகத்தின் புதிய இலக்கிய வடிவம் என்கின்றேன் நான்!
இந்தப் பதிவின் பின்னூட்டங்களுக்கு மட்டும் தனித்தனியே பதிலிடும் எண்ணம் இல்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
தலைவா எங்களுக்கு இப்பதான் காய்ச்சல் பிடிச்சிருக்கு நம்ம கதையும் உங்கள மாதிரிதான் லோஷன் அண்ணா விடம் இருந்து தான் தொற்றியது ....
இது விடற மாதிரி தெரியல ....
@ Balavasakan
ஆகா, லோஷன் அண்ணாவைப்பார்த்துப் பதிவெழுத வந்த இன்னொருவரா? வாழ்த்துக்கள்!
பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்பது மகிழ்ச்சியானதுதான்.
ஆனால் பல விரைவிலேயே காணமல் போய்விடுகிறது என்கிறீர்களே.
Post a Comment