நண்பர் கனககோபி என்னிடம் இந்த தேவதையை அனுப்பியது அவருக்கே நினைவிருக்குமோ தெரியவில்லை. நேற்று ஒரு வழியாக தேவதையைத் தேடிப்பிடித்து நிலமையைப் புரியவைத்து வரங்களைக் கேட்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது.
நேரில் எந்தத் தேவதையையுமே பார்த்திராத எனக்கு (அட, நெசமாத்தாங்க) தேவதையைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வாயிலிருந்து வந்த வாட்டர் பா(F)லைக்கூடக் கவனிக்காமல் நின்றிருந்த என்னை கன்னத்தில் கிள்ளி (ஹையோ, ஹையோ) சுயநினைவுக்குக் கொண்டுவந்தது அந்தத் தேவதை. அசடு வழிந்த என்னைப்பார்த்து கேளப்பா உன் முதல் வரத்தை என்று செல்லக் குரலில் கூறியது.
தேவதையைப் பார்த்த கிறக்கத்திலிருந்து விடுபடாத நான் உன்னைப்போல் ஒரு தேவதை என் வாழ்க்கை முழுவதும் கூடவே வரவேண்டும் என்ற என் முதல் வரத்தைக் கூறிவிட்டேன். குறும்பு கொப்பளிக்க என்னைப் பார்த்த அது புன்னகைத்தவாறே சரி, இரண்டாவது என்றது.
காதலித்துக்கொண்டு எங்கள் கழுத்தறுக்கும் நண்பர்களுக்காக அவளை நான் கம்பஸ் காலத்திலிலேயே சந்திக்க வேண்டும் என்ற இரண்டாவது வரத்தைக் கேட்டேவிட்டேன். ஆகா, நீயும் பாதிக்கப்பட்டிருக்கிறாயா என்ற தேவதை, சரி பெற்றுக்கொள் என்றாள்.
எதையோ வென்றுவிட்ட உணர்வு போங்கியது. அடுத்த வரமாக என்னைப்போல் ஒரு அழகான (ஓகே, ஓகே) ஆண் குழந்தையும், அவளைப்போல் ஒரு அழகான தேவதையும் பிள்ளைகளாக பெறவேண்டும் என்றேன். பெண்குழந்தை ஓகே, பட் உன்னைப்போல்…. என்று இழுத்தவள், சரி பெற்றுக்கொள் என்றாள்.
ஆகா, தேவதை ஆங்கிலம் எல்லாம் பேசுதே என்று ஆச்சரியப்பட்ட நான், அடுத்த வரமாக அழகான குட்டி வீடும், அதில் நாலு காரும் கேட்டேன். ஒரு ப்ளானோடதாப்பா கிளம்பியிருக்க என்றவள், லைப்ல உருப்படற மாதிரியும் நாலு வரத்தைக் கேளேன் என்றாள்.
உச்சி மண்டையில் நங் என்று குட்டிய மாதிரி இருந்தது. சரி இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகல என்று நினைத்து, கம்பஸ்சில நாலு பேரிட்ட சொல்லறமாதிரி ஒரு ரிசல்ட் வரணும் என்றேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென சரி என்றவள், நெக்ஸ்ட் என்றாள்.
சீக்கிரமே நல்ல சம்பளத்தில ஒரு நல்ல வேலை கிடைக்கணும் என்றேன். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்றவள் ஏம்பா எல்லாத்தையும் சுயநலமாவே கேக்கிற என கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். ஆகா, சந்தோசத்தில ரோம்பவே ஓவராப் போயிட்டமோ என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
சரி, இலங்கை மக்கள் அனைவரும் சொந்த இடங்களில் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டும் என்றேன். புன்னகைத்தாள். உலகில் ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வே இருக்கக் கூடாது என்றேன். வெரி குட், உன்கிட்ட இருந்து இப்படித்தான் எதிர்பார்த்தேன் என்றாள்.
அவளது வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் உலகில் சாதி, மத, மொழிப் பிரச்சினைகளே இருக்கக் கூடாது என்றேன். அது என்ற அவள், அப்படியே என்னைக் கட்டிக்கொண்டாள் (வாய மூடுங்கப்பா, பல்லி உள்ள போயிடப் போவுது).
ஆகா, ஆகா என்று அப்படியே அந்தரத்தில் மிதந்த நான் பத்தாவது வரமாக இலங்கை முழுவதையும் கையில் அடையாள அட்டை இல்லாமல் சுற்றிவரவேண்டும் என்றேன். அவ்வளவுதான் அப்படியே என்னைத் தள்ளிவிட்டாள். என்ன நடக்கிறது என நான் சுதாகரித்துக்கொள்ளமுன்னமே தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.
ஏனோ தெரியவில்லை. இதனாலேயே அவளிடம் அடுத்து யாரிடம் செல்லவேண்டும் என்றே கூற முடியவில்லை.
6 comments:
////தேவதையைப் பார்த்த கிறக்கத்திலிருந்து விடுபடாத நான் உன்னைப்போல் ஒரு தேவதை என் வாழ்க்கை முழுவதும் கூடவே வரவேண்டும் என்ற என் முதல் வரத்தைக் கூறிவிட்டேன்////
முடியல.. உங்க எல்லா வரமும் ஒரு மார்க்கமா தான் இருக்கு.. ரூம் போட்டு யோசீப்பீங்களோ?
//இலங்கை முழுவதையும் கையில் அடையாள அட்டை இல்லாமல் சுற்றிவரவேண்டும்//
இந்த வரத்த எந்த தேவதைட்ட கேட்டலும் அந்த தேவதை ஓடித்தான் போகும்.....ஹா... ஹா...
ஆனா நீங்க கேட்ட ஒவ்வொரு வரமும் super.... :)
@ யோ வாய்ஸ் (யோகா)
ம், இருக்கலாம்
@ Bavan
நன்றி
எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க.. நல்ல காலம் உங்கள் தேவதை இல்லாததால், தப்பித்தீங்கள், உங்களுக்கும் ஆளிருந்தால் அவளுக்காக வரம் கேட்டிருப்பீங்க...
வரம் கேக்கிறதுக்கு தவித்திட்டு இருந்த சிலரைத் தவிக்கவிட்டிட்டது நியாயமா....? (இதை நான் சொல்லல்ல, சிலர் சொல்றாங்க..) - அது தான் உங்கள் கடைசி வரத்தால் எல்லாமே பாலாகிவிட்டதாக சொல்றாங்க..
@ Sinthu
//வரம் கேக்கிறதுக்கு தவித்திட்டு இருந்த சிலரைத் தவிக்கவிட்டிட்டது நியாயமா....? (இதை நான் சொல்லல்ல, சிலர் சொல்றாங்க..) - அது தான் உங்கள் கடைசி வரத்தால் எல்லாமே பாலாகிவிட்டதாக சொல்றாங்க..//
யாரந்த சிலர்?
Post a Comment