அண்மையில் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்தச் செய்தி. தவணைப் பரீட்சையில் புள்ளிகள் குறைவடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு மாணவர். இதே காரணத்துக்காக உயிரை விட்ட எனக்குத் தெரிந்த இரண்டாவது மாணவர் இவர். இறுதிப்பரீட்சைப் புள்ளிகள் குறைவடைந்தால் தற்கொலை செய்த நிலை இன்று தவணைப் பரீட்சைகளில் வந்து நிற்கின்றது.
நான் படித்த அதே பாடசாலையில், அதே வகுப்பறைகளில் படித்த ஒரு மாணவன். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு. வெறும் தவணைப் பரீட்சைப் புள்ளிக்காக தற்கொலை செய்து கொண்டது என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு? அதுவும் ஏனய தவணைகளில் சிறந்த புள்ளிகளையே பெற்றிருந்த இவர் கடந்த தவணையில் மட்டுமே குறைவாகப் பெற்றிருக்கிறார். ஒரு தவணையில் புள்ளிகள் குறைந்ததற்காக இப்படி ஒரு முடிவு தேவையா?
நான் கூட அதே பாடசாலையில், அதே க.பொ.த உயர்தரத்தில், இரசாயணவியல் பாடத்தில் 35இற்கும் குறைவான புள்ளிகளைக் கூடப் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று பல்கலைக்கழகத்தில்தான் இருக்கிறேன். தவணைப் பரீட்சை என்பது ஒரு பயிற்சி. அவ்வளவே. அதுவே இறுதி முடிவுகளைத் தீர்மானித்து விடுவது அல்ல.
மறுபக்கம் இந்த மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய காரணங்களையும் பார்க்கவேண்டும். மகனை எப்படியாவது மருத்துவனாக்கிப் பார்க்கவேண்டும் என்ற பெற்றோரின் கனவு. பல்கலைக்கழகம் இல்லாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறி என்ற மாயையை உடைய சமுதாயம். எல்லாவற்றையும் விட பலமான கல்விப் பாரம்பரியத்தை உடைய அவனது சுற்றாடல் என்பனவும் இன்னும் வெளியில் தெரியாத, சொல்ல முடியாத எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தவிர்த்து, மேற்படிப்புக்கான வசதிகள் இல்லை என்ற ஒரு காலம் போய், இன்று கொழும்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களின் படையெடுப்பினால் கொழும்பிலுள்ள பெரும்பாலான உயர்கல்வி வாய்ப்புக்களை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இன்று நிலவுகின்றது. இனியாவது இந்தப் பல்கலைக்கழக மாயையிலிருந்து விடுபடுவது அவசியம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானதே. அந்த மாணவனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
25 comments:
அடப் பாவமே.... இப்பத்தான் நீங்கள் சொன்ன மாதிரி ஏ.எல் சரியாச் செய்யாட்டாலும் பிழைக்க கன வழி இருக்கே... ஏன் இப்பிடி?
பரீட்சையில் குறைந்த மாக்ஸ் எடுப்ததால்; அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது போல் ஆண்டாண்டுகாலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.முந்தி ஏல் ஓல் சோதனை முடிந்தால் ஒரு பத்துப்பதினைந்து பொலிடோல் கேசாவது வரும் என்று நண்பர்கள் சொல்;லுவதுண்டு.உண்மையான கல்வி;க்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கூடப்புள்ளிகள் கிடைப்பதால் பெறும் ஸ்டேட்டசையே மாணவர்கள் விரும்புமாறு வளர்க்கப்படுகிறார்கள்.பத்தாம் ஆண்டுவரை உயர்கல்வி வேலைவாய்ப்பைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே.கிரி;க்கெட்டும் குளப்படியுமாகப்போகும் பருவம் அது.குறைந்த புள்ளிகள் எடுப்பதால் அது அவனைப்பாதிப்பதை விட அவனைச்சாரந்து நிற்கும் பெற்;றோர் சகோதரர்கள் ஆசிரியர்களின் உணர்வுவெளிப்பாடுகளுக்கு கொடுக்கும் அளவுகடந்த மரியாதையே இவ்வாறான நடத்தைகளுக்கு தூண்டுகிறது.அப்படி ஒரு மாணவன் தற்கொலைசெய்துகொள்வானாயின் அவன் தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பெடுக்கும் வகையில் வளர்க்கப்பட்டிருக்கவில்லை.இன்னும் தன்னுடைய பிள்ளைளைகளை அடுத்தவீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப்பேசும் பழக்கங்கள் இன்னும் இதற்குத் தூண்டுகோலாகும்.
மிகக் கவலையான விடயம்!
என்ன எழுதுவதென தெரியவில்லை!
மாணவர்கள் மத்தியில் வாழ்க்கையை எதிர் நீச்சல் போடும் திறமையை வளர்க்க ஏதேனும் செய்ய வேண்டும். அண்மையில் இந்தியாவிலும் 10 வயதுச் சிறுவன் தற்கொலை செய்த சம்பவமும் ஞாபகத்திற்கு வருகிறது!
கோழைகள் தான் தற்கொலை செய்வார்கள் வாழ்க்கையை எதிர்த்துப்போராடவேண்டும். எத்தனை வழிகள் வாழ்வதற்க்கு இருக்கின்றன. தற்கொலைதான் தீர்வு என்றால் நாம் ஒருவரும் வாழமுடியாது.
கொடுமை..
அன்புடன்,
அம்மு.
உண்மையாகவே ஓர் முட்டாள்தளமான முடிவு...
பரீட்சையில் புள்ளிகள் குறைந்தால் தற்கொலை செய்ய வேண்டும் என்றால் நான் ஒரு 50, 60 தடவைகள் செய்திருக்க வேண்டும்.
ஆனால் ஒருவிடயம் இருக்கிறது,
பெற்றோர்களும் ஓர் காரணம் என்கிறேன் நான்.
ஒருவனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது மட்டும் தான் வேலையென நினைத்து ஓர் மாணவனை நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
ஒரு மாணவன் நிச்சயமாக தன் எதிர்காலத்திற்காக தன்னால் இயன்றளவு படிப்பான்...
எங்கள் சமுதாய கட்டமைப்பு மாற்றப்பட்டு மாணவன் சுதந்திரமாக கற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
முட்டாள் தனமான முடிவு.. நானும் இப்படியான சிலரைப் பார்த்திருக்கிறேன்..
தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு மனஅழுத்தம் வர முக்கிய மூன்று காரணங்கள் என்ன என்னன்னு ஆராய்ச்சி செஞ்சதுல.. முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தற்கொலை என்றுமே தீர்வாகாதுன்னு இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது????
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும்!!
// Kiruthikan Kumarasamy said...
அடப் பாவமே.... இப்பத்தான் நீங்கள் சொன்ன மாதிரி ஏ.எல் சரியாச் செய்யாட்டாலும் பிழைக்க கன வழி இருக்கே... ஏன் இப்பிடி?//
போதிய ஆலோசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்
@ cherankrish
//தற்கொலைசெய்துகொள்வானாயின் அவன் தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பெடுக்கும் வகையில் வளர்க்கப்பட்டிருக்கவில்லை.இன்னும் தன்னுடைய பிள்ளைளைகளை அடுத்தவீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப்பேசும் பழக்கங்கள் இன்னும் இதற்குத் தூண்டுகோலாகும்//
ஆமோதிக்கிறேன்..
@ தங்க முகுந்தன்
அடிக்கடி இவை நடக்கின்றன. போதிய கவுன்சிலிங் தேவை.
@ வந்தியத்தேவன்
உண்மை. ஆனால் அவர்களுக்குப் புரிவதில்லையே
@ Ammu Madhu
ஆமாம்
//கனககோபி said...
உண்மையாகவே ஓர் முட்டாள்தளமான முடிவு...
பரீட்சையில் புள்ளிகள் குறைந்தால் தற்கொலை செய்ய வேண்டும் என்றால் நான் ஒரு 50, 60 தடவைகள் செய்திருக்க வேண்டும்.
//
நீங்க மட்டுமா? இங்க கம்பஸ்சில நாங்க கொட்டுற குப்பைகள் எங்களுக்குத்தான் தெரியும்.
//
ஆனால் ஒருவிடயம் இருக்கிறது,
பெற்றோர்களும் ஓர் காரணம் என்கிறேன் நான்.
ஒருவனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது மட்டும் தான் வேலையென நினைத்து ஓர் மாணவனை நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
ஒரு மாணவன் நிச்சயமாக தன் எதிர்காலத்திற்காக தன்னால் இயன்றளவு படிப்பான்...
எங்கள் சமுதாய கட்டமைப்பு மாற்றப்பட்டு மாணவன் சுதந்திரமாக கற்க அனுமதிக்கப்பட வேண்டும்//
அதே. பல்கலைக்கழகம் என்பதைத் தாண்டியும் எவ்வளவோ இருக்கின்றது.
@ Sinthu
உண்மைதான்.
// கலையரசன் said...
தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு மனஅழுத்தம் வர முக்கிய மூன்று காரணங்கள் என்ன என்னன்னு ஆராய்ச்சி செஞ்சதுல.. முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தற்கொலை என்றுமே தீர்வாகாதுன்னு இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது????
//
எனக்கும் தெரியவில்லை
//
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும்!//
தற்கொலை செய்யும்போது இருக்கும் வைராக்கியம் வாழ்க்கையில் இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாமே
@ ஆண்ட்ரு சுபாசு
படித்தேன்.
//தற்கொலை செய்யும்போது இருக்கும் வைராக்கியம் வாழ்க்கையில் இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாமே//
முதல், இரண்டாம் தவணைகளில் ஆசிரியர்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளாமல், இறுதி தவணை வகுப்பு ஏற்ற பரீட்சை என்பதால் அதை அவர்களும் சற்று கண்டிப்புடன் திருத்துவதும் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம்...
அதுவரை 90புள்ளி எடுத்தவன் திடீர் என்ன 40,50 புள்ளி எடுத்தால் மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க இயலாது....
ஆனால் தற்கொலை சுத்த பைத்தியகாரதனம்..........
@ Bavan
உங்கள் அனுபவத்தில் எழுதியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது. ஆனால் A/L இன் நிலமை அவ்வாறில்லையே.
வாழ்க்கை என்பதே அதுவும் எம் இனத்தைப் பொறுத்த மட்டில் சிக்கலானதே.அதற்குப் பயந்து இப்படியானால் கிட்டத்தட்ட எல்லோருமே தற்கொலதான் செய்யவேணும்.ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
//ஒரு தவணையில் புள்ளிகள் குறைந்ததற்காக இப்படி ஒரு முடிவு தேவையா?//
்ம்ம்ம்ம் நண்பருக்கு ஆழ்ந்த அஞ்சலி
@ ஹேமா
ம்.. அதேதான்.
@ ஆ.ஞானசேகரன்
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி
//நீங்க மட்டுமா? இங்க கம்பஸ்சில நாங்க கொட்டுற குப்பைகள் எங்களுக்குத்தான் தெரியும். //
அதுதான் நான் கம்பஸ்சுக்கு வர விரும்புறேல...
கொட்டுற குப்பைய றோட்டில அலஞ்சு கொட்டுவம் எண்டு முடிவெடுத்தாச்சு...
ஹி ஹி ஹி...
@ கனககோபி
குப்பை கொட்டுறதெண்டு முடிவாயிட்டுது. எங்க கொட்டினாத்தான் என்ன?
Post a Comment