இன்னுமொரு செயின் ரியாக்சன், அதுதான் தொடர் பதிவு. இந்தப் பதிவுக்கு சந்ரு அண்ணாவால் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிடிக்காவிட்டாலும் சமாளித்துக்கொண்டு வாழப் பழகிவிட்ட இன்றய வாழ்க்கைமுறைக்குள் பிடிக்காதவற்றையும் சொல்லியாகவேண்டிய பதிவு. இது பிடித்திருக்கிறது.
பிடித்தவர், பிடிக்காதவரை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற காரணத்தாலேயே எனக்கு ஆர்வமில்லாத, அல்லது நழுவல் போக்கை கடைப்பிடிக்கவேண்டிய தலைப்புகளை விட்டுவிட்டு, சிலவற்றை மாற்றியிருக்கிறேன். அழைத்தவரும், ஆரம்பித்தவரும் மன்னிப்பார்களாக.
நடிகர்
பிடித்தவர் – கமல்
இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?
பிடிக்காதவர் – சிம்பு
இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.
பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு
நடிகை
பிடித்தவர் – ஜோதிகா
படம் முழுவதும் இவரது முகத்தையே காட்டலாம். அவ்வளவு நடிப்பையும் அதிலே காட்டிவிடுவார். சந்திரமுகி அதன் உச்சம். இப்போதெல்லாம் சூர்யாமீது கடுப்பாகவே இருக்கிறது – கொஞ்சம் தாமதித்திருக்கலாம்.
பிடிக்காதவர் – நயன்தாரா
இப்போது பாட்டியாகிவிட்ட இவரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. காரணம் – கொஞ்சம் ஓவர் பில்டப்
எழுத்தாளர்
பிடித்தவர் - சுஜாதா
ஒரு தலைமுறையே இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
பிடிக்காதவர் – சாரு
இவரிடம் காணப்படும் ஒருவகைக் கர்வம் இவரிடமிருந்து என்னைக் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது.
இசையமைப்பாளர்
பிடித்தவர் – A. R. ரஹ்மான்
நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.
பிடிக்காதவர் – விஜய் ஆன்டனி
ஆத்திசூடியைக் கொலை செய்தது ஒன்றே போதுமே.
பாடகர்
பிடித்தவர் – S. P. பாலசுப்பிரமணியம்
இவரது தமிழ் உச்சரிப்பும், தன்னடக்கமும், நேர்த்தியும் என்னைக் கவர்ந்தவை.
பிடிக்காதவர் – உதித் நாராயணன்
அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ். அது ஒன்றே போதுமே.
பாடகி
பிடித்தவர் – சித்ரா
இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை
பிடிக்காதவர் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி
இவரது குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை
விளையாட்டு
பிடித்தது – கிரிக்கெட்
ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
பிடிக்காதது – WWF
மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?
இதைத் தொடர நான் அழைப்பது
405 comments:
«Oldest ‹Older 401 – 405 of 405 Newer› Newest»என்ன சந்ருவுக்கு நான் அண்ணனா..? எங்கே போய் தலையை முட்ட...!!!
கனககோபி டிசம்பர் 4 வெள்ளியாகையால் டிசம்பர் 5 சனி மாலை சந்திப்போம்... பலன் சொல்வதற்கு :)
கனககோபி நல்லவன்...
யாரையும் தீய பாதைக்கு இட்டுச் செல்வதில்லை....
அவனைப் பற்றி அவதூறுகள் வேண்டாம்....
400 ஆவது பின்னூட்டம் என்னுடையதாக இருக்குமா?
பின்னூட்டப்பெட்டி மூடப்படப்போகிறது. விடைபெறுங்கள்
நான்தான் 400 வது போட்டேன்...
இந்தப் பதிவின் பின்னூட்டப்பெட்டி தற்காலிகமாக மூடப்படுகிறது.
Post a Comment