ஏப்ரல் 1ம் திகதி முட்டாள்கள் தினம். நம்மைத்தவிர மத்தவங்கள் எல்லோருக்காகவும் இருக்கிற ஒரேயொரு தினத்தை நாம கொண்டாட வேண்டாமா? அதுக்குத்தான் இதோ டிப்ஸ்…
1. மணல் இல்லேன்னா சாம்பலைப் பொதிசெய்து ஏதாவது பிரபலமான கம்பனியோட பெட்டியில பார்சல் பண்ணி ரோட்டில தவறுதலா விழுந்து கிடக்குற மாதிரி போட்டுவிட்டா எவனாவது அதை எடுத்துக்கொண்டு போய் ஏமாறுவது நிச்சயம். ஆனா இலங்கையில இப்படியான பார்சல்கள் வீண் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் எங்கிறதால இதைத் தவிர்ப்பது நல்லது.
2. ‘பின்லேடன் பிடிபட்டார்’, ‘ரஜனிகாந் அரசியலுக்கு வாராராம்’ போன்ற பியூஸ் போன நியூஸ் எல்லாத்தாலும் முட்டாளாக்க முடியாது. ‘நமீதாவுக்குக் கல்யாணம்’, ‘ரகஸ்யாவுக்கு ஒரு ரகசியக் காதலனாம்’ போன்ற சூடான செய்திகளைக் கூறிப்பாருங்கள். ஐந்துவயதுப் பையன் முதல் அறுபது வயதுத் தாத்தா வரை அதிர்ச்சியடைவது நிச்சயம்.
4. பின்னாடி போய் ‘பேய்…’ என்று கத்திச் சின்னப்பசங்களைப் பயமுறுத்தலாம். ஆனா பெரியவங்களுக்கு இது கொஞ்சம் கஸ்டம். அவங்களுக்காகவே ஒரு அருமையான ஐடியா. பின்னாடி போய் ‘நமீதா’ என்று கத்திப் பாருங்கள். பதறி அடித்துக்கொண்டு திரும்புவார்கள்.
5. தலையிலே தூசி கிடக்கிறது என்று கூறினால் யாரும் இப்போது ஏமாற மாட்டார்கள். பதிலாக தலையிலே இமயமலை இல்லேன்னா மருதமலை கிடக்கிறது என்றால் பயத்தில் தலையைத் தடவுவது நிச்சயம்.
8. காலுக்கடியில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பயங்கர விலங்குகள் இருப்பதாகக் கூறியெல்லாம் பயமுறுத்த முடியாது. பதிலாக காசு கிடப்பதாகக் கூறிப் பாருங்கள். பத்துப் பைசா என்று கூறினாலே பதறியடித்துக்கொண்டு குனிவார்கள்.
9. பதிவுலகில் அடத்தவரை முட்டாளாக்குவதற்கு இப்போது சூடாக விவாதிக்கப்படும் ஒரு விடயத்தைப்பற்றித் தலைப்பைப் போட்டுவிட்டு, உள்ளே உங்கள் அக்கா பையன் மடியில் சுச்சா போனதை எழுதிவிடலாம். ஏதோ சூடான விடயம் என்று நம்பி வந்தவர்கள் உங்கள் மடி சூடான விடயத்தைப் பார்த்ததும் ஏமார்ந்து போவார்கள்.
11. பதிவுலகில் பரபரப்பான இலக்கமான பதினொன்றைத் தலைப்பில் போட்டுவிட்டு எவ்வளவு யோசித்தும் பதினொரு விடயம் சிக்கவில்லையா? இப்படி என்னைப்போல் இலக்கங்களைத் தாறுமாறாக இட்டுவிட்டு கடைசி இலக்கத்தைப் பதினொன்றாக இட்டுவிட்டால் சிலர் கவனிக்காமல் ஏமாறுவார்கள். கவனித்துப் பின்னூட்டுபவர்களுக்கும் ஏப்ரல் பூல் கூறிவிடலாம். எப்படி ஐடியா?
5 comments:
உதெல்லாம் கி.மு 10 ம் நூற்றாண்டு கால ஐடியாக்கள்....:-)))
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
http://sureshstories.blogspot.com/
பதிவுலகில் அடத்தவரை முட்டாளாக்குவதற்கு இப்போது சூடாக விவாதிக்கப்படும் ஒரு விடயத்தைப்பற்றித் தலைப்பைப் போட்டுவிட்டு, உள்ளே உங்கள் அக்கா பையன் மடியில் சுச்சா போனதை எழுதிவிடலாம். ஏதோ சூடான விடயம் என்று நம்பி வந்தவர்கள் உங்கள் மடி சூடான விடயத்தைப் பார்த்ததும் ஏமார்ந்து போவார்கள்.
//
இது தான் best.
நானும் இலக்கங்களைக் கவனித்துக் கொண்டு தான் வந்தேன்.. அதானே பார்த்தேன்.. கலக்கல்..
எல்லாம் சரி.. இந்த ஐடியக்களாலே நீங்க ஆகாமல் இருந்தால் சரி தான்..
voted. :)
// Suresh said...
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு//
// LOSHAN said...
பதிவுலகில் அடத்தவரை முட்டாளாக்குவதற்கு இப்போது சூடாக விவாதிக்கப்படும் ஒரு விடயத்தைப்பற்றித் தலைப்பைப் போட்டுவிட்டு, உள்ளே உங்கள் அக்கா பையன் மடியில் சுச்சா போனதை எழுதிவிடலாம். ஏதோ சூடான விடயம் என்று நம்பி வந்தவர்கள் உங்கள் மடி சூடான விடயத்தைப் பார்த்ததும் ஏமார்ந்து போவார்கள்.
//
இது தான் best.
நானும் இலக்கங்களைக் கவனித்துக் கொண்டு தான் வந்தேன்.. அதானே பார்த்தேன்.. கலக்கல்..
எல்லாம் சரி.. இந்த ஐடியக்களாலே நீங்க ஆகாமல் இருந்தால் சரி தான்..
voted. :)//
நன்றி அண்ணாஸ்

Post a Comment