Saturday, March 28, 2009

Facebook தனது வடிவத்தை மாற்றியது – வானொலியில் செய்தி !!!




கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் என்று நினைக்கிறேன். உலகின் Social networks களில் முதலிடம் வகிக்கும் Facebook தனது உட்கட்டமைப்பை மாற்றியமைத்தது. அவ்வளவுதான். ஏதோ நீண்டநாள் காதலிமீது Acid ஊற்றியதுபோலக் கொதித்துப் போனார்கள் அதன் பாவனையாளர்கள் பலர்.




சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கே Facebook இல் சங்கம் ஆரம்பிக்கும் நம்மவர்கள் இதற்குச் சும்மா இருப்பார்களா? We hate new Facebook என அதற்கும் ஒரு சங்கம் ஆரம்பித்துவிட்டார்கள். அச்சங்கம் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே அதன் அங்கத்தவர் எண்ணிக்கை ஆறு இலக்க எண்ணில் இருந்தது. இப்போது ஏழு இலக்கத்தைத் தொட்டிருக்கலாம்.

Campus இலும் Computer lab இனுள் இதே பேச்சுத்தான். ஒரு வாரத்திற்கு முன் ஒருநாள் அங்கிருந்தவாறே பதிவுகளில் மேய்ந்துகொண்டிருந்தேன். அங்கிருந்த சிங்கள நண்பர்களுக்கிடையே ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்தது. நடந்து முடிந்த இடைப்பரீட்சையைப் பற்றியதோ என எண்ணிக் காதைக் கொடுத்தேன். அப்போதுதான் தெரிந்தது அது Facebook இன் புதிய வடிவத்தைப் பற்றியது. அதைப் பிடித்திருக்கிறது எனச் சிலரும், பிடிக்கவில்லை எனச் சிலருமாக கூட்டம் களை கட்டியிருந்தது.

சரி, இதையெல்லாம் போனால் போகட்டும் என விட்டுவிடலாம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைத் தனியார் வானொலி ஒன்றைக் கேட்டவாறே காலை உணவை எடுத்துக்கொண்டிருந்தேன். உலகில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் சிலவற்றைக் கூறிக்கொண்டு வந்த அந்தப் பெண் அறிவிப்பாளர் அதில் Facebook தனது வடிவமைப்பை மாற்றிவிட்டதாகவும், அதைப் பிடிக்காத பலர் Facebook இல் அதற்கெதிராக Group ஒன்று தொடங்கிவிட்டதாகவும், கூறியதுடன் அதைப்பற்றித் தனது கருத்தையும் கூறத் தூக்கிவாரிப் போட்டது எனக்கு. நாடு இருக்கும் நிலமைக்கு இதெல்லாம் தேவையா?

சரி, இதைப்பற்றி Facebook என்ன கூறுகின்றது தெரியுமா? இந்தப் புதிய வடிவமைப்பில் பாவனையாளர்கள் தமது நண்பர்களை இலகுவாகப் பிரித்தறியக் கூடியதாக இருக்கும் என்றும், இந்த வடிவமைப்பு மூலமாக Spam users இனை இலகுவாக இனம்காண முடியும் என்றும் கூறுகின்றது.

அண்மைக் காலங்களில் Facebook தனது சட்டங்களை இறுக்கமாக்கி, Facebook இல் நடைபெறும் இணையக் குற்றங்களை குறைக்கப் பகீரதப் பிரயர்த்தனம் செய்து வருகின்றது. சும்மா இருப்பார்களா நம்மவர்கள்? அவர்கள் யார் எம்மைக் கேட்காது சட்டங்களை மாற்றுவது என அதற்கும் ஒரு Group உருவாக்கிவிட்டனர். நல்லதுக்கும் காலமில்லை.

1 comments:

Anonymous said...

//பெண் அறிவிப்பாளர் அதில் Facebook தனது வடிவமைப்பை மாற்றிவிட்டதாகவும், அதைப் பிடிக்காத பலர் Facebook இல் அதற்கெதிராக Group ஒன்று தொடங்கிவிட்டதாகவும், கூறியதுடன் அதைப்பற்றித் தனது கருத்தையும் கூறத் தூக்கிவாரிப் போட்டது//


இதெல்லாம் சொன்னால்தான் அவங்க வானொலியை நாலுபேர் கேப்பாங்க போலிருக்கு. அந்தக் கறுமத்தை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தனான்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy