சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பமான பதிவிடும் கலாச்சாரத்தின் வளற்சி அபரிமிதமானது. எழுத்தாற்றல் மிக்க பலர் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு களமாகவே பதிவுலகம் இருந்து வருகிறது. இந்தப் பதிவுகளை வாசிப்பதற்கும் ஆர்வமானோர் பலரால் இவை சாத்தியமாகவே இருந்து வருகின்றது. உண்மையிலேயே இது ஒரு வரப்பிரசாதம். செலவற்ற மூலதனம்.
இன்று பல பிரபல கம்பனிகளின் இணையப் பக்கங்களிலும் Blog என்ற ஒரு இணைப்புக் காணப்படும். அவ்வாறு காணப்படாத கம்பனிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்குக் காரணம் இணையப் பக்கங்களில் உலவுவதைவிட பதிவுப்பக்கங்களில் உலவுவது வாடிக்கையாளர்களுக்குப் பிடித்துப் போகின்றது. அதன் பயனாக வியாபாரம் அதிகரிப்பதாகக் கூறுகின்றன கம்பனிகள்.
இணையத்தில் ஏற்படும் Web Traffic எனப்படும் இணைய நெரிசலானது Blog கலாச்சாரத்தால் பலமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர். கூகுலும் இந்த இணைய நெரிசலை அவதானித்துத்தான் தளங்களில் விளம்பரங்களை ஒழுங்கமைப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இந்தப் பதிவிடும் கலாச்சாரமும் ஒரு மாய உலகம் ( Virtual world ) என்றே கூறுகின்றனர். பதிவிடுவதால் ஏற்படும் பிரபலத்தாலும், அதற்கு வரும் பின்னூட்டங்கள், ஹிட்ஸ், Traffic என்பவற்றாலும் கவரப்பட்டு பதிவிடுவோர் பலர் அதனுடனேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் இதனால் அவர்களது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பதிவகளை வெறுமனே வாசிப்போர் கூட அதனால் ஏற்படும் சுவாரசியத்தால் இதற்குத் தப்பவில்லை.
இதைப்பற்றிப் பிரபல பதிவர் ஒருவரிடம் வினவிய போது பதிவிடத் தொடங்குபவர்களும், புதிதாகப் பிரபலமானவர்களும் இப்படியான சிக்கல்களில் மாட்டுவது அதிகம்தான். ஆனால் எல்லாம் பதிவுலகில் சிறிதுகாலம் பழகப்பழகச் சரியாகிவிடும் என்றார்.
எப்படியோ, நன்மை இருக்கும் எந்த இடத்திலும் சிறிது தீமையும் இருப்பதுதான் உலக நியதி. மன அடக்கத்தோடு புகழ்ச்சிகட்கு அடிமையாகாது இருக்கின் பதிவுலகம் நல்லதொரு பாடசாலை!.
11 comments:
பழகப் பழக பதிவு பக்குவப் படும்.இல்லை மாற்றம் தேவைப் படும்.அதென்னமோ லூஸ்ல விடுங்கன்னு பதிவர்கள் சொல்ற மாதிரி பறக்க விடுங்க.
//எப்படியோ, நன்மை இருக்கும் எந்த இடத்திலும் சிறிது தீமையும் இருப்பதுதான் உலக நியதி. மன அடக்கத்தோடு புகழ்ச்சிகட்கு அடிமையாகாது இருக்கின் பதிவுலகம் நல்லதொரு பாடசாலை!.//
நன்று.
Thanks
//எப்படியோ, நன்மை இருக்கும் எந்த இடத்திலும் சிறிது தீமையும் இருப்பதுதான் உலக நியதி. மன அடக்கத்தோடு புகழ்ச்சிகட்கு அடிமையாகாது இருக்கின் பதிவுலகம் நல்லதொரு பாடசாலை!.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
//ஆனால் இந்தப் பதிவிடும் கலாச்சாரமும் ஒரு மாய உலகம் ( Virtual world ) என்றே கூறுகின்றனர். பதிவிடுவதால் ஏற்படும் பிரபலத்தாலும், அதற்கு வரும் பின்னூட்டங்கள், ஹிட்ஸ், Traffic என்பவற்றாலும் கவரப்பட்டு பதிவிடுவோர் பலர் அதனுடனேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் இதனால் அவர்களது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.//
இது உண்மை இதற்கு மாற்றம் தேவை.
மற்றவை தானாக மாறிவிம் என்று நினைக்கின்றேன்
மேலை நாடுகளில் பதிவர்கள் அனைவரும் பதிவு இட்டு பணம் சம்பாதிக்கின்றனர் (example: வாஷிங்டன் போஸ்ட், guardian.uk, knowledge@wharton, mckensy Blogs).
நம் தமிழ் நாட்டில் மட்டுமே நாம் கூலி இல்லாமல் மாங்கு மாங்கு என்று விரல் ஓடிய டைப் அடித்து எழுதுகிறோம்.
குப்பன்_யாஹூ
___//பலர் அதனுடனேயே அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் இதனால் அவர்களது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பதிவகளை வெறுமனே வாசிப்போர் கூட அதனால் ஏற்படும் சுவாரசியத்தால் இதற்குத் தப்பவில்லை.//___
நூறு சதவிகிதம் உண்மை...
எனக்கும் இந்த அனுபவம் உண்டு.
100% உண்மை
சுபாங்கன் , நீங்கள் ஒரு யாழ்ப்பாண தமிழன் என்று அறிந்தேன். அப்படியானால் ஏன் யாழ்ப்பாண தமிழில் நீங்கள் எழுதக்கூடாது ?
அடுத்த உங்கள் ஆக்கத்தை இனிமையான யாழ் தமிழில் எதிர்பார்கிறேன்.
நன்றி
நானறிந்த வரையில் எல்லாம் உண்மைதான் !
நன்று
Post a Comment