பஸ்சில பயணம் செய்யிறது என்றாலே சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. எனக்கோ நாள் ஒன்றின்கு இரண்டு மணி நேரம் பஸ்சில் பயணிக்கும் பாக்கியம். கேட்கவா வேண்டும்? தினமும் விதம் விதமா, தினுசு தினுசா, ரகம் ரகமா….. பார்க்கும் பாக்கியம் ( ரோட்டில போற வாகனங்களைத்தான் ). ஆனாஇன்றைக்குத்தான் இப்படி ஒரு பதிவு இட வேண்டும் என்ற ஐடியா வந்தது. இதற்குக் காரணமாக இருந்த, முந்தநாள் முன் சீட்டில் இருந்த அக்காவிற்கு ( அப்படித்தான் நினைத்தேன். பின்னர்தான் அது ஆன்டி என்று தெரிந்தது) நன்றிகள்.
பொதுவா பொம்பிளைங்க பலவிதமா ஸ்டைல் பண்ணிட்டு வருவாங்க. ஆனாஅதையெல்லாம் பாக்கிற ஆளில்லை நான் (நம்பித்தான் ஆகணும்). அதையும்மீறிக் கண்ணில பட்ட ஸ்டைல் பற்றித்தான் பார்ப்போம்.
வேலைக்குப் போற அவசரத்துல தலையைக் கட்ட மறந்துபோய், எண்ணெய் கூடவைக்காமல், பரட்டையா, செம்பட்டை நிறமா மாறிப்போன தலைமுடியோடவருவாங்க கொஞ்சப் பெண்கள் ( அது Straight பண்ணி, Colour பண்ணின Hair ஆமுங்கோ ). Averageஆ நிமிசத்துக்கு ஏழு தடவை தலையைக் கோதிக்கிட்டேஇருப்பாங்க ( நான் எண்ணலீங்கொ, ஒரு குத்துமதிப்புத்தான் ). அப்படி வாறவங்கஇருக்கிற சீட்டுக்குப் பின் சீட்டில இருக்கவே எல்லாரும் பயப்படுவாங்க. இருந்துட்டா பஸ் ஓடுற ஸ்பீடுல மயிர் எல்லாம் பறந்து பின் சீட்டிலஇருக்கிறவங்க மூக்கைப் பதம் பார்த்து அவங்களுக்கு அன்னிக்குஜலதோசம்தான். அப்படிப்பட்டவங்க கலரிங் கரையாம இருக்கவும், Straight பண்ணின Hair குலையாம இருக்கவும் அடிக்கடி தலையைக் கழுவமாட்டாங்களாம். ஏதாவது சென்ட் வேற தலைக்கு அடிச்சிருப்பாங்களாம். ரெண்டுவாசமும் சேர்ந்து மயிர் மூக்குக்க போனவங்களால மூணு நாளைக்கு மூச்சேவிடமுடியாதாம் ( தகவல் உபயம் – பக்கத்து சீட் அங்கிள் ).
ஊரில பொம்பிளைங்க கிணத்துல இல்லைன்னா ஆத்துல குளிக்கிறப்ப சீலையைநெஞ்சுக்குக் குறுக்காக் கட்டியிருப்பாங்களே, அதே ஸ்டைல்ல ட்றஸ் பண்ணிட்டுவருவாங்க கொஞ்சப்பேர் ( அந்தக் கருமத்துண்ட பெயர் எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவங்க பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா ). அப்படிப்பட்டவங்கயாராவது வந்தா உடனேயே சீட் கிடைச்சுடும்( பொம்பிளைங்கன்னு அவ்வளவுமரியாதை! ). சீட் கொடுத்தவங்க பக்கத்துலயே நின்னுக்குவாங்க (?!). அப்படிவாறவங்களும் ட்றஸ் இருக்கா இல்லை கழன்று விழுந்திரிச்சா என்று அடிக்கடிகுனிஞ்சு பார்த்துக்கொண்டே வருவாங்க(?) ( அலேட்டாத்தாம்பா இருக்காங்க ). இவங்க பக்கத்துல இருந்திடக் கூடாது. அப்படியே திரும்பி எங்களையும் என்னபண்ணுறமுன்னு ஒரு பார்வை பாப்பாங்க. ஆனா எல்லாத்தையும் மேலஒருத்தன் பாத்திட்டிருக்கான்னு மறந்துடுவாங்க ( ஆண்டவனைத்தான்சொல்றனுங்கோ ).
மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்துறப்ப பொய்க்கால் குதிரை ஆடுவாங்களே, அதே மாதிரி செருப்பின்ட குதியில லைட் போஸ்ட்டைக் கட்டிக்கொண்டுவருவாங்க கொஞ்சப்பேர் ( ஹைஹீல்சாமுங்கோ). அதுன்ட நுணிகூட ரொம்பஆ இருக்கும். அவங்க எல்லாம் ஏறின உடனே யாராவது சீட் கொடுத்துட்டாச்சரி, இல்லையின்னா அன்னிக்கு அவங்க பக்கத்துல நின்னுக்கிட்டு ட்ராவல்பண்ணுறவங்க பாடு பரிதாபம்தான். பஸ் குலுக்குற குலுக்கல்ல பொய்க்கால்குதிரை எல்லாம் தோத்துப்போற மாதிரி ஆடுவாங்க. அப்பப்ப காலையும் தூக்கித்தூக்கி வைக்கிறதால பக்கத்துல நிக்கிறவங்க இரும்புல பூட்ஸ் போட்டிருந்தாச்சரி, இல்லையின்னா ஹீல்சுக்கு இரையாக வேண்டியதுதான். இதுக்குத்தான்லேடீசுக்கு சீட் கொடுக்கச் சொல்லி சொல்லுவாங்களோ?
இன்னும் கொஞ்ச ஸ்டைல் பாக்கியிருக்கு. ஆனா எதுக்கு ஒட்டுமொத்தபெண்களோட சாபத்தை ஒரே நாள்ள வாரிக் கொட்டிக்கணும். அதப் பார்ட் 2 லபாத்துக்கலாம்.
19 comments:
பெண்பாவம் சும்மா விடாது சுபாங்கன்
சுபாங்கன், இந்தப் பூனையும் பால் குடிக்குமா எண்டு பாத்தா, பாட்டிலைத் திறந்து பீரே அடிக்கிறீங்களே.
யாருப்பா அது அனானி? பெயரையும் சொல்லுங்கப்பா
அருமை
நன்றி முரளிகண்ணன்
சுபங்கன் அண்ணா வாசிக்கலாமா? பின்னூட்டல் போடுங்க அப்புறம் வாறன்..
//ஆனா எல்லாத்தையும் மேலஒருத்தன் பாத்திட்டிருக்கான்னு மறந்துடுவாங்க //
//மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்துறப்ப பொய்க்கால் குதிரை ஆடுவாங்களே, அதே மாதிரி செருப்பின்ட குதியில லைட் போஸ்ட்டைக் கட்டிக்கொண்டுவருவாங்க கொஞ்சப்பேர் //
ரசித்தேன்
//மயிர் மூக்குக்க போனவங்களால மூணு நாளைக்கு மூச்சேவிடமுடியாதாம்//
ஏன் இப்படி பாஸ். :) நக்கலுக்கு அளவெ இல்லயா:)
ச்சா....அங்கேயும் இப்படி எல்லாம் நடக்குதோ..பரவாயில்லை நாடு முன்னேறிட்டுது..
நான் இருக்கேக்க....(வேண்டாம்..)
இதையெல்லாம் அனுபவிச்சுட்டு கண்டுக்காம போயிட்டே இருக்கோனும்,,:-))
//Sinthu said...
சுபங்கன் அண்ணா வாசிக்கலாமா? பின்னூட்டல் போடுங்க அப்புறம் வாறன்..
//
வாங்க, வாசிங்க சிந்து, தலைப்பு சும்மா ஒரு "இது"க்கு
பார்த்து தல
வீட்டில பார்த்திட போறாங்க
ஹலோ சுபாங்கன்! இத பத்தி நீங்க பேசினால் உங்க பார்வைல தப்புன்னு சொல்லுவாங்க! எதுக்கு வம்பு
//durugathan said...
ஹலோ சுபாங்கன்! இத பத்தி நீங்க பேசினால் உங்க பார்வைல தப்புன்னு சொல்லுவாங்க! எதுக்கு வம்பு//
100% உண்மைங்க
kalakal post. waiting for the part 2.
ஹா
உங்களுக்கு PhD யே குடுக்கலாமே!!!!!!
இது இன்னும் ஏன் யாருக்கும் புரியல????
நீங்க குறிப்பிடும் ஸ்டைல் பண்ணும் 'நாரீமணிகள்' பஸ்ஸுலே எல்லாம் வர்றாங்களா என்ன!!!!
ஆனாலும்..... அவதானிப்பு......
ஹைய்யோ......
// துளசி கோபால் said...
நீங்க குறிப்பிடும் ஸ்டைல் பண்ணும் 'நாரீமணிகள்' பஸ்ஸுலே எல்லாம் வர்றாங்களா என்ன!!!!//
ஆமா இதத்தான் நானும் கேக்குறேன். ரொம்ப ரொம்பக் குறைவு.
||மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்துறப்ப பொய்க்கால் குதிரை ஆடுவாங்களே, அதே மாதிரி செருப்பின்ட குதியில லைட் போஸ்ட்டைக் கட்டிக்கொண்டுவருவாங்க||
rotfl...கலக்கல்.
//ஆனா எல்லாத்தையும் மேலஒருத்தன் பாத்திட்டிருக்கான்னு மறந்துடுவாங்க //
கலக்கல்.
Post a Comment