நீங்கள் இணையத்தில் படங்களை பதிவேற்றம் செய்தபிறகு அதனை மற்றவருடன் பகிர்கிறீர்கள். சில படங்களை அனைவரும் பார்க்கக் கூடியவாறு Public ஆகவும், சிலவற்றை அடுத்தவர் பார்க்க முடியாதவாறு Personal ஆகவும் சேமிக்கிறீர்கள். சில காலத்திற்குப் பிறகு நீங்கள் அப்படங்களை நீக்கி விடுகின்றீர்கள். ஆனாலும் அப்படங்களை அதன்பிறகும் பார்க்க முடியும் என அதிர்ச்சியளித்திருக்கிறது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள்.
அவர்கள் இந்த ஆராய்ச்சிக்காக facebook, flickr, picasa உள்ளிட்ட 16 புகைப்படங்கள் பரிமாற்றும் தளங்களைத் தெரிவு செய்தனர். அவற்றில் புகைப்படங்களை Upload செய்துவிட்டு, பின் அவற்றை நீக்கிவிட்டனர். ஆனால் மறக்காமல் ஒவ்வொரு புகைப்படத்தினதும் தனிப்பட்ட நேரடி URL களை எடுத்து வைத்துவிட்டனர். ஏறத்தாள ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த URL களை பரீட்சித்துப் பார்த்த போது facebook உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில் அந்தப் புகைப்படங்கள் தென்பட்டிருக்கின்றன.
flickr, picasa ஆகிய தளங்களில் புகைப்படம் தென்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கின்றதாம். மற்றும் Microfoft இன் Windows Live Spaces இல் புகைப்படங்கள் தென்படவே இல்லை எனவும் தெரிவித்தனர். நீங்கள் புகைப்படங்களை நீக்கும்போது அவை Server இலிருந்தும் நீக்கப்படாததே இதற்குக் காரணமாம்.
Facebook தனது தளத்தில் இவ்வாறு தென்படுவதை மறுத்துள்ளது. தனது தளத்தில் உடனடியாக Server இலிருந்தும் நீக்கப்பட்டுவிடும் எனவும், மீண்டும் URL கள் Overwrite ஆவதனால் அவ்வாறு வேறு படங்கள் தென்பட்டிருக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.
சரி தெரிந்தால் தெரிந்துவிட்டுப் போகிறது, நமக்கென்ன என்கிறீர்களா?, நீங்கள் Personal ஆக வைத்திருக்கும் படங்களும், சம்பந்தப்பட்ட ஆல்பம் அழிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு அவற்றின் நேரடி URL களைக் கொண்டு பார்க்க முடிகின்றதாம்.
உங்கள் Personal படங்களை Personal ஆகவே வைத்திருங்கள். அதை இணையத்தில் பகிர்ந்துவிட்டு Personal ஆக வைத்திருக்க முயன்றால் அவ்வளவுதான்.
டிஸ்கி – நான் தொடர்ந்து இவ்வாறான பதிவுகள் எழுதுவதால் சலித்துக்கொண்டவர்களுக்கு; என் மனம் ஒரு நிலையில் இல்லை. சொந்தப் படைப்புகள் வரும் – சில நாட்களில்.
3 comments:
ut this is microsft spreading the false news about googke, orkut, facebook, linkedin etrc.
நல்ல பகிர்வு மச்சான்...
அப்புறம் உன் சொந்த படைப்புகளுக்கு வெயிடிங்
ஓகே..இனிமேல் பாத்து சேமிக்கிறேன்....
பகிர்விற்கு நன்றி..
:)))
Post a Comment