எனக்குப் பின்னூட்டத்தில் நண்பர் வெங்கிராஜா பிளாக்கின் Bookmark ஐகானை (Favicon) எவ்வாறு மாற்றுவது எனக் கேட்டிருந்தார். பொதுவாக பிளாக்கர் பிளாக்குகளில் பிளாக்கரின் இந்த ஐகானே தெரியும்.
நான் எனது பிளாக்கிற்கு ஐந்தறைப்பெட்டி என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்தை இட்டுள்ளேன். இதை மாற்றுவது மிகவும் சுலபம்.
முதலில் இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கேயே அவர்கள் 18000இற்கும் மேற்பட்ட அனிமேசன் மற்றும் சாதாரண Faviconகளை தயாரித்து வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றைப் பாவிக்க விரும்பினால் மேற்கூறிய தளத்திலுள்ள goto the favicon gallery என்ற லிங்கை கிளிக்கி செல்லுங்கள்.
அங்கே உங்களுக்கு பிடித்தமான faviconஇனைத் தெரிந்து அதன் அருகிலுள்ள HTML embed code என்பதைக் கிளிக்கி வரும் Codeஇனை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் உங்களுக்குப் பிடித்தமான படத்தை இட விரும்பினால் அங்கே இலவசமாக உங்கள் பாவனையாளர் கணக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உருவாக்கிய உங்கள் பாவனையாளர் பக்கத்திலே படத்தில் காட்டிய பகுதியினூடு நீங்கள் விரும்பிய படத்தைத் தெரிவுசெய்து அப்லோட் செய்யுங்கள்.
பின்னர் அதற்கு நீங்கள் விரும்பிய பெயரைத் தெரிவுசெய்து அதை save செய்யுங்கள்.
பின் அந்த Favlcon code இனை படத்தில் காட்டியவாறு கிளிக்கி வரும் நிரலினை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெட்டி எடுத்துக்கொண்ட நிரலினை உங்கள் பிளாக்கின் Edit Html பகுதிக்குச் சென்று அங்குள்ள /b:skin> என்ற பகுதிக்கும் /head> என்ற பகுதிக்கும் நடுவில் ஒட்டி, Save Template இனைக் கிளிக்குங்கள்.
இப்போது நீங்கள் தெரிவுசெய்த படம் உங்கள் பிளாக்கின் FavIcon ஆக தெரிவதைக் காணலாம்.
16 comments:
ரொம்ப ரொம்ப நன்றிங்க
இன்னும் எப்பன்னு காத்துட்டிருக்கேன்
அருமையான விளக்கம்! நல்ல பணி! தொடரவும்! வாழ்த்துகள்!
அருமை சுபாங்கன்...
நான் விரும்பிய தகவல்..
நன்றி சுபங்கன்..
அருமை ஐயா அருமை.
சூப்பரா விளக்கி இருக்கீங்க. மிக்க நன்றி.
தமிழர்ஸ், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க
என் பக்கம்
வெங்கிராஜா
sarathy
கலையரசன்
இராகவன் நைஜிரியா
நன்றிகள்
தகவலுக்கு நன்றி.
Rompa thanks!
நல்ல பதிவுகள் நண்பா தொடருங்கள்....
R.V.Raj
சந்ரு
நன்றி
நன்றி ஈழவன், ஆகா, மிஸ் பண்ணப் பாத்தெனே
Thank you brother.
@ கனககோபி
நன்றி நண்பா
hi bookmark icon error now what problem?
@shiyamsena
you may made some mistakes
Post a Comment