Wednesday, May 13, 2009

பூமியைத் தாண்டியும் வேரூன்றிய Twitter!


 
mike massimino, அண்டவெளியிலுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியில் இருந்து ஆராய்ச்சி செய்துவரும் ஏழு விண்வெளி வீரர்களில் ஒருவர். அங்கிருந்தபடியே இவர் டிவிற்ரவும் தொடங்கிவிட்டார். பூமிக்கு வெளியிலிருந்து டிவிட்டும் முதலாவது நபர் என்ற பெருமையும் பெற்றுவிட்டார். அண்டவெளியில் இருந்துகொண்டு இவர் டிவிற்ர, இவரை Twitterஇல் தொடர்வோரும் கூடிக்கொண்டே செல்கின்றது. இவர் ருவிற்ருவதற்கு நாசா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லையாம். ஏன் தெரியுமா? நாசாவும் கூடத்தானே டிவிட்டுகிறது! இவரோட Twitter அக்கவுண்டை இங்கயும் , நாசாவோடத  இங்கயும் போய்ப் பாருங்க.

அவரது Twitter பக்கம்

எனக்கும் டிவிட்டரில ஒரு அக்கவுண்ட் இருக்கு. ஆனா எனக்கு அதப்பத்தி ஸ்ராட்ல ஒரு மண்ணும் தெரியாது. யாரையாவது பாலோ பண்ணலாம், ஏதாவது எழுதி வைக்கலாம், அடுத்தவங்க எழுதுறத படிக்கலாம். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. ஆனா Google Twitterஐ வாங்கப்போதாம் என்று தெரிந்ததும் ஏதோ மேட்டர் இருக்குன்னு தேடத்தேட கொஞ்சம் கொஞ்சமா விளங்கத்தொடங்கியது.

பலருக்கு Twitter ஒரு போதையாகவே மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான SMS களை Twitterஇனூடு பரப்புகின்றனர். இதில் அவர்களது விருப்பு, வெறுப்புக்கள் எல்லாம் அடக்கம். இதனால் ஏதாவது ஒரு புதிய விடயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள Twitterஇலும் தேடலாம் என்ற நிலை இப்போதே ஓரளவு வந்துவிட்டது.

Google போன்ற தேடுபொறிகளை விட இது சிறந்தது ஏனென்றால் இதில் வரும் பதில்கள் எல்லாம் எம்மைப்போல சாதாரணமானவர்களின் கூற்றுக்கள். அனுபவ உண்மைகள். எனவே இதில் நம்பகத்தன்மை அதிகம். அத்துடன் நிறுவனங்களும் தமது நிறுவனம் பற்றிய Feed backs களை அறிய Twitterஐ நாடுகின்றன. பல நிறுவனங்கள் Twitter அக்கவுண்ட்களை வைத்து அதன்மூலம் இலவச விளம்பரம் செய்கின்றன. எனவே இப்படி இருசாராரும் சந்திக்கும் களமாக இருக்கும் Twitter எதிர்காலத்தில் இன்னுமொரு Facebook ஆகவோ, இல்லாவிட்டால் நாளாந்த விடயங்களைத் தேடும் ஒரு தேடுபொறியாகவோ வர வாய்ப்பிருக்கிறது.

7 comments:

Suresh Kumar on May 13, 2009 at 7:06 PM said...

நல்ல தகவல்

Suresh on May 13, 2009 at 10:36 PM said...

ஆச்சிரிய தகவல் பரிமாற்றம்

Anonymous said...

பதிவின் எழுத்துருவின் அளவு ரொம்ப பெரியாக இருப்பதால்... வாசிப்பது சிரமமாக உள்ளது!(எழுத்துருக்கள் மேல் வரியில் உள்ளவையும் கீழ் வரியில் உள்ளவையும் கோர்வையாக இருக்கினறன ) கவனிக்கவும்!

கலையரசன் on May 14, 2009 at 2:07 PM said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

நெல்லைத்தமிழ் on May 14, 2009 at 6:43 PM said...

அண்ணே எனக்கும் அக்கவுண்ட் இருக்குண்ணே... ஆனா ஒழுங்கா அதை பாலோ-அப் பண்ணலை.

Muhammad Ismail .H, PHD, on May 14, 2009 at 7:51 PM said...

அன்பின் சுபாங்கன்,

// mike massimino, அண்டவெளியிலுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியில் இருந்து ஆராய்ச்சி செய்துவரும் ஏழு விண்வெளி வீரர்களில் ஒருவர். அங்கிருந்தபடியே இவர் டிவிற்ரவும் தொடங்கிவிட்டார். // இது தப்பு. :-(((.


இது இப்படி இருக்கனும். Michael J. Massimino பூமிக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியான ஹப்பிளை இறுதியாக பழுது பார்க்க, பூமியிலிருந்து விண்வெளி ஓடம் அட்லான்டிஸில், பயணம் (STS-125) சென்றுள்ள ஏழு விண்வெளி வீரர்களில் ஒருவர். அங்கிருந்தபடியே இவர் டிவிட்டவும் தொடங்கிவிட்டார். இது சரி. :-))))

ஹப்பிள் ஆளற்ற தொலைநோக்கியாகும். ISS போல அதில் மனிதர்கள் இருந்து இயக்குவதில்லை. இது தான் சரியான செய்தி. Don't commit "Cyber Bullying"மேலதிக விவரங்களுக்கு - http://en.wikipedia.org/wiki/STS-125with care and love,

Muhammad Ismail .H, PHD,

Subankan on May 14, 2009 at 8:13 PM said...

@ Muhammad Ismail .H, PHD,

அவர் அங்கு நீண்டகாலமாகத் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என படித்ததால் அவ்வாறு நினைத்துவிட்டேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy