இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்களின் பிளாக்குகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது பிளாக்குகள் காணாமல்ப் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் பிளாக்குகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அது அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம். இதனை எனக்குத் தெரிந்து லோசன் அண்ணாதான் முதன்முதல் அறிவித்தார். ஆனால் அதன்பின்னும் பலரது பிளாக்குகளில் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
Google Chrome இல் உலவுபவர்களுக்கு இந்த எச்சரிக்கை தெரியும். ஏனய உலவிகள் தாமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிடுவதால் அவற்றில் உலவுபவர்கள் இதனை உணர்வதில்லை.
Malware என்றால் என்ன? இது malicious Software இலிருந்து பிறந்த பதமாகும். இது ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் கணினி உரிமையாளரின் அனுமதியின்றி, அவருக்குத் தெரியாமலேயே கணினிக்குள் புகுந்து அதனை நாசம் செய்துவிடும். Malware ஆனது கணினி வைரஸ், Worms, trojan horses, Spyware போன்ற அனைத்துத் தீய சக்திகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு மென்பொருள். இது மின்னஞ்சலினூடும், இணையப்பக்கங்களில் ஒளிந்திருந்தும் உங்கள் கணினிக்குள் புகுந்துவிடும். பிறகு அதனுடன் தையா தக்கா ஆடி அதனை அகற்ற பெரும்பாடு படவேண்டும்.
இவ்வாறு Malware காணப்படும் பிளாக்குகளை கூகுல் முடக்கி வருகின்றது. உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் அதனை மீளப் பெற இயலாது. உங்கள் பதிவுகள், கஸ்டப்பட்டுச் சேர்த்த Followers எல்லாம் வீணாகிவிடும். உங்கள் பிளாக்கில் NTamil vote button நிறுவியிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதனை அகற்றிவிடுங்கள். நீங்கள் நிறுவியிருக்கும் Gadgets கள் வேறு ஏதாவதும் Malware கொண்டிருக்கலாம். எதற்கும் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை தட்டிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
Malware இருப்பதாக தெரிந்தால் உங்கள் பிளாக்கிலுள்ள வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட Gadgets ஒவ்வொன்றாக கழற்றி பரிசோதியுங்கள். உங்கள் பிளாக்கைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.
26 comments:
பயனுள்ள தகவல்! நன்றி!!
முன்பே தெரிந்திருந்தால், வினோத்கெளதம்
தப்பிச்சிருப்பாரு...
என்ன சுபங்கன் நம்மபக்கம் ஆள காணாம்?
நல்ல விஷயம் சுபாங்கன்.. நான் ஆரம்பத்திலேயே தப்பிச்சேன்..
நல்ல விடியம் நண்பரே நான் என்னுடைய ஒரு Blog இழந்துவிட்டேன்
ஐந்தறைப்பெட்டிக்குள்ள இவ்ளோ விஷயமா...!!!
நல்ல தகவல்...நன்றி
மிகச்சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்டிருக்கும் பதிவு இது, நன்றி... எனது முந்தைய பிளாக்கான www.ippadikkusakthi.blogspot.com(இப்படிக்குசக்தி) என்ற தளம் இதனால் தான் முடக்கப்பட்டுவிட்டது. எவ்வளவு முயன்றும் அதை மீட்டெடுக்க முடியவில்லை.
நல்ல தகவல்..சக பதிவர்கள் கவனத்தில் கொள்ளுங்கப்பா.....இன்னும் பலர் தளங்களில் இந்த பிரச்சினை இன்னும் இருக்கு
நன்றி சுபாங்கன். சரியான நேரத்தில் சரியான பதிவு..
தகவலுக்கு நன்றி நண்பா!
என்னுடைய உரலை நீங்கள் அளித்த பெட்டியில் போட்டு செக் செய்தபோது வந்த ரிசல்ட்:
Safe Browsing
Diagnostic page for dondu.blogspot.com
What is the current listing status for dondu.blogspot.com?
This site is not currently listed as suspicious.
What happened when Google visited this site?
Of the 15 pages we tested on the site over the past 90 days, 0 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-05-07, and suspicious content was never found on this site within the past 90 days.
This site was hosted on 1 network(s) including AS15169 (GOOGLE).
Has this site acted as an intermediary resulting in further distribution of malware?
Over the past 90 days, dondu.blogspot.com did not appear to function as an intermediary for the infection of any sites.
Has this site hosted malware?
No, this site has not hosted malicious software over the past 90 days.
Next steps:
Return to the previous page.
If you are the owner of this web site, you can request a review of your site using Google Webmaster Tools. More information about the review process is available in Google's Webmaster Help Center.
நன்றி,
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்பாடி.. எனக்கு எதும் மால்வேர் இல்லப்பா...!!
மக்கா.. எதுக்கும் எல்லாரும் இதை செக் செய்து கொள்வது சால சிறந்தது.
அப்படி செக் செய்வதற்கு முன் ஒரு காப்பி சேவ் செய்துகொள்ளுங்கள்..!!
ரொம்ப நல்ல தகவல் சுபா
நன்றி
நன்றி நண்பரே.
நகைக்கடை வலைப் பதிவு இதனால் பாதிக்கப் பட்டு இருக்கின்றது.
கூகுள் கிரோம் மாதிரி, ஃபயர் பாக்சும் நன்றாக வேலைச் செய்கின்றது. அதில் நகைக் கடை வலைப் பதிவை திறக்க முயற்ச்சித்தபோது வைரஸ் என்று வருகின்றது.
NTamil - திரட்டித்தான் பிரச்சினை. அதனால் நண்பர்கள் அதைனை நீக்கிவிட்டால் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்.
சரியான நேரத்தில் தேவையான பதிவு,
நன்றி, வாழ்த்துக்கள்...
Thanks. very very good post
தகவலுக்கு நன்றி. இது முன்பே தெரிந்தால் எனது பிளாக்கை காப்பாற்றியிருக்கலாம். பிளாக்கை ஓப்பன் செய்யும் போது எச்சறிக்கை செய்தது. நான்தான் அலட்சியமாக இருந்துவிட்டேன். நன்றி சுபாங்கன்
நீங்கள் கொடுத்த பெட்டியில் www.ntamil.com ஐ இட இப்படி வந்தது. malware இருக்கிறதாம்!!!
safe Browsing
Diagnostic page for ntamil.com
What is the current listing status for ntamil.com?
Site is listed as suspicious - visiting this web site may harm your computer.
Part of this site was listed for suspicious activity 1 time(s) over the past 90 days.
What happened when Google visited this site?
Of the 755 pages we tested on the site over the past 90 days, 14 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-05-23, and the last time suspicious content was found on this site was on 2009-05-23.
Malicious software includes 373 scripting exploit(s).
Malicious software is hosted on 2 domain(s), including gumblar.cn/, martuz.cn/.
This site was hosted on 1 network(s) including AS26496 (PAH).
Has this site acted as an intermediary resulting in further distribution of malware?
Over the past 90 days, ntamil.com appeared to function as an intermediary for the infection of 40 site(s) including azurilcrafts.blogspot.com/, dilipan-orupuratchi.blogspot.com/, karuveli.blogspot.com/.
Has this site hosted malware?
Yes, this site has hosted malicious software over the past 90 days. It infected 49 domain(s), including ushnavayu.blogspot.com/, prabhu-pappu.blogspot.com/, suwadi.org/.
How did this happen?
In some cases, third parties can add malicious code to legitimate sites, which would cause us to show the warning message.
Next steps:
Return to the previous page.
If you are the owner of this web site, you can request a review of your site using Google Webmaster Tools. More information about the review process is available in Google's Webmaster Help Center.
ஐந்தறைப்பெட்டி:
நன்றி நண்பரே.பிளட் டெஸ்ட் பண்ணிட்டேன்.ஒரு வைரஸும் இல்ல. நான் மால்வேர் நெகட்டிவ்.
நன்றி!நன்றி!நன்றி!
அதுக்கு தான் நான் ntamil பக்கம் போகவில்லை .....
நல்ல தகவல் ....
நன்றி.. நன்றி.. நன்றி!
உங்களது பதிவு 5 வோட்டுகள் பெற்று தமிழர்ஸ் முதல் பக்கத்தில் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது...
மேலும் உங்கள் பிளாகில் பதிவு பட்டையை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நன்றி
தமிழர்ஸ்
ரொம்ப நல்லது சுபாங்கன், but கொஞ்சம் வேளைக்கு சொல்லியிருக்க கூடாதா? நம்ம blog அதில போச்சே !!!!! இனியாவது கவனமாக் இருப்போம், போனது www.prapaslbc.blogspot.com
மிகவும் பயனுள்ள தகவல்... நன்றிங்க
நல்ல பதிவு நண்பா ஏற்கனவே தெரிந்து இருந்தால் எனது வலைப்பதிவை காப்பாற்றி இருக்கலாம்...
தகவலுக்கு நன்றி நண்பா...
அவசியமான தகவல். நானும் செக் செய்து கொண்டேன். நன்றி!
Post a Comment