Friday, May 1, 2009

உலகின் முதலாவது இணையத்தளம்



உலகின் முதலாவது இணையத்தளம் தோன்றி நேற்றோடு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி உலகின் மிகப்பெரிய பௌதிக ஆய்வுகூடமான CERN இலேயே இந்த உலகின் முதலாவது இணையப்பக்கம் தோற்றம் பெற்றது.

இதுதான் அந்த இணையப் பக்கம்


இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மார்ச் மாதத்தில் கணினி விற்பனரான Tim Berners-Lee என்பவரது முயற்சியில் இதற்கான முயற்சிகள் ஆரம்பமானது. ஒரு கிறிஸ்மஸ் தினத்தில் அதன் முதற்கட்ட வெற்றியாக ஒரு Web server உடனான முதலாவது தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்தடுத்த வளற்சிகளால் 1993 ஏப்ரல் இறுதியில் உதயமானது உலகின் முதலாவது இணையப்பக்கம். அது இன்னமும் W3C யில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கே போய் அதைப் பார்த்து ஒரு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வாங்களேன்.

டிஸ்கி 1:- இப் பதிவை நேற்றே இடவேண்டும் என்று நினைத்திருந்தாலும் நேரம் கிடைக்காத காரணத்தால்(ஆமா பெரிய கலெக்டர் உத்தியோகம்) இட முடியவில்லை.

டிஸ்கி 2:- கூகில் ஆண்டவரின் புண்ணியத்தில் எனது Adsence கணக்கு அப்ரூவ் ஆகிவிட்டது. ஆனால் அதில் பொதுசேவை விளம்பரங்கள் மட்டுமே தெரிகின்றன. விளம்பரங்கள் தெரியச் செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலினூடு (subankanb@gmail.com) தெரியப்படுத்தி என்னையும் ஒரு சில லட்சங்கள் இல்லாவிட்டாலும் சில ஆயிரங்கள், அட சில நூறுக்களாவது சம்பாதிக்க வையுங்களேன்.

11 comments:

சுபானு on May 1, 2009 at 6:27 PM said...

பயனுள்ள தகவல்.. :)

சுபானு on May 1, 2009 at 6:29 PM said...

எனக்குத் தெரிந்து google adsence இல் தமிழில் எழுதுவதால் அதிகம் சம்பாதிக்க முடியாது.. நீங்களேன் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ ஒன்றினைச் செய்யக்கூடாது..?

Subankan on May 1, 2009 at 6:44 PM said...

//சுபானு said...
எனக்குத் தெரிந்து google adsence இல் தமிழில் எழுதுவதால் அதிகம் சம்பாதிக்க முடியாது.. நீங்களேன் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ ஒன்றினைச் செய்யக்கூடாது..?//

ஆங்கிலத்திலும்
ஒன்று வைத்திருக்கிறேன். நன்றி.

முனைவர் இரா.குணசீலன் on May 1, 2009 at 7:39 PM said...

ஆட்சின் ஆங்கிலத்துக்குத் தான் பொருந்துவதாகவுள்ளது. ஆட்சினால் பயன்பெற்ற தமிழ்ப்பதிவர்கள் பற்றி
இதுவரை கேள்விப்பட்டதில்லை

Subankan on May 1, 2009 at 7:49 PM said...

@ முனைவர்.இரா.குணசீலன்

அது எனக்கும் தெரியும் ஐயா, நான் பணம் சம்பாதிக்கும் நோக்குடனும் பதிவிடத் தொடங்கவில்லை.
கிடைக்கும் வாய்ப்புக்களை தவறவிடுவானேன்?

anthonyraaj said...

அன்பு நண்பரே உங்கள் முயற்சி தமிழ் வளர்ச்சிக்கு நீர் பாயிச்சிவதாகும்.ஆண்டவன் உங்கள் முயற்சிக்கு தக்க பலன் நிச்சயமாக தருவார்.இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு ஆனாலும் ஈடு கட்ட ஆண்டவன் துணை செயவார../விளம்பரங்கள் ஏராளம் வந்து குவியும்.ஏன் என்றால் நிங்கள் நம்பிக்கை தளராத உறுதியான மனிதர்.அச்சம் தவிர் ,அச்சம் தவிர் ..என்ற பாரதியாரின் உறுதியான நெஞ்சம உடையவர் தங்கள் .நம்பிக்கையை பற்றிக்கொண்டு ஓடும் குதிரை தங்கள் வெற்றி தருவது ஆண்டவன் .வாழ்க..பல்லாண்டு வாழ்க .வாழ்த்தும் அன்பன் அந்தோனிராஜ் கடையம்

Sinthu on May 1, 2009 at 10:27 PM said...

Nice post anna..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன்..

Subankan on May 1, 2009 at 11:01 PM said...

@ Sinthu

நன்றி, நன்றி
(பின்னூட்டத்திற்கு ஒன்று, பிறந்தநாள் வாழ்த்துக்கு ஒன்று )

Subankan on May 1, 2009 at 11:02 PM said...

@ anthonyraaj

யாருப்பா அது? புல்லரிக்க வைக்கிறீங்களே, நன்றி.

Subash on May 2, 2009 at 3:31 AM said...

அட, 16 வருஷம் ஆச்சா????
நல்லதொரு பகிர்வு
நன்றிகள்

Suresh on May 2, 2009 at 5:12 PM said...

Very Informative Post

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy