IPLல மற்ற எல்லா ரீமுமே எட்டு ஏழு எண்டு போட்டி போட்டுக்கொண்டு இருக்க நம்ம நைட் ரைடர்ஸ் மட்டும் வெறும் மூன்றோட கடைசியா இருக்கு. இதை வச்சே ஆளாளுக்கு காமெடி பண்ணிட்டிருக்கானுங்க. தாதாவுக்குத்தான் சப்போட் எண்டு சைடு பாரில போட்டவங்க எல்லாம் அவரைத் தாத்தா ஆக்கீட்டாங்க. நாமளும் விடுவானேன்? இதோ பேட்டி ஆரம்பம்.
ஷாருக்???
நான் – சார், எனக்கு போட்டி தர சம்மதிச்சதுக்கு முதல்ல நன்றி, முதலாவது…..
ஷாருக் – ஸ்டாப். அது போட்டி இல்லை, பேட்டி. என்ன நீங்க. எனக்கெல்லாம் இப்ப போட்டி என்ற சொல்லைக் கேட்டாலே ஒரு மாதிரியாக் கிடக்குது
நான் – சாரி சார், ஸ்பெலிங் மிஸ்டக். இதையும் ப்ளாக் எழுதுறதுன்னு நினைச்சிட்டேன்.
ஷாருக் – இட்ஸ் ஓகே, கேளுங்க
நான் – சார், உங்க ரீமோட தோல்விக்கு யார் காரணமென்று நினைக்கிறீங்க?
ஷாருக் – முதல் காரணம் இந்த சியர் கேள்ஸ்தான். எங்க ரீமில எல்லாரும் யங் பாய்ஸ். அவங்க மனசு பாதிக்கிற மாதிரி அவங்க ஆடறதால அவங்க கவனம் சிதறிப் போயிடுது. அதுவும் இந்த கங்குலி இருக்காரே, யார் ஆடறதப் பாத்தாலும் நக்மா மாதிரியே இருக்குன்னு நைட்ல புலம்பிட்டிருக்கார். அவங்களும் இல்லாட்டி நாம விளையாடுற மேச்சை யாருமே பாக்க மாட்டாங்க. அதான் என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.
நான் – உங்க நாலு கேப்டன் ஐடியாவால ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமா இருக்குமா?
ஷாருக் – தெரியல, இருக்கலாம். இப்ப எங்கிட்ட இன்னுமொரு ஐடியா இருக்கு. நாலு ஓனர்ஸ் இருந்தாத்தான் இந்த ரீமை வச்சு தீனி போட முடியும். அப்பறம் கார்க்கி சென்ன மாதிரி நாலு கோச் ஐடியாவையும் யோசிச்சிட்டிருக்கன்.
நான் – நீஙக டீமை விக்கப்போறதா பேசிக்கிட்டாங்களே?
ஷாருக் – சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. நீங்க ஒன்னை முதல்ல நல்லாப் புரிஞ்சுக்கணும். நான் டீமை விக்குறதா இருந்தா அதை வாங்குறதுக்கும் யாராவது இருக்கணுமே. இது நான் நல்லா இருக்கணுமுன்னு நினைக்கிற யாரோ கிளப்பி விடுற வதந்தி.
இப்படி வந்து மாட்டிக்கிட்டமே!
நான் – நீங்க டீமை விட்டுட்டு இந்தியாவுக்கு வந்து பார்ட்டீல ஆட்டம் போட்டதா பேசிக்கிட்டாங்களே?
ஷாருக் – ஆமா, ஆனா அது பார்ட்டிக்காக ஆடல, பார்ட்டீல ரீவீல மேட்ச் பாத்துட்டே இருந்தேன். அப்ப அதிசயமா கங்குலி ஒரு சிக்சர் அடிச்சிட்டார். சியர்கேள்ஸ் கங்குலிதானே எண்டு மேச்சைக் கவனிக்காம இருந்துட்டாங்க. அதான் அங்க நான் ஆடவேண்டியதாப் போச்சு.
சிக்சர்...
நான் – நடிப்பிலயே இருந்திருக்கலாம் என்று எப்பவாவது பீல் பண்ணியிருக்கிறீங்களா?
ஷாருக் – நீங்க நடிப்பையும் கிரிக்கெட்டையும் பிரிச்சுப் பாக்காதீங்க. நட்சத்திரக் கிரிக்கெட்டில ரித்தீஸ் என்று ஒரு அருமையான நடிகனோட விளையாட்டைப் பார்த்தேன். அடுத்த IPLக்கு அவனையும் ஏலத்தில எடுக்கலாமுன்னு இருக்கேன். அப்புறம் கிரிக்கட் ப்ளயர்ஸ் விளம்பரங்கள்ள என்னமாதிரி நடிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை நடிப்பும் கிரிக்கெட்டும் ஒன்றோடோன்று பின்னிப் பிணைந்தது.
நான் – திரும்பவும் கங்குலியை கேப்டனாப் போடுற ஐடியா இருக்கா?
ஷாருக் – கேப்டன் பதவியில தலைக்குமேல வேலை இருக்கும். நான் கங்குலி ப்ரீயா விளையாடணுமுன்னு நினைக்கிறன். இந்த நாலு கேப்டன் ஐடியாவும் அதாலதான். அதோட இந்த பாரின் ப்ளேயர்ஸ் கணக்கெல்லாம் எனக்குப் பிடிக்கல. கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. இந்திய ப்ளயர்ஸ் இலங்கையில இருக்கிறவங்களுக்கு பாரின் ப்ளயர்ஸ்தானே?
இதத்தான் சொல்றாரோ???
நான் – சரி, இலங்கைப்பிரச்சினையைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?
இந்தக் கேள்விக்கப்புறமும் அவர் பதில் சொல்லிட்டு இருப்பாருன்னு நினைக்கிறீங்க?
6 comments:
ஹா ஹா அருமையா கலாச்சிட்ட சுபா
நல்லாருக்கு..
கலக்குங்க..
@ Suresh
நன்றி அண்ணா
@ வழிப்போக்கன்
நன்றி
கலக்கிடீங்க சுபாங்கன்,,,,
நான் டீமை விக்குறதா இருந்தா அதை வாங்குறதுக்கும் யாராவது இருக்கணுமே
ஹா ஹா கலக்குங்க..
Post a Comment